மதுரை: தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவரும் குடிசைத் தொழிலான சாக்பீஸ் தயாரிப்பு, நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.
பிரதான மூலப்பொருளான ஜிப்சம் பவுடர் விலை உயர்வு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு, வெளிநாட்டு இறக்குமதி போன்றவற்றால் இந்தத் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சிறியதும், பெரியதுமாக சுமார் 600 சாக்பீஸ் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறுவனத்திலும், அதனதன் அளவுக்கு ஏற்ப குறைந்தபட்சம் 10 முதல் 40 பேர் வரையில் வேலை செய்து வருகின்றனர். தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் இந்த சாக்பீஸ் தயாரிப்புத் தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது.
குடிசைத் தொழிலாக நடத்தப்படும் இந்த சாக்பீஸ் தயாரிப்பில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர். ஜிப்சம் பவுடர் மூட்டைகளைக் கையாளுதல், சாக்பீûஸ அச்சு வார்த்தல் போன்றவற்றில் ஆண்களும், பொட்டலமிடுதல், சேமித்து வைத்தல் போன்ற பணிகளில் பெண்களும் ஈடுபடுகின்றனர்.
கல்விக் கூடங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எழுதுபொருளான சாக்பீஸ் தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் சிறப்பாக நடைபெற்று வந்த இந்தத் தொழில் படிப்படியாக பாதிக்கப்பட்டு, இப்போது ஐந்தாறு ஆண்டுகளாக கடும் நெருக்கடியில் இருப்பதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
பிரதான மூலப் பொருளான ஜிப்சம் பவுடர் ஒரு டன்னுக்கு ரூ. 2,500 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ. 6,500 வரை உயர்ந்துள்ளது. ஜிப்சம் தாதுவானது ஒரு டன்னுக்கு ரூ. 100 ஆக இருந்த நிலையில், இப்போது ரூ. 1,500 முதல் ரூ. 2,000 வரை உயர்ந்துள்ளது.
அண்மைக் காலமாக, பெரிய நிறுவனங்கள் ஜிப்சம் பவுடரை மூலப் பொருளாகக் கொண்ட வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான விதவிதமான பொருள்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அதிகமான விலை கொடுத்து ஜிப்சம் பவுடரை வாங்குவதால், நாளுக்கு நாள் விலையேறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரிய நிறுவனங்கள் தூத்துக்குடி போன்ற இடங்களில் உப்பளங்களில் உற்பத்தியாகும் ஜிப்சம் தாதுவை மொத்தமாக வாங்கி சேமித்து வைத்துக் கொள்வதாலும் விலை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சாக்பீஸ் தயாரிப்புக்கு ஜிப்சம் பவுடரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
ஜிப்சம் பவுடரை தண்ணீரில் கரைத்து, ஐம்பொன் வார்ப்புகளில் ஊற்றுவர். சற்று நேரத்தில் அது சாக்பீஸ் கட்டியாகி விடும். அதை வெளியே எடுத்து வெயிலில் காய வைத்தால் சாக்பீஸ் தயாராகி விடும். வண்ண சாக்பீஸ் தயாரிப்புக்கு, தேவையான வண்ணம் சேர்க்கப்படும். சாக்பீஸôனது, ஐம்பொன் வார்ப்புகளில் ஒட்டாமல் இருப்பதற்காக, அதனுள் மண்ணெண்ணெய் தடவப்படுகிறது.
""கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் சாக்பீஸ் தயாரிப்பு தொழிலுக்கு மானிய விலையில் அரசு மண்ணெண்ணெய் வழங்கி வந்தது. இப்போது வழங்கப்படுவதில்லை. வெளிச்சந்தையிலும் போதிய மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை'' என்றார் அனைத்து சாக்பீஸ் தயாரிப்பாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் ஆர். தாமோதரன்.
இவை ஒருபுறம் என்றால் மறுபுறம் சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து சாக்பீஸ் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு தொழில் பாதித்து வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் சாக்பீஸ் நல்ல தரமாக இருப்பதாலும், "டஸ்ட் ஃப்ரீ' எனக் கூறி விளம்பரம் செய்வதாலும், அவற்றை கொள்முதல் செய்ய கல்வி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. ஜிப்சம் பவுடருடன் மெழுகு, பசை போன்றவற்றை சேர்த்து சாக்பீஸ் தயாரிப்பதால், கரும்பலகையில் எழுதும்போது ஏற்படும் தூசு சற்று குறைவாக இருக்கும். அதை கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் சந்தைப்படுத்தி வருவதால், உள்ளூர் சாக்பீஸ்களுக்கு மவுசு குறைகிறது. இந்த வெளிநாட்டு சாக்பீஸ்களை மும்பை, குஜராத் ஆகிய இடங்களில் உள்ள பெரிய நிறுவனங்கள் இறக்குமதி செய்து, தமிழ்நாட்டில் விற்பனை செய்து வருகின்றன. ஏற்கெனவே நலிவடைந்திருக்கும் இந்த குடிசைத் தொழில் இப்போது இறக்குமதியால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜிப்சம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவை குடிசை தொழிலான சாக்பீஸ் தயாரிப்புக்கு ஒதுக்க வேண்டும். சாக்பீஸ் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கெனவே சலுகை விலையில் வழங்கி வந்த மண்ணெண்ணெயை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே சாக்பீஸ் தயாரிப்பாளர்களின் கோரிக்கை.

0 comments:
Post a Comment