இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 12, 2012

பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.  சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, 
முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வர என்றும் இளமையுடன் வாழலாம். நெல்லிக்காய் தோலின் சுருக்கங்களை குறைத்து இளமையாக தோன்ற வைக்கும். இதில் வைட்டமின் C அதிகம் உள்ளது .கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின் மற்றும் வைட்டமின் பிகாம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன. 

உடல் சோர்வு, அசதியை நெல்லிக்காய் ஜூஸ் உடனடியாக போக்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும். முடி இழப்பை தடுத்து முடியின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் வேர்களை வலுப்படுத்தி முடி வளர உதவுகிறது. நெல்லிக்காய் குரோமியம் கொண்டுள்ளது. 

இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். நெல்லிக்காய் இன்சுலின் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் நீரிழிவு நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. ரத்தத்தில் கொழுப்பின் (cholestrol) அளவை குறைகிறது. நெல்லிக்காய் இதய தசைகளை பலப்படுத்தும். 

ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். நெல்லிக்காய் அண்டிபாக்டீரியா பண்புகளை கொண்டுள்ளதால் நோய்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது உடலின்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடல் உஷ்ணத்தை தணிக்கும். அறுசுவையும் உள்ள கனி நெல்லிக்கனி. தினமும் உணவில் உண்டு வர நாள்பட்ட அனைத்து நோய்களும் கட்டுப்படும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites