இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, March 1, 2012

குஷன் தயாரிப்பது எப்படி

எல்லார் வீடுகளிலும் சின்ன சோபாவோ நாற்காலியோ இருக்கும். சாதாரண மர சோபாவும் நாற்காலியுமே சிலரது வீடுகளில் பேரழகாகத் தெரியும். காரணம், அவற்றை அலங்கரிக்கும் குஷன்!
பணக்காரங்க அதுக்கெல்லாம் செலவு பண்ணலாம். எல்லாராலயும் முடியுமா?’ என்று கேள்வி எழுப்பு கிறவர்களுக்கு, ‘முடியும்என்று சொல்வதுடன், குஷன் தயாரிப்பையே ஒரு சிறுதொழிலாகவும் செய்யலாம் என்கிறார் மதுரையைச் சேர்ந்த ரைஹானா.

‘‘
ஒன்பதாவது வரைக்கும்தான் படிப்பு. கல்யாண வாழ்க்கை சரியா அமையலை. விவாகரத்தாயிடுச்சு. மூணு பிள்ளைங்களை வளர்த்து ஆளாக்க வேண்டிய நிர்ப்பந்தம். சின்ன வயசுல பொழுதுபோக்கா கத்துக்கிட்ட தையல், சமையல்னு பலதும் கை கொடுத்தது. வீட்டுக்குப் பக்கத்துல ஒரு நார்த் இந்தியன் குடும்பம் இருந்தாங்க. அவங்ககிட்டருந்து குஷன் தைக்கிறதைக் கத்துக்கிட்டேன். வீட்ல செய்து வச்சிருந்ததைப் பார்த்துட்டு, நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சாங்க. சின்ன அளவுல பண்ண ஆரம்பிச்சது, இன்னிக்கு மொத்தமா ஆர்டர் எடுத்துப் பண்ற அளவுக்கு என்னை வளர்த்திருக்கு’’ என்கிற ரைஹானா, இந்தத் தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கான வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை?முதலீடு?
‘‘
வெல்வெட் துணி, நைலான் பஞ்சு, ஊசி மற்றும் நூல். போட்டோல உள்ளது போல ஒரு குஷன் செய்ய ஒன்றரை கிலோ பஞ்சு தேவை. அதுக்கான செலவு 30 ரூபாய். வெல்வெட் துணி 1 மீட்டர் 60 & 70 ரூபாய்க்குக் கிடைக்கும். நூல் செலவு தனி. ஒரு குஷன் தயாரிக்க மொத்தமே 180 ரூபாய்தான் செலவாகும். அடிப்படையைக் கத்துக்கிட்டா, அவங்கவங்க கற்பனைக்கேத்தபடி வட்டமாகவோ, சதுரமாகவோ, நீள் உருளை ஷேப்பிலோ எப்படி வேணாலும் தைக்கலாம்.
’’பயிற்சி?
‘‘
ஒரே நாள்ல கத்துக்கலாம். 300 ரூபாய் கட்டணம். பயிற்சில கத்துக்கிற குஷனை அவங்களே கொண்டு போகலாம்...
’’விற்பனை வாய்ப்பு... லாபம்?
‘‘
மெத்தை, தலையணை விற்கற கடைகள்ல பேசி ஆர்டர் பிடிக்கலாம். வெளில விற்க முடியாதவங்களுக்கு நாங்களே ஆர்டர் கொடுத்து தைக்கச் சொல்லியும் விற்பனைக்கு எடுத்துக்கறோம். ஒரு குஷனை 250 ரூபாய் வரைக்கும் விற்கலாம். ஒரு நாளைக்கு 4 குஷன் செய்தாலே, 300 ரூபாய் லாபம் நிச்சயம்.
’’
Thnxs:http://youtube.com/

Thnxs:by mail.-
ரைஹானா
*******************************************************************************
ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என ஒதுக்கப்பட்ட சில தொழில்களில் மெத்தை தைப்பதும் ஒன்று. தையல் என்பது பெண்களின் வேலையானாலும், மெத்தை மாதிரியான கடினமான தையல் வேலைப்பாடுகள், ஆண்கள் வசமே இருந்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வராணி

மற்றும் ஸ்டெர்லிங் மகளிர் குழுவினர் அந்த எண்ணத்தை மாற்றியுள்ளனர். ஒரே ஒரு தையல் மெஷின் கொண்டு ஆரம்பித்த அவர்களது தொழில், இன்று ஆயிரங்களில் புரளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

‘‘எட்டாவதுக்கு மேல படிக்கலை. மகளிர் சுய உதவிக் குழுல சேர்ந்த பிறகு ஏதாவது தொழில் கத்துக்கணும்னு தோணவே, இதைக் கத்துக்கிட்டேன்.

குழுவுல உள்ள இன்னும் சில பெண்களோட சேர்ந்து, அதையே பிசினஸா செய்ய ஆரம்பிச்சோம். 5 பேரும் சேர்ந்து ஒரு கடை வச்சோம். 1 மெஷின் 7

மெஷின் ஆச்சு. இப்ப ஆஸ்பத்திரி, கடைகள், வீடுகளுக்கு சப்ளை பண்ண ஆரம்பிச்சிருக்கோம்’’ என்கிற செல்வராணி, மெத்தை தைக்கக்

கற்றுக்கொண்டு, தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘பவர் மெஷின் இருந்தாதான் மெத்தை, தலையணை தைக்க முடியும். பஞ்சு, நூல், துணினு எல்லாம் சேர்த்து 50 ஆயிரம் முதலீடு வேணும்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?

‘‘சிங்கிள் காட், டபுள் காட்டுக்கான மெத்தை, வேற வேற அளவுகள் மற்றும் வடிவங்கள்ல தலையணைன்னு 10க்கும் அதிக மாடல்கள் இருக்கு.

கடைகள்ல வாங்கற மெத்தை, தலையணைகள்ல செயற்கை பஞ்சு வச்சுத் தருவாங்க. நாங்க தைக்கிறதுல இலவம் பஞ்சுதான் ஸ்பெஷல்.

ராஜபாளையத்துலேர்ந்து பஞ்சும், ஈரோட்டுலேர்ந்து மெத்தைக்கான துணியும் வாங்கறோம். 10 வருஷம் வரைக்கும் உழைக்கிற தரத்துக்கு
உத்தரவாதம்.’’

ஒரு நாளைக்கு எத்தனை?

‘‘ஒரு நாளைக்கு ரெண்டு பேர் சேர்ந்து, 2 மெத்தைகள்ல பஞ்சு அடைக்கலாம். அப்புறம் அதைத் தைக்கிறது மாதிரியான மத்த வேலைகள் செய்யணும்.’’

லாபம்?

‘‘6 இன்ச் உயரம் கொண்ட டபுள் காட் மெத்தை தைக்க அடக்க விலை 2,100 ஆகும். 500 ரூபாய் லாபம் வச்சு கடைகளுக்கு கொடுப்போம்.

கடைகள்ல அதையே ரெண்டு மடங்கு விலைக்கு வித்துடுவாங்க.’’

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites