இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, February 15, 2012

இடியாப்ப தொழில் சூடுபிடிப்பு

திருச்சியில் பல குடும்பத்தினர் குடிசைத்தொழிலாக இடியாப்பத் தொழில் செய்து வருகின்றனர். இடியாப்ப தொழிலில் நல்ல வருவாய் கிடைப்பதால், மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு வியாபாரிகள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர். பாரம்பரிய உணவில் இடியாப்பம் மிகவும் ருசியானது. இன்றைய நவீன யுகத்தில் வீடுகளில் இடியாப்பம் செய்வது குறைந்துவிட்டது.
அதை ஓட்டல் உரிமையாளர்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். ஓட்டலில் பெரும்பாலும் இடியாப்பம் செய்வதில்லை. காரணம் இடியாப்பம் செய்ய தனி ஆள் நியமிக்க வேண்டும். அதற்கு அதிக செலவாகும். ஓட்டலுக்கு தேவையான இடியாப்பம் மட்டும் செய்து கொடுக்க ஆட்கள் தேவைப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, துவரங்குறிச்சி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், சென்னையில் தங்கி ஓட்டலுக்குத் தேவையான இடியாப்பம் மட்டும் செய்து கொடுத்து வந்தனர்.
இடியாப்பத்துக்கு தேங்காய்பால் அல்லது குருமா அல்லது பாயா போன்றவற்றை ஓட்டல் நிர்வாகமே தங்களுக்கு தேவை அறிந்து அவர்களே தயாரித்துக் கொண்டனர். இந்த தொழிலில் நல்ல வருமானம் கொட்டத்துவங்கியதை அடுத்து, துவரங்குறிச்சி பகுதியிலிருந்து ஏராளமானோர் சென்னைக்கு படையெடுக்கத் துவங்கினர்.
பின் இடியாப்ப தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதாலும், சென்னையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாகவும், பல குடும்பங்கள் திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கினர். திருச்சி, உறையூர் அருகே நவாப்தோட்டம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர், குடிசைத்தொழிலாக இடியாப்ப தொழில் செய்து வருகின்றனர்.
பச்சரிசி மாவை பிசைந்து, வட்ட வடிவிலான பிளாஸ்டிக் தட்டில் பிழிகின்றனர். பின் ஒரு பெரிய அண்டாவில் தண்ணீர் ஊற்றி அதன் மீது அலுமினியத் தட்டு வைத்து, அதன் மீது வட்ட வடிவிலான மூங்கில் தட்டுகளை அடுக்குகின்றனர். பின்னர் இடியாப்பம் பிழியப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குகின்றனர். 20 நிமிடங்களில் 150 இடியாப்பம் தயாரிக்கின்றனர்.
இதுகுறித்து, நவாப்தோட்டத்தைச் சேர்ந்த இடியாப்ப வியாபாரி வல்லான் கூறியதாவது: சென்னையில் ஒரு பாயிடம் வேலைக்குச் சேர்ந்தேன். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து பத்து ஆண்டாக இடியாப்பம் சுட்டு ஓட்டலுக்கு விற்பனை செய்து வந்தேன். தொழில் போட்டி காரணமாக அங்கிருந்து திருச்சிக்கு வந்துவிட்டேன். திருச்சியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களுக்கு இடியாப்பம் சுட்டு தருகிறேன்.
ஆரம்பத்தில் 60 பைசாவுக்கு ஒரு இடியாப்பம் வழங்கி வந்தோம். தற்போது, 1. 25 ரூபாய்க்கு தருகிறேன். ஓரளவுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. பல வியாபாரிகள் மதுரை, சேலம், கோவை போன்ற நகரங்களுக்கு சென்று இடியாப்பம் சுட்டு வியாபாரம் செய்கின்றனர். எங்களை போன்ற வியாபாரிகளுக்கு அரசு கடன் வழங்கினால் நன்றாக இருக்கும். இவ்வாறு வல்லான் கூறினார்
இடியாப்பம் செய்வதற்கு இடியாப்ப மாவு - 2 கப்,கொதி நீர் - மூனரை கப்(கூட குறைய இருக்கலாம்- மாவின் தரம் பொருத்து),உப்பு -சிறிது,நெய் - 1 டீஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் மாவை எடுக்கவும்,உப்பு,நெய் போடவும்,ஒரு கனமான கரண்டியின் கை கொண்டு கிளறவும்,கொதி நீரை விட்டு கிண்டவும்,கொஞ்சம் சாதா நீரை தெளிக்கவும்,கட்டி பிடிக்காது,மாவு திரண்டு வரும்.சிறிது நேரம் கிண்டிய மாவை மூடி வைக்கவும்.ஒரு கையளவு எடுத்து இடியப்பகுழலில் வைத்து தட்டில் பிழிந்து அவித்து எடுக்கவும்.

ஃபிர்னிக்கு தேவையான பொருட்கள் ;ரவை - 1 சிறிய கப்,சீனி - 2 கப்,பால் அரை லிட்டர் , தண்ணீர் கால் லிட்டர் ,ஏலக்காய் - 5 ,நெய் - 2 டேபிள்ஸ்பூன்,முந்திரிபருப்பு - 10,கிஸ்மிஸ் - 10 .
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ரவை போட்டு 5 நிமிடம் கழித்து அடுப்பில் வைத்து ஏலம் சேர்த்து மிதமான தீயில் அகப்பை கொண்டு கிண்டி அடிபிடிக்காமல் ரவையை வேக வைக்கவும்.

சிறிது நேரத்தில் ரவை வெந்து கெட்டியாகி வரும்.


முந்திரி கிஸ்மிஸ் நெயில் வறுத்து வைக்கவும்.


வெந்த ரவையில் பால் தேவைக்கு சேர்க்கவும்.சீனி சேர்க்கவும்,சீனி சேர்ந்து பிர்னி கொதித்து வரும்.விருப்பப்பட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் கொடி போல் ஊற்றவும்.நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்க்கவும்.கலந்து விடவும்.

வெள்ளை வெளேர்னு சூப்பர் சுவையுள்ள ஃபிர்னி ரெடி.இதனை இடியாப்பத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.சும்மாவே பவுலில் ஸ்பூன் போட்டு சாப்பிட இனிப்பு பிரியர்களுக்கு அமிர்தமாக இருக்கும்

இடியப்பப் பிரியாணி எனக்குப் பிடித்தது ….... உனக்கும் பிடிக்குமா -


சுவை கொடுக்கும் சுப்பர் ஸ்டார்தான்
என்னவென்று சொல்வதுங்கோ …
அவற்றின் ருசியை

இடியாப்ப பிரியாணி

இரண்டு பேருக்கு அளவாக

தேவையான பொருட்கள்
இடியாப்பம் 12
உருளைக் கிழங்கு – 1
கரட் -1
லீக்ஸ் - 1
கோவா (ஊயடியபந)– ¼ துண்டு
வெங்காயம் - 1
கஜீ -10
பிளம்ஸ் சிறிதளவு
நெய் அல்லது பட்டர்- 4 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள், ஏலக்காய் தூள்- சிறிதளவு
உப்பு தேவைக்கு ஏற்ப

செய்முறை

கரட்டை துருவி வைத்துக் கொள்ளுங்கள். கிழங்கு, லீக்ஸ், கோவா, வெங்காயம் ஆகியவற்றை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
இடியாப்பத்தை உதிர்த்து வையுங்கள்.

பாத்திரத்தில் நெய் விட்டு கிழங்கு வதங்கிய பின், வெங்காயம் போட்டு அவிந்த நிறம் வரும் வரை வதக்குங்கள். கஜீ, பிளம்ஸ் போட்டு வறுத்து, கரட், லீக்ஸ், கோவா சேர்த்து 2 நிமிடங்கள் பிரட்டிக் கொள்ளுங்கள்.

மிளகு தூள் ஏலத்தூள் உப்புப் போட்டு உதிர்த்த இடியப்பம் போட்டுக் கிளறி எடுத்து சேரவிங் பிளேட்டில் போட்டு அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

இத்துடன் பட்டாணிக்கறி, சோயாக்கறி, கத்தரிக்காய்ப் பிரட்டல், கிழங்கு மசாலா, அச்சாறு, சலட், கட்லற் அல்லது வடை வைத்துப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
சாப்பாட்டுக்குப் பின் டெசேட்டும் பரிமாறுங்கள்.

குறிப்பு
அசைவப் பிரியர்களுக்கு இடியப்ப பிரியாணியில் பொரித்த இரால் 15, 2 பொரித்த முட்டைகளை துண்டங்களாக வெட்டி கலந்து விடுங்கள்.

இத்துடன் கோழி அல்லது ஆட்டிறைச்சிப் பிரட்டல், மீன் பொரியல், கொண்டு பரிமாறுங்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites