சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் .நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர்.
வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில் பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும்.
தயாரிப்பது எப்படி?
சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும்.
அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.
சந்தை வாய்ப்பு
குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது.
புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.
சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது.
சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.

0 comments:
Post a Comment