மன்னார் கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளபோதும், அது வணிக ரீதியான பெறுமதி கொண்டதா என்பதை உறுதிப்படுத்த மேலும் துளையிடப்பட வேண்டியுள்ளதாக கெய்ன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கண்டியில் நேற்ற நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, மன்னார் கடற்படுக்கையில் எரிவாயு வளம் இருப்பதை கண்டறிந்துள்ளதாக துளையிடும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தமக்கு அறிவித்துள்ளதாக கூறியிருந்தார்.
இது சிறிலங்காவை அபிவிருத்தி செய்வதற்குப் பெரிதும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
CLPL-Dorado-91H/1z என்று பெயரிடப்பட்டுள்ள கிணற்றில் 1354 மீற்றர் ஆழத்தில் 25 மீற்றருக்கு இந்த திரவ எரிவாயுப் படலம் காணப்படுவதாக கெய்ன் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.
ஆனாலும், இங்கு எரிவாயுவை வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்ய முடியுமா என்பதை உறுதி செய்வதற்கு மேலும் துளையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மன்னாருக்கு அப்பால் எண்ணெய் வளம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட கடற்பகுதியில் எட்டுத் துண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஒரு துண்டமே கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு துண்டம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து துண்டங்களுக்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்படவுள்ளன.
இதனிடையே, வணிக ரீதியாக இங்கு எரிவாயு உற்பத்தி சாத்தியமானால், ஏனைய ஐந்து துண்டங்களுக்கும் கேள்விப் பத்திரம் கோரும் போது கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்

0 comments:
Post a Comment