இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 12, 2012

தொப்பை குறைய கொள்ளு சாப்பிடுங்க..


கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.

அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

சளித் தொல்லை வந்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டு மூலையில் படுத்துவிடவேண்டாம். இதற்கு எனக்கு தெரிந்த முறைகளை சொல்கிறேன். அதை பயன்படுத்தி பயன் அடைந்தால் மகிழ்ச்சியே.
1.
மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடசளித்தொல்லை பறந்து போய்விடும்!

2.
அதே போல மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல்எல்லாம் பறந்தே போய்விடும்!

3.
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

4.
நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

5.
கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.

6.
கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7.
தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

8.
மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9.
வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

10.
சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11.
துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

12.
சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

13.
ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்

14.
தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

15.
சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

16.
நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.

கொள்ளு சூப் தயாரிக்கும் முறை

கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது

இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில் கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites