கிராமத்து மக்கள் வேலை தேடுவதையே வேலையாக இருந்த காலம் மாறி சுயமாக தொழில் புரிய வேண்டும் என்ற நிலைக்கு மாறியுள்ளார்கள். ஒரு சிலர் கிராமத்தில் தொழில் தொடங்கினால் இருப்பதையும் இழக்க வேண்டியதுதான் என நினைக்கும் வேலையில் தன்னம்பிக்கையுடன் ஹாலோபிளாக்ஸ் தொழில் தொடங்கி நற்பெயரை பெற்றதுடன் இண்ட்ரீயர், பந்தல் டெக்ரேஷன் போன்ற பல தொழில்களைத் தொடங்கி கிராமத்திலும் தொழிலதிபர் ஆகலாம் என நிரூபித்துள்ளார். நாகைமாவட்டம், இராஜன்கட்டளை என்ற கிராமத்து இளைஞர் திரு.பவுன்சுப்ரமணியன் அவர்கள், இந்தவகையில் அவரை நாம் சந்தித்து பேசியபோது,
கிராமத்தில் தொழில் தொடங்க எப்படி தைரியம் வந்தது? என்றோம்.
தொழில் தொடங்க கிராமம் என்ன? நகரம் என்ன? எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். சம்பாதிக்கலாம், உழைப்பும், நேர்மையும் தரமும் இருந்தால் வெற்றி உறுதி. இந்த வகையில் அப்பா காலம் முதல் தொழில் ஈடுபாடு உண்டு. தரமான ஹலோபிளாக் கற்களை தயாரித்தால் என்ன? என எண்ணி, மிஷின் வாங்கி, நல்ல தரமான மூலப்பொருட்களைக் கொண்டு கற்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் 4 இஞ்ச் 5இஞ்ச் என பல மாடல் ஹாலோபிளாக் உள்ளது. தரமும் உறுதியானால், உறுதியான கட்டடம் கட்ட ஹாலோபிளாக் ஒன்றே போதும். வெளிநாடுகளில் உறுதியான வீடுகள் கட்ட ஹாலோபிளாக்கைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலை இந்தியாவில் பரவியுள்ளது. இப்போது, எங்களது கிராமத்தில் பலவீடுகள் எங்கள் ஹலோபிளாக் மூலம் உருவாகியுள்ளது. அதன் உறுதியைப் பார்த்து தொடர்ந்து ஆர்டர்கள் வருகிறது. இதற்காக தரமான ஜல்லி பவுடர்களையே தேர்வு செய்கிறோம். மேலும் எங்களது நிறுவனத்தில் பந்தல் அமைப்பு, இண்டிரியர் அமைப்பு டிராவல்ஸ் போன்ற பல பணிகள் நடைபெறுகிறது. தொழில் புரிய கிராமமானாலும் நகரமானாலும் உழைப்பும் தரமும் இருந்தால் போதுமே மேலும் நாகை திருவாரூர் மாவட்டங்களில் ஹலோபிளாக் தேவைக்கு அணுகலாம்.” என்கிறார்.
மேலும் விவரம் பெற:
நண்பன் ஹாலோபிளாக்ஸ்
இராஜன்கட்டளை, வேதாரண்யம் tk
நாகைமாவட்டம்
04369240105 மொபைல் : 9788759788.
0 comments:
Post a Comment