இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 9, 2012

ஆய்வு இருக்கட்டும், உங்க கருத்து என்னவோ...!


செக்ஸ், உறவு என்று பேசும்போது பெரும்பாலும் ஆண்கள்தான் டாமினேட் செய்பவர்களாக இருப்பார்கள். அதுதான் பொதுவான வழக்கமுமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் செக்ஸ் விஷயத்தில் பெண்கள்தான் பொறுப்பேற்று செயல்பட வேண்டுமாம். அப்போதுதான் அந்த உறவு சீராகவும், சிறப்பாகவும், இனிப்பாகவும் இருக்குமாம். அப்போதுதான் உறவும் முழுமை அடைகிறதாம். ஒரு ஆய்வு இப்படிச் சொல்கிறது.
பாரம்பரியாகவே ஆண்கள்தான் செக்ஸ் உறவுகளைத் தொடங்கி வைப்பார்கள், அவர்களே முடித்தும் வைப்பார்கள். தங்களது வேலை முடிந்ததும் எழுந்து போய் விடுவார்கள். அந்தக் காலம் முதல் இப்போது வரை இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடன் உறவில் ஈடுபட்ட பெண் சந்தோஷம் அடைந்தாளா, திருப்தி அடைந்தாளா, எப்படி உணர்ந்தாள் என்று 90 சதவீத ஆண்கள் கவலைப்படுவதில்லை, கண்டு கொள்வதில்லை. செக்ஸ் என்றாலே அது ஆண்களின் ஏரியா என்பது போலத்தான் பல ஆண்கள் பார்க்கிறார்கள், அணுகுகிறார்கள்.
ஆனால் இது தவறு என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். உண்மையில் பெண்களால்தான் உறவை சிறப்பிக்க முடியும், சீராக கொண்டு செல்ல முடியும் என்பது இவர்களின் வாதம். இதை ஒரு ஆய்வு மூலம் அவர்கள் விளக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக லிசா ரோசன்தெல் என்பவரின் தலைமையிலான குழு ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட செக்ஸ் அனுபவம் நிறைந்த 357 பெண்கள் மற்றும் 126 ஆண்களிடம் கருத்துக் கேட்டனர். அந்த ஆய்வின்போது பெண்களே அதிக அளவிலான செக்ஸ் அறிவுடன் திகழ்வதாக தெரிய வந்ததாம். மேலும், ஆண்களை விட தாங்களே செக்ஸ் உறவில் அதிக டாமினேட் செய்ய விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஆண்களை விட தாங்களே சிறந்த முறையில் உறவை மேற்கொள்ள முடியும் என்று பெண்கள் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செக்ஸ் உறவின்போது பெண்களை சுதந்திரமாக விடும்போது அவர்களுக்கு நிறைய நம்பிக்கை கிடைக்கிறதாம். புதிய புதிய விஷயங்களை அவர்கள் தங்களது பார்ட்னர்களிடம் கூறி கூடுதல் கிளர்ச்சியை அடைய உதவுகிறார்களாம். இதனால் வழக்கமான உறவுகளில் கிடைக்கும் இன்பத்தை விட கூடுதல் இன்பம் கிடைக்கிறதாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites