அதிகம் போட்டியில்
லாத புதிய தொழில் ஒன்றைச் செய்ய நினைப்பவரா நீங்கள்? அப்படியானால்
இ-வேஸ்ட் பிஸினஸை தாரா ளமாகப் பரிசீலிக்கலாம். கம்ப்யூட்டர், டிவி, வி.சி.ஆர்., ஸ்டீரியோ, ஜெராக்ஸ், பேக்ஸ்
மெஷின்கள் போன்ற சாதனங்கள் பயன்படுத்த முடியாத நிலையை அடைந்தால்
அதைத்தான் இ-வேஸ்ட் என்று சொல்கி றோம். இந்த இ-வேஸ்ட்களை வாங்கி அதை
மறுசுழற்சி செய்யும் பிஸினஸ்தான் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்களில் உள்ள பிரின்டட் சர்க்கியூட் போர்ட்டில்
(பி.சி.பி.) அலுமினியம், தாமிரம், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களினால் கோட்டிங் செய்யப்பட்டிருக்கும்.
இதனை மறுசுழற்சி செய்து
பயன் படுத்துவதன் மூலம் நல்ல லாபம் சம் பாதிக்க முடியும். ஒரு கிராம் தங்கத்தை பூமியிலிருந்து எடுக்க, 10 டன் மண்ணைத் தோண்டவேண்டும். ஆனால் 10 டன் இ-வேஸ்ட் பொருட்களிலிருந்து 100 கிராம் தங்கத்தை மறுசுழற்சி மூலம் பெற முடியும்.
நம்நாட்டைப் பொறுத்த வரை கோட்டிங் செய்யப்பட்டிருக்கும் உலோகங்களைப் பிரித்தெடுக்கும் வசதி
இன்னும் வரவில்லை. அதற்கான இயந்திரம் மட்டுமே 10 கோடி ரூபாய்
ஆகிறது. அதனால் பி.சி.பி-ஐ பிரித்தெடுத்து அப்படியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அங்குள்ள
நிறுவனங்கள் அதிலிருந்து உலோகங்களைத்
தனியாகப் பிரித்தெடுத்துக் கொள்கின்றன. இந்தியாவில் மின்சா தனங்களில் உள்ள பி.சி.பி. தவிர மற்ற பாகங்களில் உள்ள
உலோகங்களைப் பிரித்தெடுத்து
மறுசுழற்சிக்குப் பயன்படுத்துகிறார்கள். உலகளவில் ஒரு நபர் ஓர் ஆண்டுக்கு சுமார் 4 கிலோ இ-வேஸ்ட்களை உருவாக்கு கிறார். இந்தியாவில் 2010-ல் மட்டும் 8 லட்சம் டன் இ-வேஸ்ட் கிடைக்கும் எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது 12 லட்சம் டன்னாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு
சுமார் ஒரு கோடி ரூபாய்.
ஆள்பலம்
இருபது நபர்கள்.
இடம்
2 முதல் 2.5 ஏக்கர் வரை நிலம்.
இயந்திரம்
உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்குப் பயன் படுத்தப்படும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும்.
இதன் விலை கிட்டத்தட்ட ஒரு கோடியை எட்டும்.
வாகனம்
நான்கு சக்கர வாகனங்கள் – இரண்டு.
லாபம்
30-40 சதவிகிதம்.
ப்ளஸ்
அதிகம் போட்டியில்லாத, புதிய தொழில்.
மைனஸ்
அதிக முதலீடு; அனுபவம் பெற முடியாத புதிய தொழில், அரசு கட்டுப்பாடுகள்.
”வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது!”
இ-வேஸ்ட் தொழில்
குறித்து எர்த்சென்ஸ் ரீசைக்கிள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜான் ராபர்ட், விற்பனை
மற்றும் செயல்பாடு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோரிடம் பேசினோம்.
அவர்கள் சொன்னதிலிருந்து…
”வெளிநாடுகளில்
இ-வேஸ்ட்களை வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்வார்கள். அதற்காக அந்த நிறுவனத்துக்கு நாம்தான் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் மக்கள் இ-வேஸ்ட்களை
குப்பைத்தொட்டியிலும் காயலான் கடைகளிலும்
போடுகின்றனர். இது குறித்து மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு வரவில்லை. இ-வேஸ்ட் பொருட்களை ரீசைக்கிள் செய்யும் யூனிட்டை
மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகுந்த
சோதனை செய்து அனுமதி கொடுத்தபின்பே தொடங்கமுடியும். யூனிட் தொடங்கப்படும் இடத்தைச் சுற்றியுள்ள நீர், நிலம், உயிரினங்களுக்கு ஏதாவது ஆபத்து நேருமா என்பதை ஆய்வு
செய்தபிறகே அவர்கள் அனுமதி
கொடுப்பார்கள். இந்த பிஸினஸில் நேரடியாக இறங்கி பெரியளவில் செய்ய முடியாதவர்கள் வீடு, அலுவலகம், கம்பெனிகளில் கிடைக்கும் இ-வேஸ்ட் பொருட்களை வாங்கி,
எங்களைப் போன்ற நிறுவனங்களிடம் விற்கலாம். மொத்தத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் அற்புதமான தொழில் இது.”
2 comments:
e waste collect பண்ணுவது மற்றும் எங்கு விற்பனை வாய்ப்பு உள்ளது என்பது குறித்த ஆலோசணை தேவை..
9047746722
தாங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment