இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

போட்டோ ஸ்டுடியோ தொழிலில் கால்பதிக்கலாம்

செல்போன் கேமரா, வீட்டுக்கு வீடு கேமரா என இருந்தாலும், சிறந்த போட்டோக்கள் எடுக்க ஸ்டுடியோக்களைதான் மக்கள் நாடுகின்றனர். புகைப்பட கலை நுணுக்கமானது என்றாலும், பழகுவது எளிது. போட்டோ ஸ்டுடியோ வைத்தால் நன்கு சம் பாதிக்கலாம். அந்த காலங்களில்  டிஜிட்டல் கேமராக்கள் இல்லை. பிலிமில் படம் எடுத்து பிராசஸ் செய்ய வேண்டும். எடுத்த படம் நன்றாக வந்துள்ளதா என்பது பிராசஸ் செய்த பிறகுதான் தெரியும்.  படம் நன்றாக வராவிட்டால் திரும்ப படத்தை எடுக்க முடியாது. இதனால் எடுக்கும்போதே அதிக கவனத்துடன் எடுக்க வேண்டும். 
பிலிம் பிராசஸ் செய்யும்போதும் கவனத்துடன் செயல்பட வேண்டும். சிறப்பாக பிராசஸ் செய்தபோதிலும்  எடுத்தபோது உள்ள தரத்தை பின்னர் அதிகரிக்க முடியாது. பிராசஸ் முடிந்து படம் கையில் கிடைப்பதற்கு 2, 3 நாட்கள் ஆகி விடும்.  இப்போது  அப்படி இல்லை. ஆப்டிக்கல் லென்ஸ், மெகா பிக்ஸல், ஆட்டோமேடிக் மோடு உள்ள டிஜிட்டல் கேமராக்கள் வந்து விட்டன. படம் எடுக்கும்போதே டிஸ்பிளேயில் படம் தெரிகிறது. உரிய பட்டன்களை தட்டி கேமராவை தயார் செய்து கிளிக் செய்தால் படம் நன்றாக வருகிறது.

தேவையான அளவுக்கு வெளிச்சத்தை குறைக்கவோ, கூட்டவோ கம்ப்யூட்டரில் கலர் கரெக்ஷன் செய்து 100 சதவீத திருப்தியுடன் படங்களை கொண்டு வந்துவிடலாம். முன்பு போல் இல்லாமல் வீட்டில் நடைபெறும் சிறு விழாக்களை கூட, தங்கள் சொந்த கேமராவிலேயே பலர் படம் எடுத்து கொள்கிறார்கள். இருந்தாலும் போட்டோ ஸ்டுடியோவுக்கும் கிராக்கி இருக்கிறது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க, திருமணம் போன்ற முக்கிய விழாக்களில் போட்டோ எடுக்க  ஸ்டுடியோவை தான் நாடுகின்றனர்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் வீடியோ எடுப்பது அதிகரித்தாலும், போட்டோ எடுத்துக் கொள்ளவும்  மக்கள் தவறுவதில்லை. கொஞ்சம் பயிற்சியும் ஆர்வமும் இருந்தால் யார்  வேண்டுமானாலும் ஸ்டுடியோ துவங்கலாம். குறித்த நேரத்தில் டெலிவரி, குறைந்த கட்டணம், தரமான கார்டில் போட்டோக்கள்  கொடுத்தால், வாடிக்கையாளர்களின் குடும்ப போட்டோகிராபராக மாறலாம். அதன் மூலம் தொழிலை விரிவு படுத்தலாம்.

தொழில் துவங்குபவர்கள் கையடக்க டிஜிட்டல் கேமராவை கொண்டு தொழில் துவங்கலாம். புதிய கேமரா 5 ஆண்டுக்கு ரிப்பேர் செலவு வராது. புது கம்ப்யூட்டர் வாங்கினால் 3 ஆண்டுகளுக்கு சர்வீஸ் செலவு வராது. பழைய கேமராவோ, புது கேமராவோ சில நேரங்களில் மெமரி கார்டில் வைரஸ் தாக்கினால் அதை சரிசெய்ய ரூ.1500 வரை செலவாகும். தொழில் வளர்ச்சி பெற்றவுடன் ஸ்டுடியோவுக்கென்று எஸ்எல்ஆர் கேமராக்கள் உள்ளன. விலை கூடுதலாக இருந்தாலும் (ரூ.50 ஆயிரம் வரை), போட்டோக்கள் சிறப்பாக இருக்கும்.

கட்டமைப்பு!

10க்கு 20 அடி நீள, அகலமுள்ள அறை இருந்தால் போதும். அதில் பாதி ஸ்டுடியோ, கால்பாகம் மேக்கப் அறை, கால் பாகம் அலுவலக அறை அமைக்க ஒதுக்க வேண்டும். இன்டீரியர் டெக்கரேஷன் செலவு ரூ.10 ஆயிரம் ஆகும். அறை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம்.

முதலீடு!

ஸ்டுடியோ அறையில் பேக்கிரவுண்ட் ஸ்கிரீன்(ரூ.200), ஸ்டூல் 1 (ரூ.125), பேபி சேர் 1 (ரூ.125), அம்ப்ரல்லா லைட் 800 வாட்ஸ் 2 (ரூ.16 ஆயிரம்), கேமரா குறைந்தபட்சம் 5 எக்ஸ் ஆப்டிகல் லென்ஸ், 16 மெகா பிக்ஸல் திறனுள்ள கேமரா 1 (ரூ.12 ஆயிரம்.) மேக்கப் ரூம் ஆளுயர கண்ணாடி 1 (ரூ.1000), போட்டோ கலர் கரெக்ஷன் செய்ய கம்ப்யூட்டர் 1 (ரூ.25 ஆயிரம்), பிரின்ட் எடுக்க பக்கெட் பிரின்டர் 1 (ரூ.8 ஆயிரம்.). டேபிள் 1 (ரூ.4 ஆயிரம்.), சேர் 4 (ரூ.1,200), போட்டோ டிஸ்ப்ளே போர்டு (தெர்மோகோலில் வெல்வெட் துணி மூடி பிரேம் செய்தது) 3 (ரூ.2,250), ஸ்டுடியோ பெயர் பலகை 1 (ரூ.3 ஆயிரம்). கட்டிங் கருவி (ரூ.1,100), மொத்த முதலீடு ரூ.1.04 லட்சம்.

நிர்வாக செலவு!

வாடகை ரூ.2 ஆயிரம், மின்சார செலவு ரூ.500, 900 போட்டோ கார்டு அடங்கிய, பிரின்டர் கேட்ரிஜ் 6க்கு ரூ.7,800. அழகு சாதன பொருட்கள் ரூ.200, கேமரா, கம்ப்யூட்டர் சர்வீஸ் ரூ.100, ஆல்பம் 5 ரூ.1000, இதர செலவுகள் ரூ.1000, மொத்த செலவு ரூ.12,600.

மாத வருவாய்

ஸ்டுடியோவில் சராசரியாக தினமும் 10 பேருக்கு பாஸ்போர்ட் படம் எடுத்தால் மாதம் 250 பேர் ஆகிறது. நபருக்கு குறைந்தபட்சம் ரூ.50 வீதம் ரூ.12,500. வெளியே நடைபெறும் விழாக்கள் சராசரியாக 5 ஆர்டர் வருவதாக வைத்து கொண்டால் குறைந்தபட்சம் ஒரு ஆர்டருக்கு 70 படங்களாவது எடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஆர்டருக்கு ரூ.3400 வீதம், 5 ஆர்டருக்கு ரூ.17 ஆயிரம் கட்டணம். மொத்த வருவாய் ரூ.29,500. செலவு போக லாபம் ரூ.16,900. இதை உழைப்புக் கூலியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் கூடக்கூட ஆர்டர்கள் பெருகும். கூடுதலாக ஒரு கேமரா வாங்கி, போட்டோ எடுக்க சம்பளத்துக்கு ஊழியர் நியமித்தால் வருவாய் பெருகும். போட்டோவோடு வீடியோவும் எடுப்பதற்கேற்ப கேமராக்கள் உள்ளன (ரூ.25 ஆயிரம் போதும்). இதை வாங்கிக் கொண்டால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து வருவாயை பெருக்கலாம்.

பள்ளி சேர்க்கை, தேர்வு, வங்கி கணக்கு என எல்லாவற்றுக்கும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவை.எனவே நாள் தவறாமல் புகைப்படம் எடுக்க யாராவது வந்து கொண்டு இருப்பார்கள். திருமண நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் காதுகுத்து, சீர் என்று அனைத்திற்கும் போட்டோ எடுக்கும் வழக்கம் உள்ளதால் தொழிலில் தொய்வு இருக்காது.

போட்டோ எடுப்பது எப்படி?

கையிலேயே டிஜிட்டல் கேமராவை பிடித்து படம் எடுக்கலாம். ஸ்டாண்ட் தேவை இல்லை. போட்டோ எடுக்கும்போது லைட்டிங் முக்கியம். ஸ்டுடியோவில் படம் எடுக்க அம்ப்ரல்லா லைட்டிங் போட்டு, அதன் வெளிச்சத்தில் கேமராவை கிளிக் செய்தால் போதும். வெளியே என்றால் அறைக்குள் அல்லது இரவு நேரங்களில் எடுக்கும்போது லைட்டிங் பற்றாக்குறையை ஈடுகட்ட பிளாஷ் உபயோகிப்பது, பகலில் அறைக்கு வெளியே என்றால் மேகமூட்டம், சூரிய வெளிச்சம் ஆகிய இயற்கை ஒளிக்கேற்ப மோடு அட்ஜஸ்ட் செய்து கேமராவை கையாள்வது, குளோஸ் அப் மற்றும் லாங்ஷாட்டுக்கு ஏற்ப ஜூம் உபயோகிப்பது ஆகியவை அடிப்படை விஷயங்கள். அனுபவத்தில் கற்றுக்கொள்ள ஒரு வாரம் போதும்.

கேமராவில் எடுத்த படங்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து, அந்த படங்களை கம்ப்யூட்டர் மூலம் கலர் கரெக்ஷன் போட வேண்டும். இது படங்களை தெளிவாக்கும். இதையும் ஒரு வாரத்தில் கற்கலாம். கம்ப்யூட்டரில் கலர் கரெக்ஷன் செய்த பிறகு படங்களை பிரின்ட் செய்ய வேண்டும். ஒரு கார்டில் 8 பாஸ்போர்ட் படங்கள் வரை பிரின்ட் செய்யலாம். பிரின்டாகி வரும் கார்டில் உள்ள படங்களை பாஸ்போர்ட், ஸ்டாம்ப் சைஸ், 2பி ஆகிய சைஸ்களுக்கேற்ப கட்டிங் கருவி மூலம் வெட்டினால் போட்டோ ரெடி. போட்டோ எடுத்து 10 நிமிடத்தில் படம் கொடுக்கலாம். வெளியே சென்று எடுக்கப்பட்ட 70 படங்களை 2 மணி நேரத்தில் பிரின்ட் செய்து கொடுக்கலாம்.

2 comments:

TANK...U..SAR...NNALLA.. ALOSANAI

தாங்கள் வருகைக்கு நன்றி ,

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites