இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, March 29, 2012

நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் ரூ.1,000 கோடிக்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு

கொச்சி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக கயிறு வாரியம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகள்: நம் நாட்டிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கயிறு மற்றும் கயிறு பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. இவ்வகையில், கடந்த 2010-11ம் நிதியாண்டில், 2 லட்சத்து 94 ஆயிரத்து 508 டன் கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியாகி உள்ளது. இதன் மதிப்பு, 804 கோடி ரூபாயாகும். இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, அளவின் அடிப்படையில், 47.31 சதவீதம் மற்றும் மதிப்பின் அடிப்படையில், 25.64 சதவீதம் அதிகமாகும்.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இதன் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட அளவின் அடிப்படையில், 20.13 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில், 8.82 சதவீதமும் அதிகரித்துள்ளது.ரூபாய்மதிப்பு: கடந்த ஒரு சில வாரங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவடைந்து வரு கிறது. இது, ஏற்றுமதியாளர் களுக்கு சாதகமான அம்சம் என்றாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய இறக்குமதி யாளர்களுக்கு, அதிக செலவினத்தை ஏற்படுத்துவதால், கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆலப்புழாவைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்தார்.கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப் பட்ட, மொத்த கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்களிப்பு முறையே, 25.46 சதவீதம் மற்றும் 15.82 சதவீதம் என்றளவில் இருந்தது. இதே ஆண்டில், சீனாவிற்கான ஏற்றுமதி முறையே, 26.26 சதவீதம் மற்றும் 15.40 சதவீதம் என்றஅளவில் இருந்தது.போட்டி: முன்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், இந்தியா விலிருந்து அதிகளவில் கயிறு மற்றும் கயிறு பொருட் களை வாங்கி வந்தன. ஆனால், தற்போது சீனாவின் போட்டியால், இந்நாடுகள் நம் நாட்டிலிருந்து, மேற்கொள்ளும் இறக்குமதி சற்று குறைந்துள்ளது என, கயிறு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.சீனா, சிறப்பு வகை புற்களிலிருந்து, தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் போன்ற வற்றை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து வருகிறது. இது, இந்திய கயிறு பொருட்களின் விலையை விட குறைவாக உள்ளது. இதனால், நம் நாட்டின் ஏற்றுமதியாளர்கள், சீனாவின் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.நடப்பு நிதியாண்டில், கயிறு வகைகள், தேங்காய் நார், தேங்காய் நூலிழைகள், மண் அரிமானத்தை தடுக்க கூடிய பெரிய விரிப்புகள் போன்றவை மிக அதிகளவில் ஏற்றுமதியாகிறது. இருப்பினும், கைத்தறி மிதியடிகள், விசைத்தறி தரை விரிப் புகள், ரப்பரில் பதிக்கப்பட்ட தேங்காய் நார் மிதியடிகள் போன்றவற்றின் ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப் படையில் குறைந்து போயுள்ளது.மூலப்பொருட்கள்: இந்நிலையில், தேங்காய் நார், கயிறு போன்றவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பால், உள்நாட்டு நிறுவனங் களுக்கு போதிய அளவிற்கு மூலப் பொருட்கள் கிடைக்காத நிலையும் உள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், கயிறு ஏற்றுமதி,கடந்த ஆண்டின்,இதே காலாண்டை விட அளவின் அடிப்படையில்,470 சதவீதம் என்றளவிலும், மதிப்பின் அடிப்படையில், 756 சதவீத அளவிற்கும் ஏற்றுமதியாகி உள்ளது. உள் நாட்டில், கேரளா மற்றும் தமி ழகத்தில் இருந்து தான் மிக அதிகளவில் கயிறு மற்றும் கயிறு பொருட்கள் ஏற்றுமதியாகிறது என, கயிறு வாரியம் மேலும் தெரிவித் துள்ளது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites