வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், செடிக்கு தேவையான உரம் மிகவும் விலைமதிப்புள்ளது என்று நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் கடைகளில் அதிக விலைக் கொடுத்து, உரங்களை வாங்கி செடிகளுக்கு போடுகின்றனர். ஆனால் உண்மையில் செடிகளுக்கான உரத்தை அதிக செலவு செய்து, உரத்தை வாங்கி போடுவதை விட, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே செடிக்களுக்கு உரத்தை போடலாம். அது என்னவென்று சற்று படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்...
வீட்டில் இருக்கும் செடிகளுக்கான உரங்கள்...
மருந்துகள் : நிறைய வீட்டில் முதலுதவிக்காக ஒரு பெரிய பெட்டியில் மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளில், ஒருசில மாத்திரைகளின் பயன்படுத்தும் தேதி முடிந்திருக்கும். அத்தகைய மாத்திரைகளை தூக்கிப் போடாமல், அவற்றை சேகரித்து, பொடி செய்து செடிகளுக்குப் போட்டால், செடிகள் நன்கு செழிப்பாக வளரும். ஏனெனில் அந்த மாத்திரைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு ஆரோக்கியத்தை தந்து, செழிப்புடன் வளரச் செய்யும்.
டீ இலைகள் : தினமும் காலையில் மற்றும் மாலையில் தவறாமல் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். அவ்வாறு வீட்டில் டீ போட்டால், அதன் இலைகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவோம். ஆனால் அவற்றை தூக்கிப் போடாமல், அதனை செடிகளுக்கு போட்டால், செடிகள் நன்கு வளரும். முக்கியமாக அவ்வாறு தூக்கிப் போடும் போது, அந்த டீ இலைகள் சூடாக இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் செடிகள் வாடிவிடும்.
காய்கறிகளின் தோல்கள் : அனைத்து வீடுகளிலும் சமையலில் தினமும் காய்கறிகளைப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும் காய்கறிகளின் தோல்களை கண்டிப்பாக தூக்கிப் போடத்தான் செய்வோம். ஆனால் தற்போது அந்த காய்கறிகளின் தோல்களை தூக்கிப் போடாமல், அவற்றை செடிகளுக்கு போட்டால் செடிகள், அந்த தோலில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி ஆரோக்கியமாக வளரும். இந்த காய்கறிகளின் தோல்கள் செடிகளுக்கு சிறந்த ஒரு வகையான கரிம உரமாகும்.
சாதத்தின் தண்ணீர் : சாதம் ஒரு தானிய வகையைச் சேர்ந்தது. இந்த சாதம் அரிசியாக இருக்கும் போது அதில் அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் இருக்கும். ஆனால் அவற்றை சாதமாக செய்யும் போது, தண்ணீரில் ஊற வைத்து, கழுவும் போது அந்த சத்துக்களை நாம் இழக்கிறோம். அவ்வாறு கழுவும் நீரினை வெளியே ஊற்றிவிடாமல், அவற்றை செடிகளுக்கு ஊற்றினால், அந்த அரிசியில் இருக்கும் சத்துக்கள், செடிகளுக்குச் செல்லும். இதனால் செடிகள் அந்த சத்துக்கைளை உறிஞ்சி, நன்கு வளரும். இதுவும் ஒரு வகையான உரமாகும்.
இத்தகைய பொருட்களே செடிகளுக்கான வீட்டில் இருக்கும் சிறந்த உரங்கள். இத்தகைய உரங்களை உங்கள் வீட்டு செடிகளுக்கு போட்டு, செடிகளை செழிப்பாக வளரச் செய்யுங்கள்.
0 comments:
Post a Comment