நம் நாட்டில் காலி நிலங்கள் அதிகமாக உள்ளது. இந்த இடங்களில் எல்லாம் கருவேல மரங்கள்தான் தற்போது படர்ந்திருக்கிறது. இந்தக் கருவேல மரங்கள் உள்ள இடத்தில் அகர் மரங்களை நட்டு வளர்த்து வந்தால் கைநிறைய சம்பாதித்து விவசாயிகள் பலனடையலாம். பொதுமக்களு பயனடையலாம்.
இந்த வகையில் தமிழகத்தில் அனைத்து இடத்திலும் உள்ள தட்பவெட்ப நிலைக்கேற்ப அகர் மரம் வளர்ப்புப் பண்ணையான குன்னூரைச் சேர்ந்த ஸ்மார்டு பவுண்டேஷனின் திரு. முருகேஷ் அவர்களைச் சந்தித்தோம் அப்போது அவர் கூறியதாவது.
இந்த ஸ்மார்டு பவுண்டேஷன் விவசாயத்திற்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டு இன்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அகர்மரம் பற்றிக் கூறினால், 1.அக்கியுலேரியா (அகர்மரம்) 2. கிரினோப்ஸ் 3.எட்டாச்சிலோன் 4. சோனிஸ்டைல் 5. ஃபெலேரியா. இதில் அக்கிலேரியா கிரினோப்ஸ் வகை வியாபாரத்திற்கு பயனாகிறது. இந்த அக்கிலேரியாவில் 25 வகை சிற்றினம்கூட உள்ளது. கிரினோப்ஸில் பல வகையுண்டு. இதை வெளிநாடுகளான, பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, சைனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பாப்புவா நியு கைனா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் அகர் கட்டைகளை உருவாக்க மரங்களை வளர்க்கும் நாடுகளாகும்.
இதில், பதினாறு நாடுகளில் அகர் கட்டைகள் உருவாகும் மரங்களை வளர்க்கிறார்கள். மற்ற நாடுகளை விட குறிப்பிட்ட ஒரு சில நாடுகளில் மிக அதிக மதிப்பு வாய்ந்த அகர் கட்டைகள் உருவாகும் மரங்களை வளர்க்கிறார்கள். அழிவின் விளிம்பில் உள்ள மர சிற்றினங்களையும் அரிய மரங்களையும் சிமிஜிணிஷிஎன்ற உலக நாடுகளின் வழிகாட்டுதலின்படிதான் வியாபாரம் மேற்கொள்ள முடியும்
அக்கியுலேரியா பல்வேறு இடங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டு சீராக வளரும் மரமாகும். அக்கியுலேரியா காசியானா, அக்கியுலேரியா மலாகன்சிஸ் ஆகிய ரகங்கள் இந்தியச் சூழலுக்கு ஏற்ற ரகங்கள்ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் 0 முதல் 1000 மீட்டர் உள்ள நிலப்பரப்பு அகர்மரம் வளர்வதற்கு ஏற்ற இடமாகும். இதற்கு மேலுள்ள இடத்திலும் அகர்மரம் வளரும். பொதுவாக 15 முதல் 30 மீட்டர் உயரும் வளரும். 2.5 மீட்டர் சுற்றளவு வரை வளரும். அகர்மரம் வளரும்போது நிழல் இருந்தால் நல்லது. நடவின்போது மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், மற்ற பயிர்களின் வசதிக்கு ஏற்பவும் இடைவெளி விட்டு நடவு செய்யலாம்.
பூஞ்சாண தாக்குதல் ஓர் விளக்கம்:
பிரிட்டிஷ் ஆட்சியின்போது அரசின் வருவாயை பெருக்க அஸ்ஸாம் மாநிலத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பே இயற்கையாக வனங்களில் வளர்ந்து காணப்பட்ட அகர் மரத்தில் துளைகள் இட்டு செயற்கையாக பூஞ்சாணத்தை உட்செலுத்தி நறுமணமிக்க அகர் கட்டைகளை உருவாக்கினார்கள்.
அகர் மரத்தில் இயற்கையாக வண்டுகள் பறவைகள் மற்றும் பலவகைகளில் ஏற்படும் காயங்களில் ஊடுருவும் ஒருவித பூஞ்சாண தாக்குதலால் மரத்தின் மையத்தண்டு எண்ணெய் தன்மையுடைய கட்டைகளாக மாறுகின்றன. இதுதான் அகர் உட் எனப்படும் மிக அதிக விலை மதிப்பு கொண்ட கட்டைகளாகும்.
பூஞ்சாணத் தாக்குதல் ஏற்படாத மரங்களில் நறுமணத் தன்மையுள்ள அகர் கட்டைகள் தோன்றாது. பின்னாளில் இதே முறையைக் கையாண்டு அகர் மரம் பயிர் செய்த குறுகிய காலத்தில் துளைகள் இட்டு செயற்கையாக பூஞ்சாணத்தை உட்செலுத்தி நறுமணமிக்க அகர் கட்டைகளை உருவாக்கினார்கள். அகர்மரம் நடவு செய்த ஐந்தாவது வருடத்தில் அதன் மையத்தண்டு வளர ஆரம்பிக்கும். பூஞ்சாணம் செலுத்தப்பட்ட மரமானது. அடுத்த ஓரிரு ஆண்டுகளிலேயே அகர் உட் என்னும் எண்ணெய் பசையுள்ள கட்டைகளை உருவாக்கிவிடும்.
ஆறு, ஏழாவது ஆண்டுகளிலேயே மரத்தில் உருவாக்கியுள்ள கட்டை களின் மகசூல், தரத்தினை பொறுத்து ஒரு மரம் லட்சக்கணக்கில் மதிப்பு வாய்ந்ததாகிறது. விரைவாக அல்லது நமது தேவைக்கேற்ப பலனைப் பெற செயற்கை முறையே சிறந்தது. இயற்கையாக பூஞ்சாண தாக்குதல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பது சிறந்த வியாபார முறையன்று. செயற்கை பூஞ்சாணம் ஸ்மார்ட் பௌண்டேசன், ஃபரஸ்ட் காலேஜ் இணைந்து தயாரிக்கிறது.
போகா, போயா, காரா எனும் மூன்று வகை எண்ணெய்கள் தயாரிக்கப்படுகிறது., இந்த எண்ணெயை அளக்க தோலா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.1 தோலா என்பது 11.60 கிராம் ஆகும். ஒரு லிட்டர் அகர் எண்ணெய் தயாரிக்க 150 கிலோ கட்டைகள் தேவைப்படும். 7 வருட மருத்தில் பூஞ்சாணத்தின் தாக்குதலைப் பொறுத்து 2 முதல் 4 கிலோ அகர் கட்டைகள் கிடைக்கும்.
பொதுப் பயன்கள்:
கிராமப் புறங்களில் பல சிறு தொழிற்சாலைகள் உருவாகும். கிராமப்புறங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாகும். கிராமப்புற விவசாயிகளின் வருமானம் பல மடங்கு பெருகும். ஏற்றுமதி சார்ந்த தொழிலாதலால் நாட்டிற்கு அன்னிய செலாவணி கிடைக்கும். வருவாய் அதிகம் கிடைப்பதால் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு மக்கள் இடம்பெயர்வது தடுக்கப்படும். வருவாய் அதிகம் கிடைப்பதால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாவது தடுக்கப்படும். உலகை வெப்பமயமாதலிலிருந்து காப்பாற்றும்.
விவசாயிகளின் பாதுகாப்பு
மத்திய அரசு அகர் மர வளர்ப்பிற்கென 75% மானியம் வழங்குகிறது. தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம் ஃபாரஸ்ட் காலேஜ் ஆராய்ச்சி நிலையம் அகர் மரம் குறித்த விரிவான ஆய்வை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவுகிறது.
ஸ்மார்டு பௌண்டேசன் விதை முதல் விற்பனை வரை ஒப்பந்தம் செய்து கொள்கிறது. அகர் மரத்திற்கு காப்பீடு செய்யப்படுகிறது.
மிக அதிக வருவாயையும், அரசின் மானியமும் கிடைப்பதால் வங்கிக் கடன் எளிதில் கிடைக்கிறது. இந்தப் பயனுள்ள அகர் மரம் வளர்க்க எங்களது ஸ்மார்டு தொண்டு நிறுவனம் மற்றும் நர்சரி பண்ணை, விதை முதல் விற்பனை வரை அனைத்து உதவிகளையும் செய்து ஒப்பந்த முறையில் உழவர்களுக்கு உதவி வருகிறது என்பதால் நீங்களும் கைநிறைய வருமானம் பெற அகர் மரம் வளர்த்துப் பயன்பெறவும் என்று கூறினார்.
தொடர்புக்கு
Smard Foundation
Bandishola, Coonoor,
The NIlgiri Dist – 600 004.
FaX : 0423 2239540
www.smardfoundation.com
email:murugesh@smardfoundation.com
94420 94420
Thnxs:http://thozhilathibar.com/

0 comments:
Post a Comment