இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 30, 2011

ஆரோக்கியமான உறவு உடலின் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும்

மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்று பாலுணர்வு. இயற்கையாக தோன்றும் இந்த உணர்வை ஆரோக்கியமானதாக மாற்றுவதில்தான் இருக்கிறது மனிதர்களின் வெற்றி. தம்பதியர்களிடையே ஆரோக்கியமான உறவு மேம்பட இந்த பாலுணர்ச்சியே முக்கிய காரணியாக இருக்கிறது. இதனை சிறப்பாக வெளிப்படுத்த நமது சமையலறையே முக்கிய சாதனமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.
ஒருவரின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, இளமையை தக்க வைப்பதில் தாம்பத்யத்தின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார் ஹார்மோன் மற்றும் இளமையியல் சிறப்பு வல்லுநர் சிசில்லா டிரிகியர். லண்டனின் மருத்துவமனை வைத்துள்ள அவர் 25 ஆண்டுகளாக தனது மருத்துவமனைக்கு வந்த தம்பதியர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியர் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், உடல் வனப்புடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரியவந்ததாக டெய்லி மெயில் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கிய தெர்மா மீட்டர்
பாலுணர்ச்சியும், அது தொடர்பான ஆர்வமுமே நமது உடல் நலத்தை அளக்கும் தெர்மா மீட்டர் என்று டிரிகியர் குறிப்பிட்டுள்ளார்.
பாலுணர்ச்சியை தூண்டுவது என்பது அவர்கள் உட்கொள்ளும் உணவு முறையை சார்ந்ததாக இருந்துள்ளது. சத்தான உணவு உடல் நலத்திற்குத் தேவையான ஹார்மோன்களை சிறப்பாக செயல்பட வைப்பது தெரியவந்துள்ளது. அதன் மூலம் பாலுணர்ச்சியை தூண்டுவதற்கான ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்தது கண்டறியப்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதன் மூலமே தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபட முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தினசரி உறவு என்பது உடற்பயிற்சி செய்வதைப்போல அவசியமானது என்று கூறும் மருத்துவர், இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்கிறார். அதற்கான முக்கியமான மூன்று வழிமுறைகளை அவர் தெரிவித்துள்ளார்.
மூளைக்கு உற்சாகம்
எந்த செயலுமே முதலில் தொடங்குவது மூளையில் இருந்துதான். மனித உறுப்புக்களில் மிகப்பெரிய பாலுணர்ச்சியை தூண்டக்கூடிய ஆர்கன் மூளைதான் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனும், ரசாயனமாற்றமும்தான் பாலுணர்வின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம்தான் உறவின் போது வெளிப்படும் காதல், அளவுகடந்த கற்பனா சக்தியுடன் துணையை கவர மேற்கொள்ளும் சாகசம், அதனால் பெண்கள் அடையும் உச்சநிலை ஆகியவை ஏற்படுகின்றன. இவை எல்லாம் நாம் உண்ணும் உணவில்தான் இருப்பதாக தெரிவிக்கின்றார் மருத்துவர்.
எனவே முதலில் உண்ணும் உணவுமுறையில் அக்கறை கொள்ளவேண்டும். இதன் மூலம் சக்தியானது நரம்புகள் வழியே மூளையை அடைகிறது. சிறப்பாக செயல்பட முடியும் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உறவில் ஈடுபட மூளையானது தூண்டுகிறது.
ஹார்மோன்களின் ஒத்துழைப்பு
பாலுணர்ச்சியை தூண்டுவதில் ஹார்மோன்களின் பங்கு அவசியமானது. அவைதான் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை சீராக வைக்க உதவுகிறது. இதில் மூன்று ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென். டெஸ்ட்டிரோஜென், ஆகிய ஹார்மோன்கள் சிறப்பாக செயல்படுவதை சரிவிகிதமாக வைப்பதில் மீன், இறைச்சி, ஆகியவற்றில் உள்ள நல்ல கொழுப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை ஹார்மோன்களை தூண்டி அவற்றை சீரான முறையில் சுரக்கச்செய்கின்றன. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என்று தெரிவிக்கிறார் டிரிகியர்.
சக்தியின் ரகசியம்
ஆரோக்கியமான உறவு உடலின் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும். அதற்கு ஆரோக்கியமான அவசியமான உணவுகள் உதவுகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். இதன் மூலம் மனித வளர்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன் (Human Growth Hormone (HGH).) சுரப்பு சீராவதோடு பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பினை அதிகரிக்கச்செய்கிறது. தொடர்ச்சியான ஆரோக்கிமான உறவுக்கு புரதச்சத்து நிறைந்த கோழி இறைச்சி, மீன், பன்றி இறைச்சி ஆகியவை உதவுகின்றன என்று கூறுகின்றார் மருத்துவர்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites