. கேரளாவின் சமையல் முறையில், அதிகமாக விறகு பயன்படுத்தப்படுகிறது. பருவமழை காலத்தில், விறகுகள் ஈரமாவதால், அங்கு எரிபொருள் பிரச்னை ஏற்படுவது வழக்கம். அந்நேரத்தில், 'பம்பிங் ஸ்டவ்' பயன்பாடு கேரளாவில் அதிகம். இதற்கான தயாரிப்பு மதுரையில் நடந்துவருகிறது. நெல்பேட்டை பகுதியில் 30க்கும் மேற்பட்ட பம்பிங் ஸ்டவ் தயாரிக்கும் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. ஒரு கிலோ இரும்பு 52 ரூபாய்க்கு வாங்கும் நிலையில், ஒரு ஸ்டவ் தயாரிக்க 1.25 கிலோ இரும்பு தேவைப்படுகிறது. அதற்கு தேவையான பர்னர் மற்றும் மூடிகள் மைசூரிலும், பம்ப் பெங்களூருவில் ஆர்டரின் பெயரில் வாங்கப்படுகிறது. கட்டிங், வெல்டிங், பெயிண்டிங் உள்ளிட்ட எட்டு விதமான வேலைகள் நடக்கிறது. தமிழகத்தில் இதற்கான பிரத்யேக கம்பெனிகள் மதுரையில் தான் உள்ளன. ஈரோடு, கரூர் கம்பெனிகளுக்கு இங்கிருந்தே ஆட்கள் செல்கின்றனர். ஸ்டவ் ஒன்று 210 ரூபாய் வீதம், கேரள வியாபாரிகளுக்கு தரப்படுகிறது. தற்போது சீசன் என்பதால், பம்பிங் ஸ்டவ் உற்பத்தியில் மதுரை தொழிலாளர்கள் பிசியாக உள்ளனர். இத்தொழில் செய்யும் பரமேஸ்வரன் கூறியதாவது: பருவமழை காலத்தில் பம்பிங் ஸ்டவ் பயன்பாடு கேரளாவில் அதிகரிக்கிறது. ஆர்டர் நிறைய வந்துள்ளதால், பணி தீவிரமாக உள்ளது. இரும்பு விலை ஏற்றம் கண்டாலும், தேவைக்கேற்ப உற்பத்தி குறையவில்லை, என்றார்.
0 comments:
Post a Comment