இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, November 15, 2011

தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு்ப்பதால், குடும்பத்தை இழக்கும் இன்றைய தலைமுறை



வாழ்க்கைக்கு பணம் தேவைதான் என்றாலும் பணத்திலேயே அல்லது தொழில் ரீதியான பணியிலேயே குறியாக இருந்தால் அவர்களின் குடும்ப, சமூக வாழ்க்கை ஆட்டம் காணலாம்.ஒருவர் உழைக்கக்கூடிய பருவத்தில் குடும்ப வாழ்க்கைக்காக அல்லது வாழ்க்கைக்கா அதிகம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது குறித்து வாதப்பிரதிவாதங்கள் உள்ளன.
“குறிப்பிட்ட வயதிலேயே உழைக்க முடியும். அதனால் உழைக்கும் பருவத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்” என சிலர் கூறுகின்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பினர் வேலையைவிட குடும்ப சமூக வாழ்க்கை முக்கியம் என்கின்றனர். தமது கருத்தை வலுப்படுத்துவதற்கு அவர்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் சில பின்வருமாறு:-
* வேலையென்பது ஒருபோதும் முடிவுறும் செயன்முறை அல்ல. உங்களால் எப்போதுமே உங்களது வேலைகளை செய்து முடிக்க முடியாது.
* உங்கள் வாடிக்கையாளரின் நலன் என்பது உங்கள் குடும்பத்தின் நலன்களைவிட முக்கியமானதல்ல.
* நீங்கள் வாழ்க்கையில் தோல்வியை தழுவும் போது கைகொடுக்கும் உங்களுக்கு கைகொடுக்கப்போவது உங்களது முதலாளியோ தொழிலாளியோ அல்ல. ஆனால், குடும்பத்தினரும் நண்பர்களும் உதவுவார்கள்.
* வாழ்க்கை என்பது அலுவலகத்திற்கு தினம் வருவதும், வீட்டிற்கு செல்வதும் நித்திரை கொள்வதும் அல்ல. ஒரு வாழ்க்கையில் இதைவிட அதிகமான விடயங்கள் உள்ளன. சமூகமயமாகுவதற்கு, கேளிக்கை பொழுது போக்குகளில் ஈடுபடுவதற்கு, உடற்பயிற்சிக்கு, ஓய்வுக்கு என உங்களுக்கு நேரம் வேண்டும். உங்கள் வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றிக்கொள்ளாதீர்கள்.
* ஒரு நபர் கண்விழித்து இரவு முழுதும் வேலை செய்பவராக இருந்தால் அவர் கடுமையாக உழைப்பவரென்று அர்த்தமில்லை. அவர் தனது வேலையை குறிப்பிட்ட நேர வரையறையில் திட்டமிட்டு சரியாக நிர்வகித்துக்கொள்ள தெரியவில்லை என்று அர்த்தம். அவர் சொந்த மற்றும் சமூக வாழ்க்கை என்று எதுவுமில்லாத தோல்வியடைந்த ஒருவரென்று அர்த்தம்.
* நீங்கள் கடுமையாக படித்ததும் வாழ்க்கையில் போராடியதும் இயந்திரமயமான அர்த்தமற்ற ஒரு வாழ்க்கைக்காக அல்ல.
பணத்திற்காக குடும்பத்தினை இழப்பதா? இல்லை தொழிலே குடும்பம் என எண்ணுகின்றீர்களா? நல்ல முடிவை நீங்களே தீர்மானியுங்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites