''கோழி இறகில் பறவைகளை வரைந்தால் எப்படி இருக்கும்? இதுதான் எனக்குள் உருவான முதல் பொறி. கிளி, கொக்கு என்று பறவைகளை இறகில் வரையத் தொடங்கியவன் பிறகு, கோயில் கோபுரம், தேர் என்று பல உருவங்களை வரையத் தொடங்கினேன்'' என்கிறார் வேலூரைச் சேர்ந்த இமயவரம்பன்.
கிருஷ்ணசாமி முதலியார் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருக்கும் இவர் கைக்குக் கிடைத்த பொருட்களில் விதவிதமாக, வித்தியாசமாக ஓவியங்கள் வரைகிறார்.
''சாக்பீஸில் ராஜ்யசபா, டெல்லி கேட், குதுப்மினார் உருவங்களைச் செதுக்கினேன். அரிசியில் ஏழு அதிசயங்களை வரைந்தேன். போஸ்ட் கார்டில் 1,330 திருக்குறள்களை எழுதினேன். உடைந்த பட்டாணியில் தேசத் தலைவர்களின் உருவங்களை வரைவது, சோப்பில் மானை வேட்டையாடும் புலி, திருவள்ளுவர் தொடங்கி தற்போது வந்துள்ள கோச்சடையான் ஃபஸ்ட் லுக் வரை அனைத்தையும் வரைந்து உள்ளேன். சின்னச் சின்னப் பொருட்களைக்கொண்டு ஓவியத்தில் வித்தியாசமாக சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியம்'' என்கிறார்.
''அவருக்கு கின்னஸில் இடம்பெறணும்னு ரொம்ப ஆசை. எங்களுக்குப் பெரிசா வசதி இல்லை. ஆனா, அவரோட ஓவிய ஆர்வமும் அர்ப்பணிப்பும்தான் எங்களுக்கு இருக்கிற சொத்து'' என்கிறார் இமயவரம்பனின் மனைவி மலர்விழி!
- கே.ஏ.சசிகுமார்,
படங்கள்: கா.முரளி
0 comments:
Post a Comment