இது இன்ஸ்டன்ட் உலகம். விரல் நுனியில், ரிமோட்டில் அலுங்காமல் குலுங்காமல் எந்தச் சாதனத்தையும் இயக்கலாம் இன்று. அந்த
வரிசையில் லேட்டஸ்ட்...ஸ்விட்ச் போட்டால் ஒளிரக்கூடிய தீபங்கள் மற்றும் குத்து விளக்குகள். எண்ணெய்
பிசுக்கு போக விளக்கைத் தேய்க்க நூலில் திரி தயாரிக்கவோ, விளக்கேற்றவோ மெனக்கெட வேண்டியதில்லை இன்றைய பெண்கள்.
ஸ்விட்சை தட்டினால், திரி வைத்து,எண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்தது போல ஜெகஜோதியாக மின்னும் விளக்குகள் விற்பனைக்கு வந்து
விட்டன. மொத்தவிலையில் விளக்குகளை வாங்கி, அவற்றில் பல்பும் ஒயரும் பொருத்தி, மின்சாரத்தில் எரியும் வகையில் தயார் செய்து
விற்பனை செய் வதே முழுநேரத்தொழில் சென்னையைச் சேர்ந்த சந்திராவுக்கு. தனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுத்து,தொழில் தொடங்க
ஆலோசனைகளும்சொல்கிறார் அவர்.‘‘சொந்தக்காரங்ககிட்ட கத்துக்கிட்டேன். பித்தளை, ஒயிட் மெட்டல், தேவைப்பட்டா வெள்ளின்னு
எதுல வேணாலும் இந்த விளக்குகளை ரெடி பண்ணலாம். சின்னதா காமாட்சி விளக்கு, தாமரைப்பூ விளக்கு, பஞ்சமுக விளக்கு, 3 அடுக்கு
கொண்டது, 5 அடுக்கு கொண்டதுனு இதுல நிறைய வகை இருக்கு. இந்துக்களுக்கு திரி விளக்கு மாதிரியும், கிறிஸ்தவர்களுக்கு மெழுகுவர்த்தி
எரியற மாதிரியும் அவங்கவங்க தேவைக்கேற்ப பண்ணலாம்’’ என்கிறார் சந்திரா.
தேவையான பொருட்கள் மற்றும் முதலீடு?
‘ ‘மொத்தவிலைக் கடைகள்ல விளக்குகள் வாங்கலாம். ஆரம்பத்துல ஒவ்வொரு மாடல்ல ஒரு விளக்கு வாங்கினா போதும்.
ஒயரிங் செய்ய ஓட்டை போடறதுக்கான மிஷின், ஒயர், ஒட்டறதுக்கான பசை, பல்பு எல்லாம் தேவை. விளக்கோட சேர்த்து முதல்ல 2,500
ரூபாய் முதலீட்டாய் போதும்.’’
விற்பனை வாய்ப்பு மற்றும் லாபம்?
‘‘பாத்திரக்கடைகள், நகைக் கடைகள்ல விற்பனைக்குக் கொடுக்கலாம். நவராத்திரி நேரத்துல வீடுகள்ல நிறைய விற்பனையாகும்.
கல்யாணம், கிரஹப்பிரவேசம்னு எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்க ஏற்றது. அளவைப் பொறுத்து 150 ரூபாய் லேர்ந்து விற்க
லாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சி. ஒரு விளக்கு செய்யறதுக்கான பொருட்களோட சேர்த்து 250 ரூபாய் கட்டணம்.பொருள்கள் இல்லாம பயிற்சிக்கு
மட்டும் 100 ரூபாய் .’’

0 comments:
Post a Comment