இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, December 13, 2012

நாயை வளர்க்கும் தாய்



சொரி பிடித்த நாயை எங்காவது ரோட்டில் பார்த்தால், நாம் செய்யும் முதல் வேலை, அந்த இடத்தை விட்டு நாயை விரட்டுவது; அல்லது நாமே அந்த இடத்தை விட்டு விலகுவது. சிலர் அதைப் பார்த்து அதிகபட்சம், �அய்யோ பாவம்!� என்று பரிதாபப்படுவார்கள். ப்ளூ கிராஸ் அமைப்புக்கு போன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நூற்றுக்கு ஐந்து பேருக்குத்தான் வரும். ஆனால், அந்த நாய்களுக்கு சோறு போட்டுப் பராமரிப்பது பற்றி யாராவது யோசித்திருப்போமா?

நாய்களைப் பராமரிப்பதைத் தன் முழு நேர வேலையாகவே செய்கிறார் சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த இல்லதரசி கலைச் செல்வி. இப்படிப் பாசத்துடன் தெரு நாய்களை வளர்க்கும் கலைச்செல்வியைத் �தோழி�க்காகச் சந்தித்தபோது, மிகவும் பரபரப்பாக நாய்களுக்கு சிக்கன் குழம்பு, சாதம் என அமர்க்களமான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். பரபரப்பான தன்னுடைய வேலைக்கு இடையே நம்மிடம் பேசினார்...

��சென்னையில மனுஷனுக்கு வீடு கிடைக்கிறதே பெரிய விஷயம். கிடைச்சாலும் ஆயிரத்தெட்டு கன்டிஷன் போட்டுதான் வீடே கொடுக்குறாங்க. இந்த ஏரியாவுல நாங்க வீடு தேடுறது யாருக்காவது தெரிஞ்சாலே, அவங்க சொல்ற ஒரே பதில், �வீடு இல்லை�ங்கிறதுதான். எங்கள் வீட்டுலே மூணு நாய்களை வளர்க்குறோம். ஒரு நாயை மட்டும்தான் வளர்க்கலாம்னு வாங்கினோம். ஆனா, மத்த இரண்டு நாய்களும் தெரு நாய்கள். ஒரு நாய், தீபாவளி பட்டாசு வெடிச்சு அடிபட்டு பரிதாபமா கிடந்தது. இன்னொரு நாய், சொரி பிடிச்சு பார்க்குறதுக்கே விகாரமா இருந்துச்சு.  அதைப் பார்த்த எனக்கு  பாவமா இருந்துச்சு. சரி நாமே இதை வளர்க்கலாமேன்னு வீட்டுக்கு தூக்கி வந்தேன். இதுதான் மூணு நாய்கள் எங்க வீட்டுக்கு வந்த கதை. இப்போ மூணு, எண்பதாகி இருக்கு�� என்று கலைச்செல்வி சொன்னதும் நமக்கு ஆச்சரியம் தாங்கவில்லை!

அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மேலும் ஆச்சரியங்களை அடுக்கினார்... ��இப்ப இருக்குற எண்பது நாய்களும் ரோட்டில், தெரு நாய்களாக திரிந்தவைதான். ஒரு நாய் மேல பரிதாபப்பட்டு வளர்க்க ஆரம்பிச்சேன்னு சொன்னேன் இல்லையா... அதை இன்னைக்கு என் கடமையாவே ஆக்கிக்கிட்டேன். ஆரம்பத்துலே கஷ்டம் தெரியலை.

80 நாய்களுக்குத் தீனி போட, ஒரு நாளைக்கு குறைஞ்சது 500 ரூபாயாவது ஆகுது.  500 ரூபாய்க்கு என்னுடைய இரண்டு மகளும் தினமும் டியூஷன் எடுக்குறாங்க. என்னுடைய வீட்டு செலவுகளை குறைச்சி, அதுல  மிச்சம் பிடிக்கிற காசு அத்தனையும் இந்த நாய்களுக்காக செலவு பண்றேன். என்னுடைய மகன் ஒன்பதாவது படிக்கிறான். அவன்தான் இந்த நாய்களுக்காக அதிகமா கஷ்டப்படறான். தினமும் காலையில நாய்க் குட்டிகளுக்கு பால், பிஸ்கட் வைக்கிறது, மத்தியம் சாப்பாடு போடுறது என அத்தனையும் அவன்தான். இதுக்காக, காலையிலே சீக்கிரமா எழுந்துடுவான். மத்தியான சாப்பாட்டை இன்டர்வெல் நேரத்துலே சாப்பிடுவான்.

