நமக்கு பச்சைக்கிளிகளைத் தெரிந்திருக்கும்.. பஞ்சவர்ண கிளிகளையும் அறிந்திருப்போம். சிலருக்கு வெள்ளைக்கிளிகள்கூட அறிமுகம் ஆகியிருக்கலாம். ஆனால் நீலம், சிவப்பு என கற்பனைக்கு எட்டாத நிறங்களில்கூட கிளிகள் இருக்கும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த கிராஃப்ட் டீச்சர் இந்திராகாந்தி. ஊசி, நூல், காட்டன் துணியோடு கொஞ்சம் கற்பனை வளமும் இருந்தால் போதும்.. பல வண்ண கிளிகள் நம் தோழிகளின் வீடுகளில் பறக்கும் என்று உத்திரவாதம் தருகிறார் இவர்.
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
பல வண்ண காட்டன் துணிகள் & அரை மீட்டர், ரெக்ரான் பஞ்சு & தேவைக்கு, ஊசி, நூல், கத்தரிக்கோல், ஃபேப்ரிக் க்ளோ, சமிக்கி, வெள்ளை ஸ்டோன், சில்வர் அல்லது தங்கநிற ரிப்பன், பல வண்ண மணிகள்.
செய்முறை:
அலங்காரப் பொருட்களை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை.. அதனால் அவற்றைச் செய்வதில் தயக்கம் இருக்கிறது என்பதுதான் பெரும்பாலான தோழிகளின் வாய்ஸ். ஆனால் எதையுமே வித்தியாசம் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். பொதுவான மாவிலைத் தோரணமோ, மணிகளோ, பூச்சரமோதான் வாசலை அலங்கரிக்கும். நாம் வித்தியாசமாக பல வண்ண கிளிகளைப் பறக்கவிட்டால் நிச்சயம் வரவேற்பு இருக்கும். வீட்டில் இருக்கும் காட்டன் துணிகளை வைத்தே இந்தக் கிளிகளைத் தைத்துவிடலாம் என்பதால் இதற்கான தயாரிப்பு செலவு குறைவு. ஆனால் இரண்டு மடங்கு விலைவைத்து விற்பனை செய்தாலும் போட்டிபோட்டுக் கொண்டு வாங்குவார்கள். சரி.. இப்போது கிளிகள் கொஞ்சும் வாசல் தோரணத்தை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
0 comments:
Post a Comment