இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, November 23, 2011

இறந்த பின்னும் உயிர்பிழைக்கும் நீர் கரடி

கடலின் அடியிலும், பனி உறைந்து கிடக்கும் இடங்களிலும் உயிர் வாழுகின்ற மிக,மிகச் சிறிய ஜீவன்தான் நீர்க்கரடி. இதனை நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது, கரடி போன்ற தோற்றம் தெரிவதால், இது நீர்க்கரடி என்றழைக்கப்படுகிறது.

இந்த அரிய வகை கடல் வாழ் உயிரினத்தின் பல்வேறு சிறப்புகள் குறித்து, ராமநாதபுரத்தில் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளையில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் தீபக் சாமுவேல் கூறியது:  ""இந்த விநோத உயிரினம் "டார்புகிடோ' என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. வெறும் கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும். மில்லி மீட்டர் அளவை விட மிகவும் சிறிய இந்த ஜீவன், இமயமலையின் மேற்பகுதியிலும், பனி உறைந்திருக்கும் இடத்திலும், கடலின் அடிப்பகுதியிலும் காணப்படுகின்றது. மற்ற விலங்கினங்களால் வாழ முடியாத இடத்தில் கூட, இவை உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதும் இதன் சிறப்பு ஆகும்.  இதனுடைய கால்கள், கண்கள், வாய் ஆகியன மிக,மிகச் சிறியதாக இருக்கும். இதனுடைய சதை, மிகச்சரியான இயக்கத்தன்மை பெற்றுள்ளதால், பெரிய விலங்கினங்களைப் போன்றே நகர்ந்து செல்ல முடிகிறது.  மிக அதிகமான குளிரிலும், அளவுக்கு அதிகமான கொதிநிலை இருக்கும் சூழ்நிலைகளிலும் கூட, இவற்றால் வாழ முடிகின்றது. இவை மனிதர்களால் தாங்கக்கூடிய கதீர்வீச்சு அளவில் இருந்து 1000 மடங்குக்கு அதிகமான கதிர்வீச்சை தாங்கிக் கொள்ளும் அபூர்வ சக்தி பெற்றவை.  இவை கடலில் ஆழமான இடத்திலும், காற்றோட்டமே இல்லாத வெற்றிடத்திலும் உயிர் வாழும் சிறப்புடையன. அதிக குளிர் அல்லது அதிக வெப்பம், இவை இரண்டிலும் சாதாரண சூழ்நிலையில் இருந்து அளவுக்கு அதிகமான நிலையை அடையும் சூழ்நிலை வந்தால் அவை இறந்து விடும். ஆனால், இறந்த அந்த உயிரினம் நல்ல சூழ்நிலை வரும் பொழுது உயிர் பெற்று விடும் வியப்புக்குரிய சிறப்பும் உடையது'' என்றார். 
மேலும்   ருஷ்ய மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வகன்களால் மேற்கொள்ளப்பட்ட FOTON -M3 மிஷனின் போது இவ்வுயிரினங்களில் சில பூமியின் குறுகிய வட்டப்பாதையில் (LOW  EARTH ORBIT ) வெற்று விண்வெளியில் 10 நாட்களுக்கு விடப்பட்டன. மீண்டும் அவற்றை பூமிக்குக் கொண்டுவந்து ஆய்வு செய்ததில் அவற்றில் பெரும்பாலும் உயிருடன் இருந்ததையும், அவை சாதாரணமாக முட்டைகள் இடுவதையும், முட்டையிலிருந்து வந்த உயிர்கள் சாதாரணமாக இருந்ததையும் அறிய முடிந்தது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites