இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, January 4, 2013

சுயதொழில் துவங்க கடன் கலெக்டர் அழைப்பு

கரூர்: புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் கீழ், சுய தொழில் துவங்க, கடனுதவி மற்றும் மானியம் வழங்கப்படுகிறது என, கரூர் கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்த பட்சமாக, ஐந்து லட்சம் ரூபாயும், அதிகபட்சமாக, ஒரு கோடி ரூபாயும்,நிதியுதவியாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு, 21 வயது முதல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், மகளிர் மற்றும் முன்னார் ராணுவத்தினர்) ஆகியோருக்கு வயது, 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பட்டம், பட்டயம், தொழிற்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட, தொழில் பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் திட்டத்தின் கீழ் உடன் விண்ணப்பிக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் இதர திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற்றவர்கள், இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.
பொருளாதார ரீதியாக, உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தகுதியான தொழில்களாகும். மேலும், சுற்றுச்சூழலை பாதிக்காத மற்றும் எரிசக்தி தொடர்பான தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் சிவப்பு வகை தொழில்களாக வகைப்படுத்தப் பட்டுள்ள தொழில்கள் தகுதியற்றது.
கடன் பெறும் பொதுப்பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதமும், பட்டியல் இனத்தோர், ஐந்து சதவீதம் தங்களது, பங்கீடாக செலுத்த வேண்டும்.தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில், 25 சதவீதம் அல்லது, 25 லட்ச ரூபாயில், எது குறைவாக உள்ளதோ, அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.
கரூர் மாவட்டத்துக்கு மானியத் தொகைக்கான இலக்கு, 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 50 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட தொழில் மையம், 152, ஜவஹர் பிளாசா, கரூர், என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Thnxs:http://tamil.yahoo.com/

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites