இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, October 6, 2011

பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

பறங்கிக்காயின் தாயகம், மலேசியா, இந்தியா, இலங்கை, பர்மா உட்பட மலைப்பிரதேசங்களில் நான்காயிரம் அடி உயரம் வரை இது பயிராகிறது.
சூட்டை நீக்கி உடலுக்குக் குளிர்ச்சியையும், அதிக அளவில் உள்ள பித்தத்தைப் போக்கி நன்கு பசியையும் ஏற்படுத்தித் தரும் காய்களுள் பறங்கியும் ஒன்றாகும்.
சிறுநீர் கழிக்க கஷ்டப்படுபவர்களுக்கு இது அருமையான மருந்து.
கண்பார்வைக்குத் தேவையான வைட்டமின் ‘ஏ’ அதிக அளவிலும், பல் எலும்பு வளர்ச்சிக்குப் பயன்படும் வைட்டமின் ‘சி’ ஓரளவும் இக்காயில் உண்டு.
100கிராம் காயில் கிடைக்கும் கலோரி 25 ஆகும். இக்காயில் ஈரப்பதம் 96%, புரதம் 0.4%, கொழுப்பு 0.1%, மாவுச்சத்து 3.2%, தாது உப்புக்கள் 0.3% உள்ளன.
உலகெங்கிலும் பறங்கிகக்காயைப் பதப்படுத்தி, டின்களில் வைத்திருந்து பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளில் ஜாம் செய்வதற்காகவே பறங்கிக்காய் பயிரிடப்படுகிறது. மேலைநாடுகளில் காயாக உண்பவர்கள் குறைவு.
இக்காயைத் தேங்காய் சேர்த்துப் பச்சடியாகச் சமைத்துச் சாப்பிட்டால் விரைவில் பூசி மெழுகினாற்போல் உடலில் சதைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
உடல் பருமனால் உள்ளவர்கள் பறங்கிக்காயை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். முடிந்தால் தவிர்ப்பது நல்லது.
உடலில் புண், சிரங்கு உள்ளவர்கள் புண் ஆறும்வரை பறங்கிக்காயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக நேரம் அடுப்பில் வைக்காமல் எடுத்துப் பயன்படுத்த வேண்டிய காய்கறிகளுள் பறங்கிக்காயும் ஒன்றாகும். பறங்கிக்காயைச் சோடா உப்புச் சேர்க்காமல் சமைக்க வேண்டும்.
தோலில் வறட்டுத் தன்மை உள்ளவர்கள் பறங்கிக்காய்க்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
வைட்டமின் ‘பி’யும், சிறிதளவு பறங்கிக்காயில் உண்டு. இதனால் நரம்புகள் பலம் பெறுகின்றன. இரத்த சோகை, பெரிபெரி போன்ற நோய்களும் முன் கூட்டியே தடுக்கப்படுகின்றன.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites