இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, December 13, 2012

ஃபேன்ஸி பெல்ட்


��யூனிஃபார்முக்கு மட்டும்தான் பெல்ட் போடணுமா? ஸ்கர்ட், ஜீன்ஸுக்கும் போடலாம்.. அதுவும் கண்ணைப் பறிக்கிற ரெயின்போ கலர்களில் ஃபேன்ஸி பெல்ட் போட்டால், அதன் மதிப்பே தனிதான்!�� & பளிச்சென்று ஆரம்பிக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா. இவரது கைவண்ணத்தில் மிளிரும் ஃபேன்ஸி பெல்ட்டுகளுக்கு அவரது ஏரியாவில் ஏக வரவேற்பு. கிராஃப்ட் அயிட்டங்கள் செய்வதில் கைதேர்ந்த இவர், நம் தோழிகளுக்கும் அந்த வித்தையைக் கற்றுத் தருகிறார்.

��ஃபேன்ஸி பெல்ட் செய்வதற்கு பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தலைக்கு பின்னல் போடத் தெரிந்தால் போதும். அதே கான்செப்ட்தான் இதற்கும். இந்த பெல்ட் செய்ய மேக்ரமே திரெட் மற்றும் ஃபேன்ஸி மணிகள் வேண்டும். இவை ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்.

உங்களுக்குப் பிடித்த கலரில் திரெட் வாங்கி அதை யாருக்கு பெல்ட் செய்யப்போகிறீர்களோ அவரது இடுப்பு அளவை விட நாலு இஞ்ச் அதிகம் விட்டு வெட்டவும். இதே அளவில் 7 துண்டுகள் வெட்டி, அவற்றை ஒன்றாக வைத்து ஒரு நுனியில் முடிச்சு போடவும் (படம் 1). இப்போது முதலில் இருக்கும் நூலுக்கு அடியில் இரண்டாவது நூலை விடவும் (படம் 2). மூன்றாவது நூலை இரண்டாவது நூலுக்கு மேலே விடவும் (படம் 3). இதேபோல எல்லா நூலையும் ஒன்று மேலே, ஒன்று கீழே என மாற்றி மாற்றிப் பின்னவும் (படம் 4). ஒரு வரிசை முடிந்ததும், கடைசியாக அடியில் வரும் நூலை தனியாகப் பிடித்துக்கொண்டு (படம் 5), மறுபடியும் பழையபடி பின்ன வேண்டும். முதல் வரிசையில் மேலே போன நூல், அடுத்த வரிசையில் கீழே போகும். கீழே போன நூலை மேலே வைத்துப் பின்ன வேண்டும் (படங்கள் 7, 8).  முன்பு போலவே கடைசி நூலை விட்டுவிட்டு பின்னலைத் தொடர வேண்டும் (படம் 9). ஐந்து வரிசை பின்னி முடித்ததும் மணிகளைக் கோர்க்க வேண்டும் (படம் 10). ஒரு நூலில் கோர்த்துவிட்டு நடுவில் ஒரு நூலை விட்டு அடுத்த நூலில் மணியைக் கோர்த்துப் பின்ன வேண்டும் (படம் 11). அப்போதுதான் பார்க்க அழகாக இருக்கும். இதேபோல மொத்த நீளத்துக்கும் இடைவெளிவிட்டு மணிகளைக் கோர்த்துப் பின்னினால் ஃபேன்ஸி பெல்ட் உருவாகிவிடும்.

மேக்ரமே திரெட் அரை கிலோ 90 முதல் நூறு ரூபாய்க்குள் கிடைக்கும். அரை கிலோவில் ஏழு பெல்ட்டுகள் வரை செய்யலாம். ஒரு பெல்ட்டை குறைந்தது 150 ரூபாய்க்கு விற்கலாம்.   வேலைப்பாட்டைப் பொருத்து விலையைக் கூட்டலாம்.��

- சூர்யா,
படங்கள்: கமல்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites