இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது

தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். தேனீக்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும்.

 தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீக்கள் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல், மகசூல் உற்பத்தியை அதிகரிக்கலாம். தென்னந்தோப்புகளில், ஆறு அடிக்கு ஒரு பெட்டி வீதம் தேனீ பெட்டிகளை வைத்து வளர்க்கலாம். ஒரு தேனீ பெட்டியில் ஒரு ராணி தேனீ, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும்.தேனீக்கள், இந்திய தேனீ, மலைத்தேனீ, கொம்பு தேனீ, அடுக்கு தேனீ மற்றும் கொசு தேனீ என பல்வேறு வகைகளாக வளர்க்கப்படுகின்றன. ஒரு பெட்டியில், 750 மி.லி., முதல் ஆயிரத்து 250 மி.லி., வரை தேன் சேகரிக்கப்படுகிறது.தேனீ பெட்டிகள் தோட்டக்கலைத்துறையின் மூலமாக அரசு மானியத்துடன் கிடைக்கும். அனைத்து தரப்பு விவசாயிகளும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். இதன்மூலம் நல்ல லாபம் பெறலாம்.
வேப்ப மரப்பூவிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது. வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது. நச்சுக் கலக்காத இயற்க்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று. எனவே தேனீ வளர்ப்புக் கலையை நாம் கற்றுக்கொண்டால் மறைமுகமாக இயற்க்கை அன்னையை பாதுகாத்துக்கொள்கிறோம். எனவே துணிந்து தேனி வளர்ப்பு தொழிலைக் கற்றுக்கொண்டு உங்கள் பணத்தை அதில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்காக உழைக்க தேனீக்கள் தயாராக இருக்கின்றது.
உற்பத்தி முறை
தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில் வளர்க்கலாம்.
தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்

கூடு : இது, ஒரு நீளமான சாதாரண பெட்டியாகும். இதன் மேல் வாட்டில், பல அடுக்குகளை கொண்டுள்ளது. தோராயமாக 100 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 25 செ.மீ உயரத்தை உடையது. இந்த பெட்டியின் மொத்தம் 2 செ.மீ ஆகும். தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடைய ஓட்டைகளை கொண்டுள்ளது. மேல் அடுக்குகள் அடர்ந்த தேன் கூட்டை அமைப்பதற்கு தேவையான மொத்தத்தை பெற்று இருக்க வேண்டும். சுமார் 1.5 செ.மீ மொத்தம் இதற்கு போதுமானது. தேனீக்கள் தேன் கூட்டை கட்ட ஏதுவாக, அடுக்குகளுக்கிடையேயான இடைவேளி 3.3 செ.மீ இருத்தல் நல்லது.

புகைப்பான்இது தேனீ வளர்ப்பில்இரண்டாவது முக்கிய உபகரணம் ஆகும். இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம். இதனை தேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.

துணி : நாம் வேலை செய்யும் பொழுது, நம் கண்கள் மற்றும் மூக்குகளை பாதுகாக்க உதவும்.

கத்தி : மேல் அடுக்குகளை தனிப்படுத்துவதற்கும் தேன் கூடுகளை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

இறக்கை : தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறபடுத்துவதற்கு

இராணி தேனீ பிரிப்பான்
தீப்பெட்டி

தேன்கூடுகளை நிறுவும் முறை
·         தேன் வளர்க்கும் இடமானது, நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும், மேலும் நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.
·         சூரிய ஒளியிலிந்து பாதுகாப்பு மிக அவசியமானதாகும். ஏனெனில் அப்பொழுதுதான், மிதமான வெப்பத்தை கொடுக்க இயலும்.
·         தேன் கூட்டிற்குள் எறும்பு ஏறுவதை தடுக்க தேன் கூட்டின் கால்கள் தண்ணீருள்ள சிறு பாத்திரத்தில் நனையுமாறு இருத்தல் வேண்டும்.
·         வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை, கிழக்கு திசை நோக்கி அமையுமாறு தேன் கூட்டை அமைக்க வேண்டும்.
·         தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள், ஏனைய விலங்குகள் , பரபரப்பான வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும்.

தேனீ காலனிகளை அமைக்கும் முறை
·         தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களை மாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்ய வேண்டும்.
·         இதற்கு முன்பு, பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும். முடிந்தால், இராணீ  தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனைய தேனீக்களை கவர்ந்து இழுக்கும்.
·         சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்து தேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாக கூட்டினை கட்ட இயலும்.

காலனி நிர்வாகம்
·         தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில், வாரம் ஓரு முறை அதிகாலை வேளையில், பெட்டிகளை கண்காணிப்பது அவசியம்.
·         பெட்டியினை, கூரை, உற்பத்தி அறை, தளம் என்ற முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
·         வலிமையான ராணீ தேனீ, உற்பத்தி மேம்பாடு, தேன் மற்றும் மகரந்த சேகரிப்பு, ராணீ தேனீயின் அறை, தேனீக்களின் வலிமை, மற்றும் ஆண் தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க  தேனீக்களின் காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.
·         கீழே உள்ள, தேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதா, என்று சோதிக்க வேண்டும்.
மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழு, பட்டு வலைகளை நீக்க வேண்டும்.
மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும்.

மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டு, பிரேம் மற்றும் தரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.


தேன்குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம்.
·         தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றி, இளம் வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும்
·         தேவைப்பட்டால் தடுப்பு போர்டுகளை பயன்படுத்தவும்
·         ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும்
·         ஒரு காலனிக்கு, 200 கிராம் என்ற விதத்தில் சர்க்கரை கரைசல் (1:1) இந்திய தேனீக்களுக்கு வாரம் ஒரு முறை அளிக்கவும்
·         எல்லா காலனிகளுக்கும், ஒரே சமயத்தில் அளிப்பதன் மூலம் திருட்டை தவிர்க்கலாம்.

தேன் நிறைய கிடைக்கும் காலங்களில் நிர்வாகம்
·         இக்காலத்திற்கு முன்னரே, காலனிகளை தகுந்த வலிமையுடன் வைத்து இருக்க வேண்டும்
·         தேன் கூடு அமைக்கத் தேவைப்படும் முதல் அடிப்படை தகடு  மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைகளிடையே  தகுந்த இடைவெளி அளிக்க வேண்டும்
·         இளம் தேனீக்கள் இருக்கும் அறையிலேயே ராணி தேனீ இருக்குமாறு, தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு  மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைக்கிடையே இராணி தேனீ பிரிப்பான் தாளை இடவும்
·         காலனி வாரம் ஒரு முறை சோதித்து, தேன் அதிகமுள்ள பிரேம்களை தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டின் பக்கவாட்டிற்கு, எடுத்து செல்ல வேண்டும். எந்த ஒரு பிரேமில், 3\4 பாகம் தேன், 1\4 பாகம் மூடப்பட்ட அறைகள், இருக்கிறதோ அதனை உற்பத்தி அறையிலிருந்து வெளியே எடுத்துவிட்டு அந்த இடங்களில் காலியான பிரேம்களை இட வேண்டும்
எந்த ஒரு கூடுகள் முழுவதுமாக மூடப்பட்டு அல்லது 2\3 மூடப்பட்டு இருக்கிறதோ, அவைகளை தேன் எடுப்பதற்கு எடுத்து கொள்ளலாம்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites