இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

அரிசி மாவு சீடை

அரிசி மாவு தயாரிக்கும் விதம்
பச்சை அரிசியை ( அரை கிலோ)சுமார் ஒன்றைரை மணி நேரம் ஊற வைக்கவும்.
தண்ணீரை வடிகட்டி, ஒரு துணியில் உலர்த்தவும். அரிசியில் சிறிது ஈரப்பதம் இருக்கும்போதே machine ல் மாவாக அரைத்து பின்னர் சலிக்கவும்.
(
இது சுமார் 4 கப் மாவு அளவு வரும்)
உளுந்து மாவு தயாரிக்கும் விதம்
ஒரு கப் உளுத்தம் பருப்பை வாணலியில் லேசாக ( அதிகம் சிவக்காமல், இளம் சிவப்பாக )வறுத்து mixie ல் நைஸ் மாவாக அரைத்து பின்னர் சலிக்கவும்.
செய் முறை ( இது ஒரு கப் அளவுக்கு )

1.
தயாரித்து வைத்த அரிசி மாவை வாணலியில், லேசாக ( கை பொறுக்கும் சூட்டில் ) வறுக்கவும்.
2.
ஒரு கப் அரிசிமாவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு, 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை , ஒரு டீ ஸ்பூன் வெள்ளை எள்ளு சேர்த்து கலக்கவும்.
3.
இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் துறுவலை , ஒரு டீ ஸ்பூன் காரப்பொடியுடன், mixieல் அரைத்துக்கொண்டு ஸ்டெப் 2 ல் உள்ளதுடன் சேர்க்கவும்.
4.
தேவையான அளவு தண்ணீர், பெருங்காயம், உப்பு சேர்த்து, கெட்டியான மாவாக பிசையவும்.
5.
பிசைந்த மாவை, தேங்காய் எண்ணை தொட்டு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொண்டு, வாணலியில் மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.

வெல்ல சீடை

1.
மேற்சொன்ன முறையில் தயாரித்த அரிசி மாவை மிகமிக லேசாக வறுக்கவும்.
2.
தேங்காயை சிறு சிறு பற்களாக நறுக்கிக்கொள்ளவும். ( இரண்டு பத்தை )
3.
ஒரு கப் வெல்லத்தை கல் மண் நீக்கி இளம் பாகு ( தக்காளி பழ பாகு )காய்ச்சும்போதே, தேங்காய் பல்லை சேர்த்து விடவும்.
4.
ஒரு கப் அரிசி மாவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு, ஒரு டீ ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்கவும். இதனுடன், பாகை சேர்த்து கலக்கவும்.
5.
ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கெட்டியான மாவாக ( சப்பாத்தி மாவு பதத்தில் )பிசைந்து கொள்ளவும்.
6.
மாவை நெய் தொட்டு, கோலி குண்டு அளவிற்கு உருண்டைகளாக உருட்டி, மிதமான தீயில், பொறித்து எடுக்கவும்.

2 comments:

very nice info... thx a lot...

தாங்கள் வருகைக்கு நன்றி திரு :வள்ளி அவர்கள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites