அடிக்கும் வெயிலை வீணாக்காமல், ஊறுகாய் தயாரித்து வைத்துக் கொண்டால், வருடம் முழுவதும் உபயோகிக்கலாம். சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் அற்புதமாக ஊறுகாய்களை தயாரித்து விடலாம்.
- ஊறுகாய்க்கு முதல் எதிரி ஈரம்தான். எனவே பாட்டில், கத்தி, பாத்திரம், காய்கறி, உங்கள் கைகள் உட்பட எல்லாமே உலர்வாக இருக்க வேண்டும்.
- ஊறுகாய்க்கு கழுவித் துடைத்து உலர்த்த வேண்டிய பொருட்களை கொஞ்சம் தாமதம் ஆனாலும் சரி என்று நிழலில் தான் உலர்த்த வேண்டும்.
- ஊறுகாய் போடுவதற்கு பொடி உப்பை விட, கல் உப்புதான் சிறந்தது. கல் உப்பை மிக்ஸியில் பொடித்து பயன்படுத்தலாம்.
- புளியும், மிளகாயும் புதியதாக பளிச் நிறத்தில் இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். சீக்கிரம் கருத்துப் போகாது.
- ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பையை மட்டும் உபயோகிக்க வேண்டும்.
-தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிப்பது சிறந்தது. ஊறுகாயை பாட்டிலில் ஊற்றிய பின், மேலே ஒரு இஞ்ச் அளவுக்கு எண்ணெய் நின்றால், ஊறுகாய் ஒரு வருடமானாலும் கெடாது.
- பாட்டில் (அ) ஜாடியில் முட்ட முட்ட ஊறுகாயை நிரப்பக் கூடாது. ஒரு இஞ்ச் அளவு வெற்றிடம் இருக்க வேண்டும்.
- எலுமிச்சை ஊறுகாய் போடும்போது, மெல்லிய தோல் உள்ள பழங்களைத் தேர்ந்தெடுக்கவும். அதில் தான் சாறு அதிகமாக இருக்கும்.
- பூண்டு ஊறுகாய் தயாரிக்கும்போது, சிறிதளவு பூண்டை விழுதாக அரைத்துக் சேர்த்தால், நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
- ஆவக்காய்க்கு மாங்காய் புதியதாக இருந்தால், நன்றாக வரும்.
- ஜெய்னம்பு, கீழக்கரை
0 comments:
Post a Comment