கல்யாணத்துக்குச் சட்டை எடுப்பார்கள். ஆனால், கல் யாண அழைப்பிதழையே சட்டையைப் போல் உருவாக்கி இருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த அலெக்ஸ் ரவி. தன் மகன் திருமணத்துக்காக கோட் மாதிரி இவர் உருவாக்கி இருக்கும் சட்டைக்கு ஏரியாவில் செம ரெஸ்பான்ஸ்.
''நான் பொதுவாகவே எதைச் செஞ்சாலும் வித்தியாசமா செய்யணும்னு நினைப்பேன். டிரெஸ் தைக்கிறதுலகூட வித்தியாசம் காட்டுவேன். என் மகன் இன்ஃபன்ட் கல்யாணப் பத்திரிகை மாடல் பாக்குறதுக்காக சிவகாசி, மதுரை, பாண்டிச்சேரினு பல ஊருங்களுக்குப் போனேன். ஒண்ணுமே எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. கல்யாணத்துக்கு நாள் வேற நெருங்கிட்டு இருந்தது. அப்பதான் சட்டைமாடல்லேயே பத்திரிகை அடிச்சா என்னன்னு தோணுச்சு. வேஸ்ட் துணியில வெட்டி ட்ரையல் பார்த்தேன். ஓரளவு தேறிச்சு. சட்டைக் காலருக்கு கேன்வாஸ் துணியையும், வெல்வெட் துணியையும் வெச்சு அயர்ன் பண்ணிப் பார்த்தேன். கோட் மாதிரி விரைப்பா நின்னுச்சு. என் பையனுக்கு சிவப்பு கலரும், என் மருமகள் தீபாவுக்குப் பச்சை கலரும் பிடிக்கும். அதனால, அந்த ரெண்டு கலர்லேயும் மொத்தம் 650 சட்டைகளை ரெடி பண்ணினேன். சட்டை இன்விடேஷனை சிவகாசிக்கு எடுத்துட்டுப் போய் பிரிண்டிங் பண் ணினோம். சட்டை பார்க்க வெறு மையா இருக்குதுனு என் மகளும் மருமகளும் சேர்ந்து சட்டைக்குப் பொருத்தமா நாலு பட்டன் வெச்சுத் தெச்சாங்க. என் மனைவி சட்டைப் பைக்கு மேல சின்னச் சின்ன பிளாஸ்டிக் ரோஸ் ஒட்டி இன்னமும் அழகாக்கினாங்க. என் பையன் அதை வைக்கிற மாதிரி கவர் தயா ரிச்சான். இப்படி குடும்பமே ஒண்ணுசேர்ந்து கல்யாணப் பத்திரிகையைத் தயாரிச் சோம். இன்விடேஷனை வாங்குன பலபேர் அதைப் பத்து நிமிஷ மாவது ஆச்சர்யமாப் பார்த்திருப்பாங்க. சில பேர் தங்கள் சொந்தக்காரங்களுக்கு கல்யாணம் வருது. இதே மாதிரி பண்ணித் தர முடியுமா?’னு கேட்டு ஆர்டர் கொடுத்தாங்க.
பத்திரிகையில மணமக்கள் பெயர், இடம், நாள், அதோட 'கல்யாணத்துக்கு வாங்க’னு மட் டும் போட்டுட்டேன்.
இப்படி சிம்பிளா அடிச்சதுனால சொந்தக்காரங்க யாரும் 'என் பேரை விட்டுட்டீங்க’னு கோபப்படவே இல்லை. அவங்களும் சட்டையில மயங்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்!'' பலமாகச் சிரிக்கிறார் அலெக்ஸ் ரவி.
-இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்
படங்கள்: ஏ.சிதம்பரம்
மேலும் விபரம் தெரிந்தால் அனுப்பவும்
2 comments:
எதிலும் ஒரு மாற்று சிந்தனை வளமாக்கிவிடுகிறது வாழ்வை! அலெக்ஸ் ரவிக்குப் பாராட்டுக்கள்! அறிமுகப்படுத்திய உங்களுக்கும்!
தாங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment