டாக்டர். பிரடரிக் கிரண்ட் பாண்டிங் என்ற கனடா நாட்டு மருத்துவர் தன் சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து இன்சுலின் கண்டுபிடித்தார். அவர் பிறந்த தினமான நவம்பர் 14 ஐ உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடித்து நிறைய கண்காட்சிகளும், விளக்கக் கூட்டங்களும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 40 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பதாகவும், 2025 ஆண்டு அது 60 மில்லியனை தொடும் என கூறுகிறார்கள்.
சர்க்கரை நோய் அறிகுறிகள்.அதிக தாகம் (Excessive thirst)
அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent urination)
அதிக பசி (Increased hunger)
எடை குறைதல் (Weight loss)
உடற்சோர்வு (Tiredness)
ஆர்வம், கவனம் குறைதல் (Lack of interest and concentration)
பார்வை குறைபாடுகள் (Blurred vision) போன்றவை.
நோயை குறைப்பதற்கான வழிகள்.உணவுக் கட்டுப்பாடு.
யோகா, உடற்பயிற்சி.
மருந்து.
நோயைக் குறைக்க உதவும் சில தாவரங்கள் இன்சுலின் செடிஇன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது.. இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் அதிகம் உபயோகிக்கின்றனர்.
கள்ளிமுடையான்.கள்ளிமுடையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் மெலிவதுடன் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துகிறது. வருங்காலத்தில் இதற்கு நல்ல மதிப்பு உண்டு. சர்க்கரைக்கொல்லிகசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்பு சுவை தெரிவதில்லை. இலையை காய வைத்து பொடியாக்கி இதனை தினமும் அருந்துகின்றனர். கொடிவகையை சார்ந்தது.
சிறியாநங்கை
கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சிலர் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.
இதனை தவிர்த்து காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாரு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய சர்க்கரை நோயை குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.
முக்கிய செய்தி மேற்கண்ட அனைத்து தாவரங்களையும் நாம் வீடுகளில் வளர்க்கலாம்.
சர்க்கரை நோய் அறிகுறிகள்.அதிக தாகம் (Excessive thirst)
அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Frequent urination)
அதிக பசி (Increased hunger)
எடை குறைதல் (Weight loss)
உடற்சோர்வு (Tiredness)
ஆர்வம், கவனம் குறைதல் (Lack of interest and concentration)
பார்வை குறைபாடுகள் (Blurred vision) போன்றவை.
நோயை குறைப்பதற்கான வழிகள்.உணவுக் கட்டுப்பாடு.
யோகா, உடற்பயிற்சி.
மருந்து.
இந்த நோய் முற்ற கால்களில் புண்கள் (சமயங்களில் காலை எடுக்கவேண்டிவரும்.), கண்நோய், மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.
நோயைக் குறைக்க உதவும் சில தாவரங்கள் இன்சுலின் செடிஇன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது.. இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். கேரளாவில் அதிகம் உபயோகிக்கின்றனர்.
கள்ளிமுடையான்.கள்ளிமுடையானின் மெல்லிய் தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டை தினம் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் மெலிவதுடன் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்துகிறது. வருங்காலத்தில் இதற்கு நல்ல மதிப்பு உண்டு.
சிறியாநங்கை
கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சிலர் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது.
ஸ்டீவியா என்னும் சீனித்துளசி.தென்அமெரிக்காவை தாயகமாக் கொண்ட இனிப்புச் சுவையுடைய இதன் இலைகள் சர்க்கரைக்கு மாற்று. இலையை காய வைத்து பொடியாக்கி டப்பாக்களில் அடைத்து வைத்து சர்க்கரைக்கு பதிலாக இதனை உபயோகிக்கலாம். பூஜ்யம் கலோரி (Zero Calorie) மதிப்புடையது. எனவே இனிப்புடன் அருந்த வேண்டுமெனில் தாராளமாக இதனை உபயோகிக்கலாம். அதிக சூரிய ஒளியை விரும்பும் தாவரம். தமிழகத்தில் நன்கு வளர்கிறது.
இதனை தவிர்த்து காலையில் வெந்தயப் பொடி சாப்பிடுதல், பாகற்காய் சாரு அருந்துதல், வெள்ளரி விதைகளை சாப்பிடுதல், சீந்தில் சர்க்கரை பொடி என நிறைய தாவரங்கள் சார்ந்த எளிய சர்க்கரை நோயை குறைக்க உதவும் வழிமுறைகள் உண்டு.
முக்கிய செய்தி மேற்கண்ட அனைத்து தாவரங்களையும் நாம் வீடுகளில் வளர்க்கலாம்.
நன்றி: முதல் இரண்டு படங்கள் வலைதளம்
0 comments:
Post a Comment