இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, November 29, 2011

ஒரு ஆண் எப்படிப்பட்டவர் என்பதை, பார்த்த உடனே ஒரு பெண்ணால் கண்டு பிடித்து விட முடியுமா

கூர்மையாக உற்றுநோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என்பதை கணித்து விடலாம்’ என்கிறார்கள், சில கில்லாடி பெண்கள்.
- `அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது? உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?’ என்று கேட்பவர்கள் ஏராளம்.
- `நான்கு வருடங்கள் காதலித்தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்து போனேனே’ என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.
புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்துபடியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக அவளால் அறியப்பட்ட இளைஞன் மார்டனாக, பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலத்தை தவழவிட்டபடி காணப்படுவது தான். நாலு மாத நட்பில் அந்தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார்கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?’ என்று கேட்டுப் பாருங்கள்.
பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடையிருக்காது. டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கி விடுகிறாள்.
நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாக கணிக்க முடியும்?
ஆனால் இன்றைய பெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.
இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் பெண்கள் அப்படியே அவனை `கட்’ செய்துவிடுகிறார்கள்.
மாதக்கணக்கில் பழகியே ஆண்களின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites