.jpg)
''பத்தாம் வகுப்புவரை நண்பர்களோடு ஓடி விளையாடிய என்னை, முடமாக்கிய அந்தச் சம்பவத்தை இப்போ நான் நினைக்கிறதே இல்லை''- முகம் கொள்ளா சிரிப்போடுப் பேசுகிறார் வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது இளைஞரான பச்சமுத்து.

''ரொம்ப வருஷமா படுத்த படுக்கையா கிடந்த என்னைப் பார்க்கவந்தவங்க ஆறுதல் சொன்னாங்களே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. ஒன்றரை வருஷம் என்னை ஆஸ்பத்திரியில் வைத்து எப்படியும் குணப்படுத்திடலாம்ங்கிற நம்பிக்கையில் அம்மாவும் அப்பாவும் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. ஆனா, என்னால் ஒரு அடிகூட நடக்க முடியலை. கடைசியில் வேறு வழி இல்லாம, வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க. வீட்டு வாசலில் உட்கார்ந்து வெளியில வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். தினமும் என்னுடன் படிச்ச பசங்க பள்ளிக்கூடம் போறதையும் விளையாடுறதையும் பார்க்கும்போது மனசு ரணமாகும். அதனாலேயே திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறதையே நிறுத்திட்டேன்.
நான் கைகளை ஊன்றிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்தாலும்

கால்களில் உணர்ச்சி இருக்காது. அதுக்காக மணிக்கணக்கில் வெயிலில் உட்கார்ந்திருப்பேன். கால்களைக் கிள்ளிக் கிள்ளிப் பார்ப்பேன். ஒரு கட்டத்தில் என் கால்களில் கொஞ்சம் உணர்ச்சிகள் தெரிஞ்சப்ப, மெள்ள குச்சிகளைப் பிடித்துக்கொண்டு நடக்க முயற்சி செஞ்சேன். பேலன்ஸ் கிடைக்காமல் அடிக்கடி கீழே விழுந்தேன். ஒரு முறை கீழே விழுந்த எனக்குக் கையில் அடிபட்டதால் குச்சிகளையும் பிடிக்க முடியவில்லை. ஆனாலும், நம்பிக்கையைவிடலை. எதையாவதுப் பிடிச்சிக்கிட்டு என்னால் நடக்க முடியும்கிற அளவுக்கு முன்னேற்றம் வந்தப்ப, டைலரிங் கத்துக்க ஆரம்பித்தேன். முதலில் ரொம்ப நேரம் நாற்காலியில் உட்கார முடியாது. இருந்தாலும் பிடிவாதமாக டைலரிங் கத்துகிட்டேன். அதன்பிறகு தையல் மெஷின் வாங்க காசு இல்லை. என்ன செய்றதுனு தெரியாம தவிச்சப்ப, இந்தியத் தொழுநோய் அறக்கட்டளை மையத்தின் தொடர்பு கிடைச்சது. அவங்க உதவியோட ஸ்க்ரீன் பிரின்டிங் கத்துக்கிட்டேன். அவர்களுடைய வழிகாட்டுதல்படி, கடைகளுக்குப் பை தயாரிச்சு, அதில் ஸ்க்ரீன் பிரின்டிங் செஞ்சு கொடுக்கும் தொழில் தொடங்கினேன். எனக்கு இரண்டு மெஷின் வாங்கிக் கொடுத்தோடு, கடைக்கு அட்வான்ஸ் கொடுத்தும் உதவி செஞ்சாங்க.


- சி.ஆனந்தகுமார்
படங்கள்: எம்.ராமசாமி
.jpg)
2 comments:
great sir appadiya engalaiyum joint pannunga sir
தாங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment