இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, December 4, 2012

குழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட்


இதெல்லாம் தேவையான பொருட்கள்
சிவப்பு கண்ணாடி மணிகள், தங்கநிற மணிகள், நடுவில் கோர்க்க சிறிய டாலர், கோல்டு அல்லது மெட்டல் கம்பிகள், ஹுக் அண்ட் ஐ வகையான இணைப்பான்கள், பீட் ஸ்பேசர்கள், இணைப்புக்கான கருவி பிளையர்ஸ்
எப்படி செய்வது?
பிரெஸ்லெட்டின் நீளத்திற்கு ஏற்ப மெட்டல் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.
இந்த கம்பியில் உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றபடி மணிகளைக் கோர்த்து தேவைப்படும் இடங்களில் தங்கநிற மணிகளைப் பயன்படுத்துங்கள். நடுவில் டாலரைச் சேர்த்து மீண்டும் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக, இரண்டு பீட் ஸ்பேசர்கள் சேர்த்து இணைப்பானின் இன்னொரு முனையில் கம்பியை விட்டு பீட் ஸ்பேசர்களுக்குள் மீண்டும் நுழைத்து நெருக்கமாக சேருங்கள்.
இதோ, தயாராகிவிட்டது பிரெஸ்லெட்!
தேவையான பொருட்கள் இவை
பிரெஸ்லெட்டின் நீளத்திற்கு ஏற்ப மெட்டல் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள்.
கோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.
மணிகள் கோர்க்க கம்பி தயார்…
கம்பியில் உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்றபடி மணிகளைக் கோர்த்து
தேவைப்படும் இடங்களில் தங்கநிற மணிகளைப் பயன்படுத்துங்கள். நடுவில் டாலரைச் சேர்த்து மீண்டும் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக, இரண்டு பீட் ஸ்பேசர்கள் சேர்த்து
இணைப்பானின் இன்னொரு முனையில் கம்பியை விட்டு பீட் ஸ்பேசர்களுக்குள் மீண்டும் நுழைத்து நெருக்கமாக சேருங்கள்.
இதோ, தயாராகிவிட்டது பிரெஸ்லெட்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites