இந்தியா உலகின் மிகவும் விலைகுறைந்த தொடுகைத் திரையுள்ள ஆகாஸ் கையடக்கக் கணனியை 35 டொலரிற்கு வெளியிடுகின்றது.
இந்தக் கையடக்கக் கணனி பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட DataWind நிறுவனத்தினாலும் இந்திய தொழிநுட்ப நிறுவனத்தினாலும் உருவாக்கப்பட்டுள்ளது
இந்தக் கணனி மாணவர்களுக்காகவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் இணைய உலாவி மற்றும் வீடியோ ஒன்றிணைவுக் கலந்துரையாடல் என்பன காணப்படுகின்றது.
இக்கணனியில் 3 மணித்தியால மின்கலப் பாவனையும் 2 USB port களும் உள்ளன. இவை எப்படி வேலைசெய்யும் என்பது கேள்விக்கிடமானதாகவே உள்ளது.
இது இந்தியாயில் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் மாணவர்களால் எண்ணியல் வழிமுறையைப் பெறக்கூடிய நிலையைத் தருமென நம்புகின்றனர் இதன் வெளிய்யீட்டாளர்கள்.
இதன் விலைக்கட்டுப்பாட்டைக் குறைப்பதே தமது இலக்கு என்கின்றனர் இதன் உற்பத்தியாளர்கள்.
டெல்லியில் மனித மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலால் இதன் வெளியீடு இடம்பெற்றது.
இதில் இவர் 500 கணனிகளை மாணவர்களுக்குக் கையளித்துள்ளார். இவற்றை இவர்கள் பரிசோதித்துப்பார்ப்பரெனத் தெரியவருகின்றது.
அரசு இதில் 100,000 கணனிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த சில வருடங்களில் 10 மில்லியன் கையடக்கக் கணனிகளை இது விநியோகிக்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.
இது பணக்காரர்களுக்கு மட்டுமே அல்லாது ஏழைகளால் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என கூறுகின்றார்கள்.
இதன் வர்த்தகப் பயன்பாட்டுக் கையடக்கக் கணனியான UbiSlate என்ற மாதிரியைத் தாம் வெளியிடவுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை 60 டொலர்களுக்குப் பெறலாமென்கின்றனர்.
0 comments:
Post a Comment