இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, March 29, 2012

ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்வு

புதுடில்லி:நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, சென்ற பிப்ரவரி மாதத்தில், 128 கோடி டாலராக (6,400 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 1.5 சதவீதம் அதிகம் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்திய ஆயத்த ஆடை இறக்குமதியில், 80 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இதன் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது.
தற்போது, பொருளாதார மந்த நிலையிலிருந்து அமெரிக்கா, இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால், வரும் மாதங்களில், இந்தியாவிலிருந்து, ஆயத்த ஆடைகளை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாரம்பரிய சந்தைகளில் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையிலும், புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள ஜப்பான், மேற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்றவற்றுக்கு ஆயத்த ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,210 கோடி டாலராக (60 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 19 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites