‘கம்யூனிட்டி ஆக்ஷன் ஃபார் சோஷியல் டிரான்ஸ்ஃபர்மேஷன்’ என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவன இயக்குனர் சுசீலா பாண்டியனின் முயற்சியால், இன்று அத்தனை பெண்களின் குடும்பங்களிலும் மறுமலர்ச்சி! கற்றாழை மற்றும் வாழை நார் கொண்டு நூற்றுக்கும் மேலான பொருள்களைத் தயாரித்து, விற்பனை செய்ய வழிகளைக் காட்டி, வாழ்க்கையின் மேல் பற்று ஏற்படவும் பின்னணியில் இருக்கிறார் சுசீலா.‘‘எட்டு வருஷ உழைப்பு இது... மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கிற பகுதி இது. பீடி சுத்தறப்ப, அதைத் தொடர்ந்து சுவாசிச்சு உடல்நலமில்லாமப் போனவங்களை மீட்கறதுக்காக ஆரம்பிச்ச விஷயம்... கற்றாழை மற்றும் வாழை நார்ல கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலான வீட்டு உபயோகப் பொருள்களையும், அலங்காரப் பொருள்களையும் தயாரிக்கலாம். சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. என்கிட்ட பயிற்சி எடுத்துக்கிற பெண்களுக்கு அரசாங்கத்தோட கைவினைக் கலைஞர் அடையாள அட்டையை வாங்கிக் கொடுக்கறேன். அது மூலமா அவங்க குடும்பத்துக்கு மருத்துவ உதவிகளும் கிடைக்கும்’’ என்கிற சுசீலாவிடம் 200க்கும் மேலான பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.கற்றாழை, வாழை நார் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் பரவலான வரவேற்பு இருப்பதைப் பெருமையுடன் சொல்கிறார் சுசீலா.
இது இப்படித்தான்!
மூலப் பொருள்கள்
கற்றாழை நார்தான் பிரதானப் பொருள். முதல் கட்டமாக அதை இழைக்க வேண்டும். கடினமான அந்த வேலையை ஆண்களிடம் கொடுத்துதான் செய்து வாங்க வேண்டும். அடுத்து அதைக் காயப் போடுவது, டை செய்வது, நூல் எடுப்பது, பிரிப்பது என 5 கட்டங்கள். கற்றாழை நாரை பஞ்சுமிட்டாய் மாதிரி மாற்றிக் கொடுக்க ஒரு பிரத்யேக மெஷின் வேண்டும். தவிர நூல், பனை நார், வேஸ்ட் துணி...
எங்கே வாங்கலாம்?
வேலிக்கற்றாழை என்கிற பெயரில் தமிழ்நாடு முழுக்க பரவலாகக் கிடைக்கும். திருநெல்வேலியில் அதிகம் கிடைக்கிறது. நார் பிரிக்கிற மெஷினை நாங்களே தயாரித்துக் கொடுக்கிறோம்.
முதலீடு
ஒரு கிலோ உயர் தர கற்றாழை நாரின் விலை 125 ரூபாய். அது பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென இருக்கும். நன்கு உலர்ந்ததாக இருக்கும். சற்று தரம் குறைவான நார் என்றால் பழுப்பு நிறத்தில் இருக்கும். அது கிலோ 85 ரூபாயிலிருந்து, 100 ரூபாய் வரை கிடைக்கும். ஆரம்பத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்கு நார் கையிருப்பு இருப்பது நல்லது. திடீரென ஸ்டாக் கிடைக்காவிட்டால், இருப்பதை வைத்து சமாளிக்க வசதியாக இருக்கும். மெஷின் உள்ளிட்ட மற்ற பொருள்களுக்கும் சேர்த்து முதலீடு 25 ஆயிரம் ரூபாய்.
என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்?
உடம்பு தேய்த்துக் குளிக்கிற பாடி ஸ்க்ரப்பர், கைப்பை, ஷாப்பிங் பை, பர்ஸ், கூடை, டைனிங் டேபிள் செட், வால் ஹேங்கிங். லேம்ப் ஷேடு... இப்படி நூற்றுக்கணக்கான பொருள்கள்.
மாத வருமானம்?
ஒரு கிலோ நாரில் அளவைப் பொறுத்து 40 முதல் 70 பாடி ஸ்க்ரப்பர் செய்யலாம். ஒரு ஸ்க்ரப்பரின் விலை 50 ரூபாய். ஒருவர் ஒரு நாளைக்கு 8 ஸ்க்ரப்பர் செய்யலாம். டேபிளின் மேல் வைக்கிற பொம்மை 130 ரூபாய். லேம்ப் ஷேடுகள் 400 முதல் 600 ரூபாய் வரை... எனவே, செய்கிற பொருளையும் எண்ணிக்கையையும் பொறுத்தது வருமானம். குறைந்தபட்சமாக நாளொன்றுக்கு 125 முதல் 150 ரூபாய் தாராளமாக சம்பாதிக்கலாம்.
மார்க்கெட்டிங்?
மிக நுணுக்கமாகச் செய்கிறவர்கள் என்றால் அவர்களது தயாரிப்புகளை நாங்களே வாங்கிக் கொள்கிறோம். நேரடியாக மார்க்கெட் செய்ய விரும்புவோர், கண்காட்சிகள், கலைப்பொருள் விற்பனை நிலையங்கள், சுற்றுலா பயணிகள் குழுமும் இடங்களில் உள்ள கடைகள் போன்றவற்றுக்கு சப்ளை செய்யலாம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் அதிகம்.
பயிற்சி?
அத்தனை பொருள்களையும் மிகச்சரியாகக் கற்றுக்கொள்ள நினைப்போருக்கு 3 மாதப் பயிற்சி அவசியம். மூலப்பொருள்களுக்கான செலவு அவர்களுடையது. வெளியூர்களில் இருந்து வருவோருக்கு உணவு, விடுதி வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். தொடர்புக்கு: 9443160570.

0 comments:
Post a Comment