தேவையான பொருட்கள்:
- தேவையில்லாத துணிகள் – 10 கலர்கள்
- தென்னங்குச்சி – 10
- பசை
- பச்சை கலர் பசை டேப்
செய்முறை:
- தென்னங்குச்சி நன்றாக கழுவி காயவைத்துக் கொள்ளவும்…
- துணியில் 2″ அகலமும் 40″ நீளமும் அனைத்து கலரிலும் எடுத்துக்கொள்ளவும்
- பின்பு ஒவ்வொரு துணியில் பாதியளவு நீளத்தில் மட்டும் ஒவ்வொரு நூலாக பிரித்துக்கொள்ளவும்.
- அகலம் 1/4″ இருக்கும் வரைக்கும் பிரிக்கவும்…
- இதே போல் அனைத்து கலரிலும் செய்து வைத்துக்கொள்ளவும்.
- பின்பு குச்சியில் பசையை தடவி பிரிக்காத பகுதியை இறுக்கமாக சுற்றிக்கொண்டே வரவும்..
- கடைசி யில் முடிக்கும் போது பசையை நன்கு தடவி ஒட்டிவிடவும்.. மீதம் உள்ள பகுதியை பச்சை பசை டேப் சுற்றி விடவும்…
- அழகான பூ தயார்…
0 comments:
Post a Comment