![]() இந்த மலர் ஏன் இரவில் பூக்கின்றதென்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இந்தப் பூ பப்புவா நியூகினி அருகிலுள்ள நியூ பிரிட்டன் என்ற தீவில் டச்சு ஆய்வாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது. ![]() பூக்கள் இரவில் மலர்வது இல்லையெனினும் ஒரு ஓக்கிட் வகைப் பூ இவ்வாறு மலர்வது அதிசயம் என்றே கூறப்படுகிறது. இரவில் மலரும் பூக்களில் புகழ்பெற்றதாக இரவில் மலரும் நாகதாளிப் பூ உள்ளது. ![]() வருடத்தில் ஒருமுறை பூக்கும் இதன் அளவு ஓர் உணவுத்தட்டின் அளவில் காணப்படும். இது வெளவால்களையும் ஈர்க்கும் தன்மைகொண்டது. ஆனால் இந்த ஓக்கிட்டினால் எது ஈர்க்கப்படும் என்பது தெரியவில்லை என்றும் இதனால் இரவில் திரியும் பூச்சிகள் ஈர்க்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ![]() |
0 comments:
Post a Comment