பித்தக்கற்கள் பித்தப்பையின் குழாயை அடைப்பதனால் பித்ப்பையிலே விக்கம் /அழற்சி ஏற்படும்.இது பித்தப்பை அழற்சி (Acute chole cystitis ) எனப்படும். பின்வரும் காரணங்களினால் பித்தக் கற்கள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.
- 1.அதிகரித்த உடற்பருமன்.
- 2.40---50 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள்.
- 3.கருத்தடைமாத்திரைகளைப் பயன்படுத்துதல்.
- 4.கர்ப்பமாக இருத்தல்..
- 5.குருதிக் கலங்கள் நீண்ட காலமாக உடைவடைதல் ( Chronic haemolysis ) .உதாரணம் தலைசீமியா (Thalasaemia)
பித்தப்பை அழற்சியின் நோய்க்குறிகள் :
- 1. வயிற்றுவலி
* தொடக்த்தில் மேல்வயிற்றுப் பகுதியில் வலிகாணப்படும் பின்னர் வலதுபக்கமாக மேல்வயிற்றுப் பகுதியில் வலி காணப்படும்.
* ஆரம்பத்தில் வலி விட்டுவிடடு ஏற்படும் பின்னர் அது தொடர்ச்சியாகக் காணப்படும். - 2. வாந்தி வருவது போன்ற உணர்வு /வாந்தி ஏற்படலாம்.
- 3. காய்ச்சல் .(38—39 ‘c)
- 4. அஜீரணத்தன்மை (Dyspepsia)
உணவு உண்டபின் விசேடமாகக் கொழுப்பு உணவுகளை உண்டபின் சமிபாடடையதாது போன்ற உணர்வு அல்லது வயிறு வீக்கமுற்றது போன்ற அசௌகரியம் ஏற்படலாம். - 5.வயிற்றின் வலது அமற்பகுதியில் ( அதாவது வலது விலாஎன்பு கூட்டிற்குக் கீழ் ) வைத்தியர் அமத்திப்பார்க்கும் போது வலி ஏற்படலாம்.
பரிசோதனைகள் :
- 1. வயிற்றில் X— கதிர் பரிசோதனை (Abdominal Xray)—10% பித்தக் கற்கள் X—ray பரிசோதனையில் அவதானிக்க முடியும்.
- 2.வயிற்றுப் பகுதியில் செய்யபபடும் ஸ்கான் பரிசோதனை (Abdominal Ultra sound scan) இதுமிகவும் முக்கியமான பரிசோதனை , இதன்மீலம் பித்தப்பபை பற்றியபல தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். பித்தப்பையினுள் கற்கள் னகாணப்படுகின்றனவா ? பித்தப்பவைக்கமுற்று /அழற்சியுற்றுக் காணப்படுகின்றதா ? பித்தக் குழாயினுள் பித்தம் தேங்கி நிற்கிறதா ? போன்ற பல வினாக்களுக்கான விடையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
- தேவையைப் பொறுத்து வைத்தியர் உங்களை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்துவார்.
0 comments:
Post a Comment