80 நாய்களையும் எங்க வீட்டுலே வளர்க்க முடியாது. அதனால, ஒரு வீட்டை 1500 ரூபாய் வாடகைக்கு எடுத்து, அதுல வளர்க்குறோம். பாதுகாப்பான இடத்தை சில நாய்களே தேடிக்கும். நாய் இருக்குற இடத்துக்குப் போய் சாப்பாடு போட்டுட்டு வருவான் என் பையன். தினமும் சாப்பாட்டுச் செலவை சமாளிக்கிறதுதான் எனக்கு பெரிய காரியமா இருக்குது. என் கஷ்டத்தைப் பார்த்து, �உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை�னு கேட்குறார் என் கணவர். சில நேரத்துலே இந்த நாய் வளர்ப்பையே விட்டுவிடணும்னுகூட தோணும். ஆனா, மூளைதான் அப்படி நினைக்குமே தவிர, மனசு கேட்காது. இப்படி போராட்டத்தோடேயே பத்து வருஷம் ஓடிடுச்சு�� என்கிறார் கலைச்செல்வி.

��உங்களால்தான் முடியவில்லையே... இந்தமாதிரி காரியங்களுக்கு  ப்ளூ கிராஸ்  இருக்கிறதே... அவர்களை அணுகலாமே...�� என்றால், ��அதையும்  டிரை பண்ணிட்டோம். அவங்க குட்டி நாயா இருந்தால்தான் எடுத்துக்குவாங்களாம்! �அதுவும் மொத்தமாக எடுத்துக்க மாட்டோம்�னு  சொல்லிட்டாங்க. இந்த நாய்களுக்காக பல பேர் கிட்ட உதவி கேட்டு பார்த்துட்டோம். எந்தப் பயனும் இல்லே.

�சண்டைக்காரன் காலில் விழுறதைவிட சாட்சிக்காரன் காலில் விழுறதே மேல்�னு சொல்வாங்களே, அதுமாதிரிதான் நாங்க தினமும் தெரிஞ்சவங்ககிட்டே ரேஷன் அரிசியைக் காசு கொடுத்து வாங்கி நாய்களுக்கு தீனி போடுறோம். தெரிஞ்ச கறி கடையிலே கோழி கால், தோல், தலை வாங்கி வர்றோம். இதுதவிர, தினமும் 100 ரூபாய்க்கு பிஸ்கட்டும், 4 லிட்டர் பாலும் வாங்குறோம். குட்டி நாய்கள், நோயால் பாதிக்கப்பட்ட  நாய்களுக்கு மட்டும் இந்த பால், பிஸ்கட். எல்லா நாய்களுக்கும் வாங்குற அளவுக்கு என்னிடம் வசதி இல்லை�� என்று கண்களில் நீர் தளும்பச் சொல்லும் கலைச்செல்வி சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்...

��அதுவும் இல்லாமே நாய்களுக்கு தொற்றுநோய் வராம இருக்க மூணு மாசத்துக்கு ஒருமுறை ஊசி போடணும். இனப்பெருக்கத் தடை ஆபரேஷன் செய்யணும். வெட்னரி டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும், மருந்து வாங்கணும்... இப்படி ஏகப்பட்ட செலவு இருக்குது. வேப்பேரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு போனாலும், மருந்துக்கு 400 ரூபாய், ஊசி போடுறதுக்கு 20 ரூபாய்னு 420 ரூபாய் ஆயிடுது. ஒவ்வொரு நாய்க்கும் இப்படி 420 ரூபாய்னா நினைச்சு பாருங்க. இப்படிதான் கஷ்டத்தோடு இஷ்டப்பட்டு நாய்களை வளர்க்குறேன். இதுலே அரசு ஏதாவது உதவி செஞ்சா உதவியா இருக்கும்�� என்று தாய் உள்ளத்தோடு கேட்கும் கலைச் செல்வியின் மகள் தனலட்சுமி, எம்.எஸ்.ஸி படிக்கிறார். ஐ.ஏ.எஸ். கனவோடு இருக்கும் தனலட்சுமி, தான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசையே இந்த நாய்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறுகிறார்.

எண்பது நாய்களுக்கு இரண்டு தாய்கள்!

ரூபாவதி.
படங்கள்: பிரவின்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites