இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா?

1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம். 

5 comments:

பேப்பர் கப் தொழிலுக்கு ஏதேனும் கடன் வசதி உண்டா அப்படி இருப்பின் அதை பெறுவதற்கான வழிகள் என்ன?

இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்
பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும்

சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்க ஏதும் கடன் கிடைக்குமா
க.சரவணன்

இது சம்பந்தமான பொருள்(விளக்கம்) கோவை மற்றும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் பல நிறுவனம் உள்ளது , இந்த மின்சாரம் விவசாயதிக்கு பயன் படுத்தினால் கடன் வசதி உண்டு

கட்டுமானப் பொருட்கள் கான்கிரிட் கம்பிகள்,சிமெண்ட் விற்பனை செய்வதற்கு தொழில் கடன் மான்யம் இருக்கிறதா?

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites