பட்டு புடவைகள்,காட்டன் புடவைகள் மற்றும் விலை உயர்ந்த புடவைகளை வீட்டிலேயே சலவை செய்தால் அதன் நிறமோ தரமோ குறைய வாய்ப்புண்டு. எனவே ‘டிரை வாஷ் ‘ எனும் உலர் சலவை செய்து, ரோலர் பாலிஷ் மூலம் புடவைகளை புத்தம் புதியதாக்கிவிடுகிறார்கள். இதனால் புடவைகள் பளபளப்புடனும், மடிப்பு கலையாமலும் இருக்கிறது.
தேவையான முதலீடு:
ரோலர்களை வாங்குவதற்கு அதிகபட்சமாக 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை.
உலர்த்துவதற்கு தேவையான இடவசதி.
லாபம்:
20-25 சதவீதம் வரை.
சாதகமான அம்சங்கள்:
- வீட்டிலேயே குடும்ப தொழிலாக இதை செய்யலாம்.
- பெரிய தொழில்நுட்பங்கள் கிடையாது.
- டிரை வாஷ் நிறுவனங்களே தேடி வந்து வேலை தரும்.
- ஓய்வு நேரத்தில் கூட ஈடுபடலாம்.
- அலைச்சல் இல்லை.
- போட்டி இல்லை.
- மார்கெடிங் செய்ய வேண்டியது இல்லை.
- இதற்குரிய ரோலர்களை ஆர்டர் கொடுத்து தான் வாங்கவேண்டும்.
- மழைக்காலம் என்றால் பாலிஷ் செய்த புடவையை உலர்துவதில் சிரமம் இருக்கும்.
0 comments:
Post a Comment