இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

கல்யாணமாயிட்டா 'உண்டாகலாம்', குண்டாகக் கூடாது



திருமணத்திற்கு முன்பு ஆண்களும், பெண்களும் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான அனைத்தையும் செய்வார்கள். ஆனால் திருமணம் முடிந்துவிட்டது என்றால் அதை அப்படியே மறந்துவிடுவார்கள். இதில் ஆண்களை விட பெண்கள்தான் ரொம்ப மோசம். கட்டுடலை அப்படியே தளர விட்டு விடுவதில் அவர்கள்தான் நம்பர் ஒன்.

என்னம்மா, இவ்வளவு குண்டாகிட்டே என்று கேட்டால். கல்யாணம் ஆயிடுச்சு அதான் உடம்பு வச்சிருச்சு என்பார்கள். ஆண்களைக் கேட்டாலும் அதே பதில் தான். ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் பெண்கள் தங்களை கவனித்துக் கொள்வதே இல்லை. அது தவறு.

கணவனின் கண்ணுக்கு நீங்கள் என்றைக்குமே அழகாக இருக்க வேண்டாமா? எப்பொழுதும் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அதுக்கெல்லாம் நேரம் எங்கே இருக்கு என்ற நொண்டிச் சாக்கை சொல்லாதீர்கள். நீங்கள் தான் நேரத்தை ஒதுக்கி உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்கள் உடலைப் பராமரிப்பதைப் பார்த்துவிட்டு என்ன பெரிய கத்ரீனா கைப், என் பொண்டாட்டி மாதிரி வருமா என்று உங்கள் கணவர் பெருமையாக சொல்ல வேண்டும்.

ஆண்கள் திருமணம் முடிந்தால் போதும் நன்றாக சாப்பிட்டு தொப்பை போட்டுவிடும். நாளுக்கு நாள் தொப்பை பெரிதாகிக் கொண்டு தான் போகும். நீங்கள் எப்படி உங்கள் மனைவி சிக்கென்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதேபோன்று தானே அவரும் உங்களிடம் எதிர்பார்ப்பார்.

ரித்திக் ரோஷன் மாதிரி 'சிக்ஸ்' பேக் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 'ரைஸ் பேக்' மாதிரி ஆகி விடாமல், உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் குறையுங்கள் என்று தான் சொல்கிறார்கள்.

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருப்பதாலும், உடல் பருமன் அதிகரித்து விடாமல் பார்த்துக் கொண்டாலும் அழகுடன் திகழ முடியும். தேவையில்லாத நோய்களை அண்ட விடாமல் தடுக்கவும் முடியும்.

எனவே, சிக் உடம்போடு திகழ்வது அழகுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் அவசியம். கல்யாணமாகி விட்டதே என்று அலட்சியமாக இருந்து விடாமல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் திகழ முயற்சியுங்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites