இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, October 8, 2011

சுய தொழில் செய்வதற்கு,படிப்பு தேவை இல்லை.

நானும் சுய தொழில் செய்கின்றேன் அதுவும் தனியாக பெற்றவர்களோ அல்லது மற்றவர்களின் எந்த வித பண உதவியோ அல்லது பின் புலமோ இல்லாது சுய தொழில் செய்கின்றேன் என்ற ஒரு நம்பிக்கையில் சுய தொழில் செய்யலாம் என எத்தனிக்கும் அனைவருக்கும் எனது புரிதலையும் அறிதலையும் பதிகிறேன்.........

சுய தொழில் என்றால் டாடா , பிர்லா, அம்பானி எனும் 'மிகைப்படுத்தல் திரையை" முதலில் கிழித்து எரிந்திட வேண்டும்.

நமது தெருவில் தினந்தோறும் காலையில் பேப்பர் போடும் சிறுவன்,இணைய தொடர்பு நிலையும் வைத்திருக்கும் நண்பர்கள்,ஜெராக்ஸ் கடை,தொலை பேசி நிலையம் வைத்திருக்கும் நண்பர்கள்,சிறிய ஓட்டல் கடை நடத்தும் இளையர்களில் இருந்து அனைவருமே சுய தொழில் அதிபர்கள் தான்.

மிகவும் வருத்தப்படக்கூடிய ஆனால் உண்மையான் விஷயம் என்னவென்றால் இவர்களை எல்லாம் தொழிலதிபர்களாக எண்ண முடிகிறது இல்லை,நம்மில் பலருக்கு,

சுய தொழில் என்றாலே பல லட்சங்களை வங்கியிலிருந்து கடன் பெற்று கொண்டு பின் மிக பெரிய பல தொழில் செய்பவர்கள் மட்டும் தான் என்ற நமது அனைவரின் எண்ணங்களிலும் சிறு மாற்றம் வேண்டும்.

எனது புரிதல்........!!!!
சுய தொழில் செய்வதற்கு,படிப்பு தேவை இல்லை.

நான் இவ்வாறு சொல்வதனால் படிப்பே தேவை இல்லை என்று அர்த்தம் இல்லை,படிப்பு தான் முக்கியம் என்று நினைத்தல் வேண்டாம்.

புத்தகபடிப்பு நல்ல மேலாளர்களை உருவாக்குகிறது
வாழ்க்கை படிப்பு நல்ல முதலாளிகளை உருவாக்குகிறது.


நன்றாக MBA படித்தால் நான் MBA வாக்கும் என்ற தன்முனைப்பே நமக்கு தடையாகும்
ஆனால் படிப்பறிவில்லாது நாம் கேக்கும் பல சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் நம்மை விரைவில் நம்மை, நம்மின் அறியாமையில் இருந்து வெளிக்கொணரும்.

ENTREPRENEURS என்று சொல்லுபவர்கள் பல நேரங்களில் "THINK OUT OF THE BOX" என்று சொல்லக்கூடிய வாழ்வியல் முறையை தனதாக்கிகொண்டவர்கள்

பள்ளிக்கூடங்களில் ஒரே முறையான பயிற்ச்சி அனைவருக்கும் தரப்படுகிறது ஆனால் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான படிப்பினையை தருகிறது.

எனவே படிப்பில் முதலீடு செலுத்துவதை விட புரிதலில் தீர்க்கமாக இருங்கள்
அடுத்து முதலீடு,அதுவும் முழுவதுமாக தேவை இல்லை.

தொழில் என்பது மிக முக்கியமாக, வெறும் முதலீடு மட்டும் இல்லை,

அப்படி பார்த்தால் எத்தைனையோ பேர் கையில் காசு வைத்து கொண்டும் தொழில் செய்யாமல் வெறும் வங்கியில் கிடைக்கும் கொசுறு வட்டி பணத்திற்காக மாதம் முதல் தேதிக்கு காத்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.


சுய தொழில் செய்வதற்கு தேவை காசு மட்டுமே இல்லை,
ஒரு "first generation entrepreneur" = புதியதாக தொழில் தொடங்குபவர்கள் = முதல் தலைமுறை தொழிலதிபர்கள் = எந்த வித தொழில் பின் புலனும் இல்லாதவர்கள், என்பவன் எவ்வாறு சிந்திக்கிறான் அல்லது சிந்திக்க வேண்டும் என்று விளக்குகிறேன்


நம் மீது நமக்கு திடமான நம்பிக்கை, மட்டுமே

நமது கனவை நிஜப்படுத்துவதற்கான கடினமான மன உறுதி,

எந்த விதமான சூழலிலும் நாம் எடுத்துக்கொண்ட முயற்சியில் இருந்து விட்டுக்கொடுத்துவிடாத தன்மை.

