நேசத்தையும் அன்பையும் உணர்த்த ஆயிரம் வார்த்தைகளை அடுக்குவதைவிட ஒற்றைச் செயலால் வெளிப்படுத்தலாம். சொற்கள் செய்யாத மாயத்தை அந்த அன்புப் பரிசு செய்துவிடும். அப்படியொரு பரிசு செய்யக் கற்றுத்தருகிறார் சென்னையைச் சேர்ந்த சுபாஷினி. டெக்ஸ்டைல் துறையில் பணிபுரிகிற இவருக்கு ஃபோட்டோகிராபியும் கிராஃப்ட்டும் இரு கண்கள். அதனால்தானோ என்னவோ, ஃபோட்டோ ஃபிரேம் செய்ய கற்றுத் தருகிறார். நண்பர்கள் வட்டத்தில் நடக்கும் சின்ன சின்ன கொண்டாட்டங்களுக்கும் இந்த ஃபோட்டோ ஃபிரேமை பரிசளித்து மகிழலாம்.
தேவையானவை
ஃபோம் போர்டு (foarm board) - 2, சிகப்பு நிற ஸ்டிக்கர் ஷீட், கத்தரிக்கோல், மார்க்கர், ஃபேன்சி ரோப், கெமிக்கல் க்ளே, டபுள் சைடட் ஸ்டிக்கி டேப். ( Double sided sticky tape )
செய்முறை
- சிகப்பு நிற ஸ்டிக்கர் ஷீட்டை ஃபோம் போர்டு மீது ஒட்டவும்(படம் 1).
- அதன் பின்பக்கம் மார்க்கரால் இதய வடிவ டிசைனை வரையவும் (படம் 2).
- கத்தரிக்கோல் அல்லது கட்டர் உதவியுடன் இதய வடிவ டிசைனை கட் செய்து எடுக்கவும்(படம் 3).
- வெட்டிய இரண்டு டிசைன்களில் ஒன்றின் நடுவே மட்டும் போஸ்ட்கார்டு அளவுக்குஒரு செவ்வக பகுதியை வெட்டி எடுக்கவும்(படம் 4).
- இப்போது இரண்டு இதய வடிவ டிசைனிலும் மேற்பகுதியில் பஞ்சிங் மிஷின் கொண்டு இரண்டு துளைகள் இடவும் (படம் 5).
- செவ்வக வடிவம் வெட்டப்பட்ட இதய டிசைனை மேலேயும் மற்றொரு டிசைனை கீழேயும் வைத்து, இரண்டிலும் இருக்கிற துளைகளில் ஃபேன்சி ரோப்பை நுழைத்து கட்டவும் (படம் 6).
- ஃபிரேமில் வைக்கப்போகும் புகைப்படத்தின் பின்பக்கத்தில் டபுள் சைடட் டேப்பை நான்கு முனைகளிலும் ஒட்டவும் (படம் 7).
- புகைப்படத்தை அடியில் இருக்கும் இதய டிசைன் மீது ஒட்டவும் (படம் 8).
- கெமிக்கல் க்ளேவில் சின்ன சின்ன இதய வடிவ டிசைன் செய்யவும் (படம் 9).
- இவற்றை ஃபிரேமின் இருபுறமும் ஒட்டி அலங்கரித்தால் கண்ணைக் கவரும் ஃபோட்டோ ஃபிரேம் தயார் (படம் 10).
- சூர்யா,
படங்கள்: சுபாஷினி.
படங்கள்: சுபாஷினி.
0 comments:
Post a Comment