இன்று அனைத்து தொழில் வர்த்தக நிறுவனங்களிலும் கணினியுடன் பிரிண்டர்களும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளன.
அச்சிடப்பட்ட காகிதங்களில் கைகளால் எழுதி ரசீதுகள் வழங்கப்பட்ட காலம் மாறி உடனுக்குடன் கணினி மூலம் கணக்கிட்டு பிரிண்டரில் அச்சிட்டுக் கொடுப்பதாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் எல்லோரும் பயன்படுத்தும் படியாக குறைந்த விலையிலும் பல்வேறு துறையினருக்கும் ஏற்ற வடிவங்களிலும் பிரிண்டர்கள் கிடைப்பதுதான்.
முதன் முதலில் கம்ப்யூட்டருக்கான பிரிண்டர் உருவானது 1938ல். சார்லஸ் கார்ல்சன் என்பவர் இதனை உருவாக்கினார். இதுவே இன்றைய லேசர் பிரிண்டர்களுக்கு முன்னோடி.
அதன்பிறகு 1953இல் வேகமாக அச்சிடும் பிரிண்டரை ரேமிங்டன் ரேண்ட் என்ற நிறுவனம் உருவாக்கியது. 1964-ல் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற போது போட்டி முடிவுகளை அச்சிட்டு வழங்க டாட்மேட்
ரிக்ஸ் (Dotmatrix) வகைப் பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதனை சீக்கோ (இப்போது எப்சன்) நிறுவனம் சந்தைப்படுத்தியது. அதன் பிறகு 1970இல் இம்பேக்ட் பிரிண்டரும், 1971இல் ஜெராக்ஸ் நிறுவனத்தால் மேம்படுத்
தப்பட்ட லேசர் பிரிண்டரும் (Lesar Printer)வெளியிடப்பட்டன.
தற்போது பிரிண்டர்கள் தயாரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பவை ஹாவ்லெட் பெக் கார்டு (hewlett packard), டிவிஎஸ் (TVS), கேனான் (Canan), சாம்சங் (Samsung), எப்சன் (Epson), லெக்ஸ்மார்க் (Lexmark) ஆகிய நிறுவனங்களாகும்.
இன்று தரத்துடனும், வேகத்துடனும் கூடிய பிரிண்டர்கள் வந்துவிட்டன. வண்ணத்தில் அச்சிட, காப்பியர், ஸ்கேனர், ஃபேக்ஸ், மற்றும் தாளின் இருபக்கமும் அச்சிட எனப் பல வசதிகளுடன் பிரிண்டர்கள் கிடைக்கின்றன. எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான கையடக்க பிரிண்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.

"முதல் கணினியை உருவாக்கிய சார்லஸ் பாபேஜ் (Charles Babbage) தான் முதல் பிரிண்டரையும் உருவாக்கியிருக்க வேண்டியவர். அதற்கான தொழில்நுட்பம் அவரிடம் இருந்தும் அதைத் தயாரிப்பதற்கான பணம் இல்லாமல் அந்த முயற்சியை அவர் கைவிட்டு விட்டார்.
150 ஆண்டுகளுக்குப் பிறகு 1991இல் அவரது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் நுட்ப வல்லுனர் குழு ஒன்று அந்தப் பிரிண்டரை வடிவமைத்தது. 2.5 டன் எடையும், 4 ஆயிரம் உதிரி பாகங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட அப்பிரிண்டர் கணக்கீடுகளை கணக்கிட்டு சிறப்பாக அச்சிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு டிப்ரன்ஸ் என்ஜின் 2 (Difference Engine No.2) என பெயர் சூட்டி லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்."1976இல் இங்க் ஜெட்(Ink-Jet) என்ற திரவ மையைக் கொண்டு அச்சிட உதவும் பிரிண்டர்களும் சந்தைக்கு வந்தன. 1977ல் எப்சன் நிறுவனம் டெஸ்க்டாப் பிரிண்டர்களை விற்பனைக்கு கொண்டு வந்தது.
தற்போது பிரிண்டர்கள் தயாரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பவை ஹாவ்லெட் பெக் கார்டு (hewlett packard), டிவிஎஸ் (TVS), கேனான் (Canan), சாம்சங் (Samsung), எப்சன் (Epson), லெக்ஸ்மார்க் (Lexmark) ஆகிய நிறுவனங்களாகும்.
இன்று தரத்துடனும், வேகத்துடனும் கூடிய பிரிண்டர்கள் வந்துவிட்டன. வண்ணத்தில் அச்சிட, காப்பியர், ஸ்கேனர், ஃபேக்ஸ், மற்றும் தாளின் இருபக்கமும் அச்சிட எனப் பல வசதிகளுடன் பிரிண்டர்கள் கிடைக்கின்றன. எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான கையடக்க பிரிண்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.
0 comments:
Post a Comment