மனிதர்களை அவர்களின் உணர்வுகளை புரிதல் மற்றும் அவர்களுக்கும் நமக்கும் உண்டான உறவை வலுப்படுத்தும் நுணுக்கம்.

வாய்ப்புகளை சரியாக கண்டுபிடித்து அதை நமக்கு சார்பாக மாற்றக்கூடிய சாமர்த்தியம்.

பலமாக இருக்கும் நேரத்தில் பலமற்றவனாகவும் பலமற்ற நேரத்தில் பலமுள்ளவனாகவும் காட்டிக்கொள்ளக்கூடிய போர் திறனும்
STREET SMART எனப்படும் எதையும் இலகுவாக அந்த நேரத்தில் அந்த நொடியில் சமாளிக்கக்கூடிய திறமை.......

இது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நெருப்பு....!!!!!

முதலில் சிந்தியுங்கள்.......

உங்களிடம் அந்த ஒரு நெருப்பு இருக்கிறதா..... என்று உணருங்கள்.
அவன் செஞ்சான் இவன் செஞ்சான் என்று இல்லாமல்.நம்ம கிட்ட அந்த பொறி இருக்கா அப்படின்னு பாருங்கள்.ஆங்கிலத்தில் PASSION என்று சொல்லுவார்கள்

***நீங்கள் செய்ய எண்ணும் அந்த தொழிலில் உங்களுக்கு PASSION இருக்கின்றதா ..... என்று உணருங்கள்.

நீங்கள் செய்யப்போகும் அந்த தொழிலை நீங்கள் உங்கள் காதலியை போல் நேசிக்க வேண்டும்,
பிடித்த விளையாட்டை போல மகிழ்ச்சி உடன் செய்ய வேண்டும்.

***உங்களுடைய மூளைக்கு புரிய வையுங்கள்..... இது நாள் வரை நீங்கள் வாழ்ந்திட்ட வாழ்க்கைக்கும் இப்பொழுது,ஒரு தொழில் அதிபராய் நீங்கள் தொடர இருக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கப்போகிறது என்று,

ஒருவரிடம் வேலை செய்யும் பொழுது இருக்கும் ஒரு தெளிவான நிலை,அதாவது மாசமானா சரியாய் ஏழாம் தேதி சம்பளம்,முதல் தேதியில் இருந்து நீங்கள் திட்டமிட்டபடி நடக்கக்கூடிய பல விஷயங்கள், இனி இராது

இனி வாழ்க்கை உங்களுக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு புதிராகவே இருக்கும் (UNCERTAINITY) என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே மூளைக்கு இதை புரிய வையுங்கள்.

தோல்விகளை உங்கள் குருநாதராக கருதிக்கொள்ளுங்கள்.
அந்த குருநாதருக்கு குரு தட்சணையாக உங்கள் வெற்றியை காணிக்கை ஆக்குங்கள்.
தீருபாய் அம்பானியே நமக்கு எடுத்துக்காட்டு அவரது மகன்கள் அனிலோ முகேஷோ அல்ல
ஏனெனில் நாமெல்லாம் முதல் தலைமுறை தொழிலதிபர்கள்...எனவே நாம் நமக்கு உதாரண புருஷனை தீருபாய் அம்பாநியையே எடுக்க வேண்டும்.

அப்படி நாம் அவரை எடுத்துக்காட்டாய் எடுத்து வாழ்ந்ததால் நமது பிள்ளைகள் அனிலாகவோ முகேஷாகவோ பிறக்க வாய்ப்புண்டு....
சுய தொழில் செய்ய ஆர்வமாய் உள்ளவர்களை எத்தனை பெற்றோர் ஊக்கப் படுத்துகிறார்கள்? லாபம், நட்டம் என்று மாறி மாறி வரும். நிலையான வருமானம் வராது. என்று சொல்லி ஆர்வத்திற்கு அணை போடுகிறார்கள்.

மன்னிக்கவும் இவை எல்லாம் உண்மையான நிஜங்கள் என்றாலும் இவற்றை உங்கள் பிருஷ்டத்திற்கு பின்புறம் தூக்கி எரிந்து விட்டு உங்கள் கனவை நோக்கி
உங்களை நீங்களே உந்தி செல்லுங்கள்.

உங்கள் கனவு மீதான உங்கள் காதல்,வெறி,உறுதி,இருந்தால் இந்த உலகமே உங்களிடம் நீங்க விரும்பியதை உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள்.

உங்களுக்கு சாதகமாக இல்லாம பின்னுக்கு தள்ள எத்தனிக்கும் எவராக இருந்தாலும் அவர்களின் அனேக கேள்விகளுக்கு இன்று நீங்கள் பதில் சொல்லாது உங்கள் லட்சியத்தில் வாழுங்கள்.

உங்கள் வெற்றி அவர்களுக்கு நாளை பதில் சொல்லட்டும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites