தாவரவியல் பெயர் : Curcuma Aromatica
...... அங்கு கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா?...........
என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் பேசிய வசனம் இன்னும் நம் மனதில் பதிந்து இருக்க, பல நூறு ஆண்டுகளாக பெண்கள் பயன்படுத்திய அழகு சாதனத்துடன் கூடிய கிருமிநாசினியான மஞ்சள் இன்று பெண்களிடத்தில் தன் மதிப்பை இழந்து மறைந்து வருகின்றது. முக அழகிற்காக பல்வேறு “க்ரீம்” பயன்படுத்தி அழகை இழந்தவர்களும், இழந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதன் பயன் அறிந்துள்ளனர் என்பதற்கு கீழ் கண்ட பாடல் உறுதி செய்யும்.
புண்ணுங் கரப்பானும் போக்கைக் கிருமிகளும்
நன்னுமந் தாக்கினியும் நாசமாம்- வண்ணமலர்த்
தொத்தே றளகமின்னே சுக்கிலமும் புதிமாங்
கத்தூரி மஞ்சளுக்குக் காண். ( அகத்தியர் குண பாடம் )
0 comments:
Post a Comment