தொடர்ந்து இவரால் வேகமாக நடக்க இயலாமல் போனது. மெதுவாக அசைந்து அசைந்துதான் நடக்க முடிகின்றது. இவர் மெதுவாக அசைந்து அசைந்து நடக்கின்றமை பொன்குயினின் நடையை ஒத்ததாக உள்ளது. இதனால் நண்பர்கள் இவரை மிஸ்ரர் பென்குயின் என்று செல்லமாக அழைக்கலாயினர்.
இவருக்கு இப்பெயர் ரொம்பவே பிடித்துப் போனது. நடை, உடை, பாவனை ஆகியவற்றில் பென்குயினாகவே மாறலானார். இவர் பென்குயின் வடிவமைப்பிலான ஆடைகளைகடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக உடுக்கின்றார். பென்குயின் மியூசியம் போல காட்சி அளிக்கின்றது இவரது வீடு.
இங்கு பென்குயின்களோடு தொடர்புபட்ட 3500 இற்கும் அதிகமான பொருட்கள் உள்ளன. இவர் பென்குயின்களின் மொழியை அறிந்து வைத்திருக்கின்றார் போல தெரிகின்றது. இவர் Antarctica மிருகக் காட்சிச்சாலைக்கு செல்கின்றார். பென்குயின்களுடன் தங்குகின்றார். இங்கு ஆ..., ஆ.... ஆஆ என்றெல்லாம் ஒலி எழுப்புகின்றார். பென்குயின்கள் இவரைச் சூழந்து நிற்கின்றன. பதிலுக்கு இவருடன் பேசுகின்றன. இம்மிருகக் காட்சிச்சாலையிலேயே இவரின் பிரேதம் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்.
இவரது பிரேதத்துக்கு பென்குயின் வடிவத்திலான ஆடையே அணியப்படுதல் வேண்டும், பென்குயின் வடிவத்திலான பிரேதப் பெட்டிக்குள்ளேயே இவரது பிரேதம் வைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் மிகவும் பிடிவாதமாக உள்ளார். நடுகல் ஒன்றை ஏற்கனவே தயாரித்து உள்ளார். இந்நடுகல் இரு பென்குயின்களின் தோற்றத்தை கொண்டது.
0 comments:
Post a Comment