இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, February 9, 2012

தொழில்லில் பணப் பிரச்னையை சமாளிக்க பக்கா வழிகள்

 புதிய தொழில் ஆரம்பிக்க தேவைப்படும் நிதிக்கான வழிகள் குறித்து   பார்க்கலாம்...
காத்திருக்கும் வங்கிகள்!
புதிதாக சிறு மற்றும் குறுந்தொழில் செய்ய விரும்புகி றவர்கள் பணத்திற்கு எங்கே போவது என்று கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், இந்தியாவின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தனிப்பட்ட நிதி நிறுவனங்களும் தொழிற்கடன் தருவதற்கு தயாராகவே இருக்கின்றன.
கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா முழுக்க உள்ள பல்வேறு வங்கிகள் சிறு தொழில்களுக்கு எவ்வளவு கடன் தந்திருக்கிறது என்பதைப் பார்த்தாலே போதும் (பார்க்க பெட்டிச் செய்தி), புதிதாக தொழில் தொடங்க வருகிறவர்களுக்கு கிடைக்கும் ஆதரவை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, நம்பிக்கையோடு புறப்படுங்கள். வெற்றி நிச்சயம்!

நீங்கள் யார்?
தொழிற்கடனைப் பெறுவதற்கு முன், நீங்கள் யார் என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அதாவது, நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலுக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை வைத்து மூன்று விதமாகப் பிரித்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி.
25 லட்ச ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் தொழில்கள் குறுந் தொழில்கள் (மைக்ரோ) எனவும், 25 லட்சத்திலிருந்து 5 கோடி ரூபாய் வரைக்குமான தொழில்களை சிறு தொழில்கள் (ஸ்மால்) எனவும் 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய்க்குள் நடக்கும் தொழில்களை நடுத்தர தொழில்கள் (மீடியம்) என பிரிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புதிதாக தொடங்கப் போகும் தொழில் இந்த மூன்று வகையில் எதில் அடங்கும் என்பதைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கான கடனை எங்கு பெறுவது என்பதைக் கண்டுபிடிப்பதில் பிரச்னை இருக்காது.

வங்கியே சிறந்தது!
சிறு தொழில்களுக்கான கடனை தர வங்கிகள் உள்பட பல்வேறு நிதி நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால், இதில் வங்கிக் கடன்தான் சிறந்தது என்பது அனுபவசாலிகளின் முடிவு. இதற்கு முக்கிய காரணம், வட்டி. பொதுவாக, பொதுத் துறை வங்கிகள் அளிக்கும் தொழிற்கடனுக்கு 13 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வசூலிக்கின்றன. ஆனால், அரசு சாராத தொழில் வங்கிகள் ஓரளவுக்கு தாராளமாகவே கடன் தந்தாலும், அதற்காக வசூலிக்கும் வட்டி விகிதமும் அதிகமே. தனியார் வங்கிகள் 13 முதல் 15% வரை வட்டி விதிக்கின்றன.
இதுவாவது பரவாயில்லை, சில தனியார் நிதி நிறுவனங் களும் சிறு தொழில்களுக்கான கடனைத் தருகின்றன. இந்த கடனுக்கு அந்த நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதத்தைக் கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். அதாவது, ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வட்டி (கிட்டத்தட்ட 60 சதவிகிதம்!) இதைக் கொள்ளை வட்டி என்றுதான் சொல்ல வேண்டும். தப்பித் தவறி இந்த கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டால் குண்டுகட்டாக நம்மை தூக்கிக் கொண்டு போய் கிட்னியை எடுத்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குறித்த காலக் கடன்!
புதிதாக தொழில் தொடங்குபவர்களாக இருக்கட்டும், ஏற்கெனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்களாக இருக்கட்டும், வங்கிகள் அளிக்கும் குறித்த காலக் கடன் என்கிற இந்த டேர்ம் லோனை தாராளமாக வாங்கலாம். மூன்று ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை குறுகிய காலக் கடன் என்றும், ஏழு ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்தும் கடனை நடுத்தர காலக் கடன் எனவும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் திரும்பச் செலுத்தும் கடனை நீண்ட கால கடன் என்றும் சொல்லப் படுகிறது.
இந்த டேர்ம் லோனை பெற உங்களிடம் சொத்து இருக்க வேண்டும். தவிர, இருவர் உங்களுக்கு ஜாமீனும் தரவேண்டும். தொழிலுக்கான முழுப் பணமும் உங்களுக்கு கடனாக கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. உங்களிடமும் 10 முதல் 25% தொகை இருக்க வேண்டும். புதிதாக ஆரம்பிக்கும் தொழிலில் உங்கள் முதலீடு குறிப்பிட்ட அளவு இருந்தால் மட்டுமே தொழில் நடத்துவதில் உங்களுக்கு அக்கறை இருக்கும் என வங்கிகள் நினைப்பதால்தான் அவை இதை எதிர்பார்க்கின்றன.

நடைமுறை மூலதன கடன்!
வங்கி பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் 'வொர்க்கிங் கேபிட்டல்’. இந்த வொர்க்கிங் கேபிட்டல் இருந்தால்தான் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும். 'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ என்று சொல்லப்படும் இந்த நடைமுறை மூலதனக் கடனை வங்கிகளிலிருந்து இரண்டு விதமாகப் பெறலாம். ஒன்று, ஹைப்பாத்திகேஷன் என்று அழைக்கப்படுவது. இந்த முறையில் வங்கி மூலப் பொருளுக்கு கடன் கொடுக்கும். இந்த பொருளை பாதுகாப்பாகவும் சரியாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த முறையில் கடன் கிடைக்கும்.
வங்கி தரும் பொருளுக்கு பாதுகாப்பு இல்லாதபட்சத்தில் வங்கியே அதை ஒரு குடோனில் அடைத்து வைத்து, தேவைப்படுகிறபோது நாம் பணம் கொடுத்தால் வங்கி எடுத்துத் தரும். இதன் மூலம் ஒரே சமயத்தில் நாம் மொத்த மூலப் பொருளுக்கும் பணம் திரட்ட வேண்டியதில்லை.
'கேஷ் கிரெடிட் ஃபெஸிலிட்டி’ லோன் பெற சொத்தை காட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை.
25 லட்ச ரூபாய் வரையிலான வொர்க்கிங் கேபிட்டல் கடனை பெற எந்த வகையான சொத்தையும் வங்கிகள் அடமானமாக கேட்கக்கூடாது என்பது விதி. ஆனால், இந்த விதியை பல வங்கிகள் பின்பற்றுவதில்லை. காரணம், சொத்து ஏதும் பெறாமல் கொடுத்த கடன் திரும்ப வராததே இதற்கு காரணம்.

வென்ச்சர் கேபிட்டல்!
உங்களிடம் பிரமாதமான பிஸினஸ் ஐடியா இருக்கிறதா? அந்த பிஸினஸை எப்படி நடத்தி வெற்றி காண முடியும் என்கிற வழியும் தெரிந்திருக்கிறதா? யெஸ் எனில் உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை செய்யத் தயாராக இருக்கின்றன வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள்.
பொதுவாக, எந்த வகையான தொழில்களிலும் இந்த வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு செய்துவிட மாட்டார்கள். ஓரளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, ஊறுகாய் தயாரிக்கப் போகிறேன் என்றால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு எதுவும் தராது.
ஆனால், பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஊறுகாய் தயாரித்து, அதை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறேன் என்று சொன்னால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் உங்கள் தொழிலில் முதலீடு செய்தாலும் செய்யலாம்.
வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டு களில் பாசிட்டிவ்-ஆன விஷயம், முதலீட்டுக்கு ஒரு வரம்பே இருக்காது. ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை எடுத்த எடுப்பிலேயே போடுவார்கள். இந்த முதலீட்டுக்கு வட்டி எதுவும் தரத் தேவையில்லை என்பது இன்னும் விசேஷம். ஆனால், தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பது கண்டிஷன்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வென்ச்சர் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஐ.எஃப்.சி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட்ஸ், எஸ்.ஐ.டி.பி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் லிமிடெட் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் பெரிய அளவில் புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான தொழில் எனில் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்.
மற்றவர்கள் கொடுக்கும் கடனை வைத்துத்தான் தொழில் நடத்த முடியும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் இதெல்லாம். கையில் பணமிருக்கு. இப்போதைக்கு கடனே தேவை இல்லை! என்று நினைப்பவர்கள் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை! நீங்கள் நேரடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்! பெஸ்ட் ஆஃப் லக்!

இதெல்லாம் இருக்கிறதா?
 தொழிற்கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது இதெல்லாம் உங்களிடம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறார் கேபிட்டல் மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார்.
* புராஜெக்ட் ரிப்போர்ட் கட்டாயம் தேவை!
நீங்கள் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? மூலப் பொருளை எங்கு வாங்குவீர்கள்? உற்பத்தியான பொருளை எங்கே விற்பீர்கள்? என்கிற மாதிரியான கம்ப்ளீட் ரிப்போர்ட்தான் இந்த புராஜெக்ட் ரிப்போர்ட். இந்த ரிப்போர்ட் இல்லாதவர்களிடம் வங்கி அதிகாரிகள் ஒன்றிரண்டு வார்த்தைக்கு மேல் பேச மாட்டார்கள்.
* 20 - 25% முதலீடு தேவை!
நீங்கள் செய்யப் போகும் தொழிலுக்கான முழு முதலீட்டையும் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது. உங்கள் பங்களிப்பாக 20 - 25% முதலீடு கட்டாயம் இருக்க வேண்டும். இது பணமாகவும் இருக்கலாம்; உங்கள் தொழிலுக்குத் தேவையான ஒரு இயந்திரத்தை வாங்கியதாகவும் இருக்கலாம் அல்லது அட்வான்ஸ் தந்திருக்கலாம்; மூலப் பொருளாக வாங்கி வைத்திருக்கலாம்.
* சொத்து, ஜாமீன் தேவை!
வங்கி உங்களுக்கு அளிக்கும் கடனுக்கு ஈடான ஒரு சொத்தையும் ஜாமீனையும் அளிக்க வேண்டியது உங்கள் கடமை. பெரிய அளவில் சொத்தோ, ஜாமீனோ கொடுக்க இயலாதவர்கள் வங்கியிடம் கடன் கேட்காமல் இருப்பதே நல்லது.
* அத்தனையும் அறிந்தவராக இருங்கள்!
நீங்கள் தொடங்கப் போகும் தொழில் பற்றி அனைத்து விஷயங்களையும் அறிந்தவராக இருங்கள். வங்கி உங்களுக்கு கடனுதவி மட்டுமே செய்யும். உங்களுக்கு வரும் பிரச்னைகளை சமாளிக்க வங்கி எந்த விதத்திலும் உதவாது என்பதை மறக்காதீர்கள்.




0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites