இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 14, 2012

தையல் இயந்திரம் எப்படித் தைக்கிறது?



தையல் இயந்திரம் பற்றிய சில விளக்கங்கள்:
எலக்ட்ரானிக் தையல் மெஷின்: 
எலக்ட்ரானிக் தையல் மெஷின்களில் பைப்பிங், பைண்டிங், ரஃப்ள்ஸ், பிளீட்டிங், டார்னிங், ஹொம்மிங், பட்டன் துளை போடுவது போன்ற பற்பல வேலைகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் நடைபெறுகின்றன.
எந்த ஒரு தையல் மெஷினிலும் அடிப்படைத் தேவை என்னவென்றால், அதன் நூல் மேலும் கீழும் ஏறி இறங்கி தையல் போடும் வகையில் ஊசியும், ஷட்டிலும் துல்லியமான நேரப்படி இயங்கவேண்டும். மெஷின் பிரஷர் ஃபுட் துணியை உரிய இடத்தில் வைத்து, முன்புறம் நகர்த்தி, ஷீம்மை உருவாக்குகிறது.
லாக் தையல் மெஷின்:
உலகெங்கும்  அதிக அளவில் ஒற்றை ஊசி லாக் தையல் மெசின்தான் பயன்படுத்தப்படுகிறது.சங்கிலித் தையல் மெஷின்களும், ஒவர் எட்ஜ் தையல் மெஷின்களும் பொதுவாக பின்னல் வேலைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

தையல் மெஷினை எவ்வாறு இயக்குவது என்ற அடிப்படைத் தவகல்களை தெரிந்து கொண்டால், எந்த தையல் மெஷினையும் சரியான முறையில் பயன்படுத்தி, தையல் கோளாறுகளை சரிசெய்ய முடியும்.
சாதாரண லாக் தையல் மெஷினை தட்டை படுகை தையல் மெஷின் என்றும் சொல்கிறார்கள். அது நேராக மட்டுமே தையல் போடுகிறது.

லாக் தையல்:
இருபுறங்களில் இருந்தும் தையல் ஒரே மாதிரியாகத் தெரிகிறது. மிகவும் தட்டையாக முற்றிலும் பாதுகாப்பானதாக, அவ்வளவாக வெளியில் தெரியாமல் தையல் இருக்கிறது. உடையைப் பயன்படுத்தும்போது நூல் அறுந்தால் கூட தையல் பிரிவதில்லை. ஏனென்றால், இரண்டு நூல்களும் ஒன்றுடன் ஒன்று (இறுக்கமாக பிணைந்து) லாக் ஆகியுள்ளன.

எனவேதான் இத்தகைய தையல் லாக் தையல் என்று அழைக்கப் படுகிறது. மேலே உள்ள ஸ்பூலில் இருந்து வெளிப்படும் ஊசிநூலும், கீழே உள்ள பாபினில் இருந்து வெளிப்படும் பாபின் நூலும் பிணைந்து லாக் தையல் விழுகிறது.

சரியாக தையல் விழும்போது, மேலிருந்தும் கீழிருந்தும் சமமான அளவுக்கு நூல் பயன்படுத்தப்படுகிறது. துணியின் மத்தியில் நூல்கள் லாக் ஆகின்றன.

லாக் தையல் மெஷின் வகைகள்:
இரண்டு வகையான லாக் ஸ்டிட்ச் மெஷின்கள் உள்ளன. அவைகள், ஒன்று சாதாரண தையல் மெஷின், காலால் இயக்க கூடியது. மற்றொண்டு லாக் ஸ்டிட்ச் பவர் தையல் மெஷின் என்பது. சாதாரண கறுப்புக் கலர் லாக் ஸ்டிட்ச் (பழைய)தையல் மெஷினிற்கும், பவர் மெஷினான வெள்ளைக் கலர் லாக் ஸ்டிட்ச் தையல் மெஷினிக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் உள்ளன.

அவைகள்:
1. வெள்ளை நிற பவர் தையல் மெஷின் மிகவும் விரைவானது. அது சராசரியாக ஒரு நிமிடத்தில் 5000 தையல்கள் போடுகிறது. ஆனால், சராசரி கறுப்பு நிற சாதாரண தையல் மெஷினோ 800 தையல்களுக்கு மேல் போடுவதில்லை. அதேவேளையில் கைத்தையல் மெஷின் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக 300 தையல்கள் மட்டும் தான் போடுகிறது.

2. பவர் தையல் மெஷினில், நீடில் லிஃப்ட் மூலம் (Presser Foot) பிரஷர் ஃபுட் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆனால், சாதாரண கறுப்பு நிற வீட்டுத்தையல் மெஷினில், நீடில் பாருக்குப் பின்னால் உள்ள ஒரு (Presser Foot Lifter) லீவரைப் பயன்படுத்தி இது கையால் இயக்கப்படுகிறது.

3. சாதாரண தையல் மெஷினில் உள்ள (Throat Plate) த்ரோட் பிளேட், ஷீம் கைடுகளுடன் காணப்படுகிறது. ஆனால் இது தொழிற்சாலை தையல் மெஷினில் இருப்பதில்லை .

4. பவர் மெஷினில் (Presser Foot) பிரஷர் ஃபுட்டுக்கு இரண்டு பெரு விரல்களுக்கு இடையே குறுகலான திறப்புதான் உள்ளது. இது துணியை உறுதியாகவும், இறுக்கவும் பற்றுகிறது.

5. பவர் மெஷினில் உள்ள பிளேட்டில் உள்ள (Throat Plate) த்ரோட் பிளேட்டில் சிறிய உருண்டையான ஊசித்துளை உள்ளது. சாதாரண தையல் மெஷினில் இது பெரிதாகவும் ஓவல் வடிவிலும் உள்ளது. இதனால் தையல் பிரச்சனைகள் குறைகின்றன.

சாதாரன தையல் மெஷினின் பாகங்கள்:

கருப்பு தலை மெஷின்:

தையல் கலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள், பவர் தையல் மெஷினின் வெவ்வேறு பாகங்களைப்   பற்றிப்  புரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

1 .ஹான்ட் வீல்: மெஷினின் வலது புறத்தில்  ஹேன்ட் வீல் உள்ளது.  சாதாரண தையல் மெஷின். இது கையால் அல்லது பெல்ட்டால் சுழற்றப்படுகிறது. பவர் தையல் மெஷினில் இது பெல்ட்டினால் இயங்குகிறது. தையல் இயந்திரத்தில் நீடில் பாரின் இயக்கத்தை இது கட்டுப்படுத்தி, மெஷினை சீராக ஓட்டுகிறது.

2 . இயக்கம் நிறுத்தம் ரவுன்ட்: இது மெஷினின் வலது ஓரத்தில் சுற்றுர்ம சக்கரத்தை ஒட்டி அமந்திருக்கும். இந்த  ஸ்குருவை இறுக்கமாக (இடமிருந்து வலமாக) மூடினால்  சக்கரம் சுற்றி மெஷின் தைப்பதற்கு உதவுகிறது. இதை வலமிருந்து இடமாக திருகி தளர்த்தினால் சக்கரம் சுற்றும் .ஆனால் தைக்க முடியாது ; நூல் சுற்றலாம் , இப்படியாக இந்த ஸ்குருவை  தளர்த்தியும் , தைக்கும் போது இறுக்கமாக மூடியும் தையல் இயந்திரத்தை இயக்கலாம்.

3 . பிரஷர் புட் (Presser Foot): தைக்கும் போது துணியை (Feed Dogs) பீட் டாக் உடன் இணைந்து பற்றிக்கொள்வதுடன் நேராக தைப்பதற்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது.  இதைக் கழற்றி தேவைக் ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளலாம். வெவ்வேறு வேலைகளுக்கு ஜிப்பர்  புட் , பிளாஸ்டிக் புட்  என்று வெவ்வேறு வகை (Foot) புட்கள் உள்ளன.

4 . பிரஷர் புட் லிப்ட்டர் (Presser Foot Lifter): மேலும் கீழும் தூங்குவதற்காக பிரஷர் புட்டுடன் இணைக்கப்பட்ட ஒரு லீவர். துணியைத் தைப்பதற்கு தொடங்கும்போது பிரஷர் புட் லிப்ரரைத் தூக்குவதன் மூலம் “பிரசர் புட்”  மேலெழும். அதன் போது நீடில் பிளெட்டிற்கும் பிரசர் பூட்டிற்கும் இடையில் துணி வைக்கக் கூடியதாக இடைவெளி ஏற்படுகின்றது.

5  நீடில் பிளேட்: இது ஒரு அரை வட்டத்  தட்டு , இதில் உள்ள துளை வழியாக நூல் கடந்து செல்கிறது . தையலின் போது வழிகாட்டியாக செயல்படுகிறது.

6 . நூல் இறுக்கி (டென்ஷன் யூனிட்): மேல்  நூலின் இறுக்கத்தையும் , தையல்களின் தரத்தையும் கட்டுப்படுத்தும்  ஒரு அமைப்பு . 

நூல்ப் பந்தில் இருந்து வரும் நூலானது நூல் தொய்வடையாது இருப்பதற்காக அதற்கென அமைக்கப்பெற்ற நூல் (கைடு)தாங்கிகள் ஊடாகவந்து இந்த நூல் ரென்ஷன் யூனிற்றில் இடையே உள்ள இரண்டு டிஸ்க்குகளுக்கு இடையில் செல்கின்றது. அதன் பின் நூலானது திரேட் டேக் அப் லிவர் ஊடாக ஊசிக்கு செல்கின்றது.
டிஸ்க் இரண்டிற்கும் இடையில் உள்ள பிரஷரை கட்டுப்படுத்த ஸ்பிரிங் மற்றும் நட் உதவியால் நூலின் இறுக்கம் சரி செய்யப் படுகிறது.

7 . நூல் இழுக்கும் (திரேட் டேக் அப்) லீவர் (Thread Take-up Liver): இது ஒரு முக்கியமான பாகம். இது தைக்கும்போது மேலும் கீழும் ஆடிக்கொண்டிருக்கும். இதன் வழியாக நூலைக் கோர்த்து தைக்கும் போது நூலானது, நூல் டென்ஷன் யூனிடில் இருந்து நூலை இழுத்து எடுப்பதுடன் ஊசியில் உள்ள நூலும் அளவான ரென்சனுடன் கீழ் நூலை பிணைத்து இழுக்க உதவுகின்றது.

நூலின் ரென்சன் கூடினால், தையலின் பிணைப்பு மேற்பக்கமாகவும், குறைந்தால் கீழ்ப்பக்கமாகவும் தெரியும். இது சரியான தையல் அல்ல.

பொவினில் இருந்து வரும் நூலும் குறிக்கப்பெற்ற இறுக்கத்துடன் மேலிருந்து வரும் நூலுடன் பிணைய வேண்டும். அப்போதுதான் தையல் ஒழுங்காக இருக்கும். கீழ் நூலை இறுக்குவதற்காக பொவின் வைக்கும் சட்டிலில் வெளிப்பக்கமாக பொருத்தப்பெற்றுள்ள தகட்டிற்கு இடையில் பொவினில் இருந்து வரும் நூலை மாட்டி எடுக்கப் படுகின்றது. சட்டிலில் இருந்து வரும் நூல் இறுக்கமாக அல்லது லூசாக இருந்தால் (வெளித் தட்டை அமத்தி சட்டிலுடன் பூட்டி இருக்கும்) ஸ்குறூவை திருப்புவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம்..

8. பீட் டாக் (Feed Dogs): பிரஷர் புட்டுக்கு கீழே உள்ள சிறிய உலோக சாதனம். இதில்  உள்ள பல் தைக்கப்படும்போது துணியை தையலின் அளவுக்கு தக்கதாக இழுத்து செல்கிறது . ஒவ்வொரு தையல் முடிந்ததும் இது ஒரு தையல் அளவுக்கு துணியை முன்னோக்கி நகர்த்துகிறது.

09 . நூல் கைடு (நூல் கொழுவி): நூல் தொவடைந்து சிக்குப்படாது இருக்க இதனூடு நூலை விடுதல் வேண்டும்.
தையல் டிப்ஸ்கள் 
1. சுடிதார் தைக்கும் போது பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி லைனிங் கொடுத்து தைக்கவும்.

2. மெல்லியா ஆடையாக இருந்தால் பெண்களுக்கு நெளிந்து கூன் போட்டு நடக்க வேண்டி வரும்.

3. இப்படி தைப்பதால் ரொம்ப பிரியா நடக்கலாம்.
4. வயது வந்த பெண்களுக்கு எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.

5. நான்கு விரல் லூசாகா இருக்கும் அளவிற்கு தையுங்கள்.முக்கியமா கழுத்து சிறிய கழுத்தாக தைக்கவும்.

6. டெய்லரிடம் கொடுக்கும் போது சொல்லி கொடுங்கள்.

7. நெக் பெருசா வைத்தால் தான் நல்ல தைக்கவரும் என்று டெய்லர்கள் அவர்கள் இழ்டத்துக்கு வைப்பார்கள்.

8. விலை உயர்ந்த துணியை தைக்க கொடுக்கும் போது உள்ளே (பெரிதாக்கக் கூடியதாக ) பிரித்து பயன் படுத்தக் கூடியதாக துணி விட்டு தைக்கவும்.

9. காட்டன் சுடிதார் தைக்க கொடுக்கும் போது ஒரு நாள் முழுதும் தண்ணீரில் நனைத்து பிறகு காய்ந்ததும் அய்ர்ன் செய்து கொடுங்கள்.

10. அப்படியே தைக்க கொடுத்தால் ஒரு முறை போட்டு துவைத்து மறு முறை போடும் போது கை கூட நுழைக்க முடியாது.

11. காசு கரியானது தான் மிச்சம்.அதே போல காட்டன் லைனிங்க் கொடுத்து தைத்த சுடிதாரை அலசி காய வைக்கும் போது லனிங்க் பகுதியை திருப்பி நல்ல உதரி போட வேண்டும்.

12. நல்ல பகுதி பக்கம் காய வைத்தால் உள்ளே உள்ள காட்டன் துணி சுருங்கி நிற்கும் அயர்ன் செய்ய ரொம்ப டைம் எடுக்கும்.

பிளவுஸ் தைக்கும் போது
1. பிளவுஸ் தைக்கும் போது இடுப்பு பட்டிக்கு உள் பக்கம் கேர்ன் வாஸ் துணி கொடுத்து தைத்தால் நல்ல ஸ்டிஃப்பாக இருக்கும் அல்லது பிள்ளைகளின் ஸ்கூல் காட்டன் பேண்ட் துணியும் வைத்து தைக்கலாம்.
2.எப்போதும் கலர் துணியை உள்ளே வைத்து தைக்ககூடாது, அது குண்டாக இருப்பவர்களுக்கு மடங்கும் போது வெளியே தெரியும்.
துணிகளை வெட்டும் போது
துணிகளை வெட்டும் போது கவனமாக உடனே அதை ஒரு துண்டு விடாமல் எடுத்து சுருட்டி ஒரு பையில்வையுங்கள். அங்கு இங்கு சிதர விட்டால் கை, பட்டி, கழுத்து துணி எல்லாம் காணாமல் போய் விடும்.
யாருடனும் சண்டை போட்டு விட்டு, பிள்ளைகளை திட்டி விட்டு துணிகளை வெட்டினால் உஷார் உடனே வெட்டிய துணியை பத்திரப்படுத்தவும்.
இல்லை என்றால் எப்படியும் ஒரு கையோ, பட்டி துணியோ காணாமல் போகும், இல்லை உங்கள் மேல் கோபமாக இருப்பவர்கள் அதை கண்டமட்டுக்கும் எங்காவது வெட்டி விடுவார்கள்.
அடுத்து முன்று வயதுக்குற்பட்ட குழந்தைகளை வைத்து கொண்டு தைக்காதீர்கள்.
நீங்கள் தைக்கும் போது ரொம்ப ஸ்வாரஸியமாக இருக்கும் அந்த நேரம் குழந்தை என்ன ஜோராக ஓடுகிறதே என்று கையை வைப்பார்கள்.
உடனே ஊசியால் குழந்தைகளின் கையை தைக்க வாய்பப்புகள் இருக்கு,
நீங்களும் தைக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள், பேசி கொண்டே தைக்காதீர்கள். உங்கள் கையே போய் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கு.

துணி வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டதா?
1.பிளவுஸ் மற்றும் சல்வார் வெட்டும் போது கழுத்து பகுதி பெரியதாகி விட்டால் கவலை பட தேவையில்லை, அதே போல் அரை இன்சுக்கு கழுத்து வரைந்து ஒட்டு கொடுத்து விட்டு ஒட்டு தெரியாமல் இருக்க லேஸ், அல்லது மணி, இல்லை ஜரிகை லேஸ் வைத்து தைத்து கொள்ளலாம் என்ன சல்வாரோ அத்ற்கு ஏற்றார் போல்.
2.அதே போல் சாதாரண சல்வார் கம்மீஸ் கூட கழுத்து , சைட் பகுதி, கையில் மணி அல்லது லேஸ் வைத்து தைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.
3.இப்போது யாரும் பட்டு சேலை அவ்வளவாக உடுத்தி கொள்வதில்லை வொர்க் வந்தது தான், மைசூர் சில்க் போன்றவை தான் கட்டு கிறார்கள்.
அப்ப பழைய பட்டு சேலையை கூட சல்வார் கம்மீஸாக தைத்து கொள்ளலாம்.
சுடிதார் தைக்கும் முறை
1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.
பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.


5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்துதைக்கவும் (படம் 5)
1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 6-ல் உள்ளபடி வரைந்து வெட்டவும்.
2. வெட்டிய பின் மீதமுள்ள துணியை இரண்டாக மடித்துப் போட்டு படம் 7-ல் உள்ளபடி வெட்டவும். துணியின் நீளவாக்கில் ஒருபக்கம் நாடா நுழைக்க மடித்துத் தைக்கவும்.
3. படம் 6-ன்படி வெட்டிய துணியின் முன்பக்கமும், பின்பக்கமும் படம் 8-ல் உள்ளபடி fril கொடுத்து தைக்கவும். காலின் கீழ்பகுதியை 1" மடித்து தைக்கவும்.
4. படம் 7-ல் உள்ள துணியின் இரு நுனியையும் சேர்த்துத் தைக்கவும்.
5. படம் 7ஐயும், படம் 6ஐயும் சேர்த்து படம் 8-ல் உள்ளபடி தைக்கவும்.


உடலமைப்பிற்குத் தகுந்தபடி உடைகளை வடிவமைப்பதே தையற்கலை. உடையின் பொருத்தம் என்பது உடம்பின் தன்மையுடன் தொடர்புடையதாய் இருக்கிறது. எனவே உடற்கூறு இலக்கணம் என்கிற உடல்புறத் தோற்றவியலைப் பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது.

உருவ அமைப்புகள்

உடலமைப்பின் புறத்தோற்றமானது ஒவ்வொருடைய உடலமைப்பிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உயரம், மார்புச் சுற்றளவு, இடுப்புச் சுற்றளவு, புட்டச் சுற்றளவு எனும் இம்மூன்றின் அளவுகளின் தன்மையில் காணப்படும்.

பெண்களைப் பொறுத்தளவில் மார்பக அளவுகளில் பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன. பொதுவாக 5' 4" இருக்கும் உயரமான ஒரு பெண்ணின் மார்பு - 34", இடுப்பு - 28", புட்டச் சுற்றளவு - 36" என்பதே விகிதச் சம உருவத் தன்மையாகும்.

இதை நிலையான உருவம் என்று கூறலாம். இந்த உருவத்தின். விகிதச் சமமின்மை என்பது மார்பு, இடுப்பு, புட்டம் சுற்றளவுகளின் தன்மையானது மேற்குறிப்பிட்டுள்ள விகித சம அளவிற்கு மாறுபட்டு இருக்கும். சற்று தடிமனான உருவத்தில் மார்பு அளவு 34", இடுப்பு 30", புட்டம் 39" என்றிருக்கும். ஒல்லியான உருவத்தில் மார்பு 34", இடுப்பு 26", புட்டம் 34" என்றிருக்கும். மிகவும் சதைப்பற்றுள்ள உருவத்தில் மார்பு 38", இடுப்பு 34", புட்டம் 44" என்றுமிருக்கும்.

பொதுவாக எலும்பு மண்டலத்தின் மேற்புறமாகப் போர்த்திய வடிவில் அமையப்பட்டிருக்கும் தசை நார்களின் தோற்றத்தினால்தான் உருவ அமைப்புகளின் தன்மைகளானது நிர்ணயிக்கப்படுகிறது. நிலையான உருவம் என்பதும், விகித சம உருவம் என்பதும் எடுத்துக்காட்டான உருவம் என்பதும் ஒரே உருவம் ஆகும். இத்துடன் சேர்த்து ஒல்லியான உருவம், தடிமனான உருவம், கொழுத்த சரீரமுடைய உருவம் என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

பெண்களின் புறத்தோற்ற அமைப்பு என்பது அவர்களுடைய பாரம்பரியத்தினைச் சார்ந்து அமையலாம் அல்லது அவர்களது உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலும் அமையலாம்.

உடலில் சதைப்பற்று மிகுதியான பகுதிகளாக மார்பு, இடுப்பு, புட்டம், தொடை பாகங்களில் ஏற்படும் தசை நார்களின் தன்மையும், கொழுப்புச் சத்து மிகுதியாலும் உடல் தோற்றம் பருமனாக இருக்கிறது. சீரான உடல்வாகு பெற தினமும் உடற்பயிற்சி மேற்கோள்வது அவசியம்.

பக்கவாட்டுத் தோற்றம்
ஒருவர் நிற்கும் நிலையில், பக்கவாட்டுத் தோற்றத்தினைக் கவனிக்கும் போது நிலையான உருவம், நிமிர்ந்த உருவம், முன் நோக்கி வளைந்த உருவம், கூன் முதுகு அமைப்பு உருவம், அகன்ற தோள்பட்டையுடன் கூடிய குறுகலான மார்பக அமைப்பு கொண்ட உருவம், குறுகிய தோள்பட்டையுடன் கூடிய அகன்ற மார்பக அமைப்பு கொண்ட உருவம் போன்ற உருவ அமைப்புகளைக் காண முடிகிறது.

தோள்பாக அமைப்பு நிலையானதாக அமைந்திருக்கும். சில உருவத்தில் முன் நோக்கி வளைந்த தோள்பட்டை, உயர்ந்த தோள்பட்டை, சரிந்த தோள்பட்டை போன்ற அமைப்புகளுக்குத் தகுந்தாற் போல உடையின் தோள் பாகத்தில் சாய்வு நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் உடலின் தன்மைக்குப் பொருந்தக் கூடிய உடைகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

கால்களின் அமைப்பு
கால்களின் அமைப்புகளில் நிலையான கால்கள் அமைப்பு, அகன்ற கால்களின் அமைப்பு, தொடைச் சதைப்பற்று அதிகமான கால்களின் அமைப்பு என்பவை காற்சட்டைகளுக்கான அளவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

புறத் தோற்றம்
உடலை அதன் புறத்தோற்ற அமைப்பைக் கொண்டு நான்கு விதமாகப் பிரிக்கலாம். அவை
1. ஆப்பிள் வடிவம்
2. செவ்வக வடிவம்
3. மணி வடிவம்
4. பகுக்கப்படாத வடிவம்

உருவம் என்பதைப் பார்க்கும் போது 36"-29"-38" என்று முறையே மார்பு - இடுப்பு - புட்டம் அளவுகள் இருப்பதே சரியான உருவம் என்று ஒரு புள்ளியியல் ஆய்வு தெரிவிக்கிறது.

எட்டு தலைக் கொள்கை
உடலின் அமைப்பில் பருவ வயதினை அடைந்த பெண்ணின் முழு உயரத்தில் தலை முதல் கால் பாதம் வரையில் எட்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
1. தலை முதல் முகவாய்க்கட்டு வரை
2. முகவாய்க்கட்டு முதல் நடு மார்பு வரை
3. நடு மார்பு முதல் இடுப்பு வரை
4. இடுப்பு முதல் புட்டம் வரை
5. புட்டம் முதல் தொடை நடுப்பாகம் வரை
6. தொடை நடுப்பாகம் முதல் கால் முட்டி வரை
7. கால் முட்டி முதல் கெண்டைக்கால் வரை
8. கெண்டைக்கால் முதல் காலின் பாதம் வரை

இவை தையல் தொழில்நுட்பத்தில் உடலின் எட்டு தலைக் கொள்கைகள் என்று சொல்லப்படுகின்றன.

எட்டு தலைக் கொள்கையின் பயன்

இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் உடைகளுக்கான உயர அளவுகள் கணக்கிடப்படுகிறது. பருவப் பெண்ணின் முழு உயரம் 5 அடி 4 அங்குலம் (5' 4"). இதை எட்டால் வகுத்தால் ஒரு பிரிவு என்பது 8 அங்குலம். அதாவது

5 அடி 4 அங்குலம் = 5' 4" x 12 =60"+4" = 64"

இதை எட்டால் வகுத்தால் 64"/8 = 8"

இது ஒரு தலைக் கொள்கையாகும். இந்த கணக்கீட்டின் அடிப்படையில்தான் உடைகளுக்கான நீள அளவுகள் நிர்ணயிக்கப்படுகிறது.

சில உடைகளுக்கான நீள அளவுகள்
இந்த எட்டுதலைக் கொள்கையின் அடிப்படையில் சில நீள அளவுகள் நிர்ணயிக்கப்படுகிறது.

மேல் சட்டை உடை
ரவிக்கை, ப்ளவுஸ், கட் - ஜாக்கெட், சோளி முதலியவற்றுக்கு 1 3/4 (1.75அளவு) தலைக் கொள்கை அளவு முழு நீள அளவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி

1.75 x 8" =14" அதாவது 14 அங்குலம். இதுவே மேல் சட்டையின் முழு நீளமாகும்.

முழு இரவு நேர உடை 
முழு நைட்டி எனப்படும் முழு இரவு நேர உடைக்கு 7 1/2 (7.5 அளவு) தலைக் கொள்கை அளவு கடைப்பிடிக்கப்படுகிறது.

7.5 x 8" = 60" . அதாவது 60 அங்குலம். இதுவே முழு இரவு நேர உடையின் முழு நீளமாகும்.

மேல் உள்ளாடை
சுமீஸ் / டாப்ஸ் எனும் உடையான மேல் உள்ளாடைக்கு மூன்று விதமான அளவுகள் க்டைப்பிடிக்கப்படுகிறது.

கூடுதல் உயரம்- 5 தலைக் கொள்கை

5 x 8" = 40". அதாவது 40 அங்குலம். முழுநீள அளவாகும்.

நடுத்தரமான உயரம்- 4 1/2 (4.5அளவு) தலைக் கொள்கை
4.5 x 8" = 36". அதாவது 36 அங்குலம். முழுநீள அளவாகும்.

கூடுதல் உயரம்- 4 தலைக் கொள்கை
4 x 8" = 32". அதாவது 32 அங்குலம். முழுநீள அளவாகும்.

சுடிதார் பாட்டம் உடை
சுடிதார் பாட்டம் உடைக்கு 5 தலைக் கொள்கையாகக் கணக்கிடப்படுகிறது.

5 x 8" = 40". அதாவது 40 அங்குலம். முழுநீள அளவாகும்.

பைஜாமா, சல்வார், பாட்டியாலா பைஜாமா, டோத்தி சல்வார், பேண்ட், முழுக்கால் சட்டை போன்றவற்றிற்கும் இந்த அளவே பொருத்தமானதாக இருக்கிறது.

பிற உடைகள்
சிலாக் உடைகளுக்கு 3 1/2 (3.5 அளவு) தலைக் கொள்கை

3.5 x 8" = 28". அதாவது 28 அங்குலம். முழுநீள அளவாகும்.

சட்டை உடைகளுக்கு 3 3/4 (3.75 அளவு) தலைக் கொள்கை

3.75 x 8" = 30". அதாவது 30 அங்குலம். முழுநீள அளவாகும்.

ஆய்வக மேலாடை (லேப் கோட்) உடைகளுக்கு 4 தலைக் கொள்கை
4 x 8" = 32". அதாவது 32 அங்குலம். முழுநீள அளவாகும்.

அரைக்கால் சட்டை 1 3/4 (1.75) தலைக் கொள்கை
1.75 x 8" = 14" . அதாவது 14 அங்குலம். முழு நீள அளவாகும்.

பெர்முடாஸ் எனப்படும் காலின் முட்டிப் பாகம் வரை ஆடைக்கு  1/4 (2.25 அளவு) தலைக் கொள்கை

2.25 x 8" = 18". அதாவது 18 அங்குலம். முழு நீள அளவாகும்.

தையல் கலையில் இது போன்ற கணிதப் பங்கீடுகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

அளவீட்டு முறைகள்

உடைகளுக்கு நேரடியாக அளவெடுக்கும் போது இரண்டு வகையான அளவு முறைகள் பின்பற்றப்படுகிறது.

1. பிரிட்டிஷ் அளவு முறை

2. மெட்ரிக் அளவு முறை

பிரிட்டிஷ் அளவு முறையில் அங்குலம் அளவாகக் கணக்கெடுக்கப்படுகிறது.

அதாவது ஒரு அங்குலம் (Inch) எட்டு சம அளவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
1. எட்டில் ஒரு பங்கு= 1/8 "
2. எட்டில் இரு பங்கு= 2/8 " அல்லது 1/4 "
3. எட்டில் மூன்று பங்கு= 3/8 "
4. எட்டில் நான்கு பங்கு= 4/8 " அல்லது 1/2 "
5. எட்டில் ஐந்து பங்கு= 5/8 "
6. எட்டில் ஆறு பங்கு= 6/8 " அல்லது 3/4 "
7. எட்டில் ஏழு பங்கு= 7/8 "
8. எட்டில் எட்டு பங்கு= 8/8" அதாவது 1"

இந்த பிரிட்டிஷ் அளவு முறையில்
12 அங்குலம் சேர்ந்தது ஒரு அடி (feet)
36 அங்குலம் சேர்ந்தது ஒரு யார் (கெஜம்)
என்பதான அளவுகளாக இருக்கிறது.

மெட்ரிக் அளவு முறை

மெட்ரிக் அளவு முறையில் சென்டி மீட்டர் அளவாகக் கணக்கிடப்படுகிறது.

இந்த முறையில் ஒரு சென்டி மீட்டர் பத்து சம அளவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இந்த பத்து சம அளவு ஒவ்வொன்றும் மில்லி மீட்டர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மெட்ரிக் அளவு முறையில்
10 மில்லி மீட்டர் சேர்ந்தது 1 சென்டி மீட்டர்
100 சென்டி மீட்டர் சேர்ந்தது 1 மீட்டர்
100 மீட்டர் சேர்ந்தது 1 கிலோ மீட்டர்
என்பதான அளவுகளாக இருக்கிறது.

அளவு மாற்றம்

தற்போது மெட்ரிக் முறை அளவுகள்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பிரிட்டிஷ் அளவு முறையிலிருந்து மெட்ரிக் முறைக்கு மாற்றம் செய்ய கீழ்காணும் கணக்கு பயன்படுத்தப்படுகிறது.

1 அங்குலம் = 2.54 செ.மீ
1 அடி = 30.5 செ.மீ
1 கெஜம் = 91 செ.மீ

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்ததால் பிரிட்டிஷ் அளவு முறை பயன்படுத்தப்பட்டு வந்ததால் பிரிட்டிஷ் முறை இன்னும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடைகளுக்கு அளவெடுக்கப் பயன்படுத்தப்படும் அளவு நாடாவின் ஒரு புறம் பிரிட்டிஷ் அளவு முறையும் மறு புறம் மெட்ரிக் அளவு முறையும் கொண்டதாகவே கிடைக்கிறது. பிற நாடுகளில் மெட்ரிக் அளவு முறை பயன்பாட்டில் இருக்கின்றன.

இன்றைய நிலையில் இந்தியாவில், உடை தயாரிக்கும் கல்வி கற்பவர்கள் மற்றும் கற்றவர்கள் மெட்ரிக் அளவு முறையும், தையலை அனுபவப் பூர்வமாகக் கற்றுக் கொண்டவர்கள் பிரிட்டிஷ் அளவு முறையையும் பயன்படுத்துகின்றனர். ஏற்றுமதி உடை தயாரிப்பு நிறுவனங்களில் இரண்டு அளவு முறைகளுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு அளவு முறைகளையும் தெரிந்து கொள்வது நல்லதாக இருக்கிறது.

மேலே சொல்லப்பட்ட அளவு மாற்ற முறைகளைக் கொண்டு, அளவுப் பங்கீட்டு முறையைப் பயன்படுத்தி உடைகளைத் தயாரிக்கலாம். உடைகள் தயாரிப்பில் ஓரளவு அனுபவம் பெறுவதற்கு முன்பு தாள்களில் (Paper) பயிற்சி செய்து பார்த்து, அதன் பின் துணிகளில் துவங்கலாம்



thnxs:பணிபுலன் 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites