வளரும் குஞ்சுகள் பராமரிப்பு
6 வார வயதிற்குப் பின் செயற்கை வெப்பமும் வெப்பக்கூடுகளையும் நீக்கி விடலாம். பயன்படாத குஞ்சுகளை நீக்கி விடவேண்டும். ஒரு குஞ்சுக்கு 0.095-0.19 மீ 2 என்ற அளவு இடவசதி இருக்கவேண்டும். 8 வார வயதில் இருந்து வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கவேண்டும். கலப்புத் தீவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய (பொருட்கள்) தீவனங்களாவன.
தீவனப் பொருட்கள் | அளவு (சதவிகிதம்) |
மஞ்சள் சோளம் | 43 |
கடலைப்புண்ணாக்கு | 8 |
எள்ளுப் புண்ணாக்கு | 5 |
மீன் துகள் உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன் | 6 |
அரிசி (பாலிஸ் செய்யப்பட்டது) | 16 |
கோதுமைத் தவிடு | 20 |
உப்பு | 0.25 |
தாதுக் கலவை | 1.75 |
மொத்தம் | 100.00 |
புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு
- குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
- குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
- கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
- எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
- வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
- ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
- குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
- குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
- ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
- சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
- சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
- குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
- ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
- குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
- குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
- கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
- மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
- ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.
விலங்குப் புரதங்கள்
1.இரத்தத் துகள்
இதில் 80 சதம் புரதமும், லைசின், அர்ஜினைன், மெத்தியோனைன், சிஸ்டைன் மற்றும் லியூசின் போன்ற அமினோ அமிலங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஐசோலியூசின் மட்டுமே இருப்பதில்லை. இதன் சுவைக் குறைவாக இருக்கும். 2-3 சதவீதம் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.
2.கல்லீரல் கழிவுத் துகள்
2.கல்லீரல் கழிவுத் துகள்
லைசின், மெத்தியோனைன், சிஸ்டைன், டிரைப்டோபன் மற்றும் அதிக அளவு ரிபோஃபிளேவின், கோலைன் மற்றும் விட்டமின் பி12.
3.பட்டுப்பூச்சியின் கூட்டுப்புழுக் கழிவு
3.பட்டுப்பூச்சியின் கூட்டுப்புழுக் கழிவு
எண்ணெய் நீக்கப்பட்ட கூட்டுப்புழுவின் கழிவில் புரதம் மிகுந்துள்ளது. அதிக நார்ச்சத்து உள்ளதாலும் இதன் புரதம் செரிப்பதற்குக் கடினமாக இருப்பதாலும் இதன் பயன்பாடு கோழித்தீவனத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
4.அடைகாப்பகத்தின் கழிவுகள்
4.அடைகாப்பகத்தின் கழிவுகள்
குஞ்சு பொரிக்காத முட்டைகள், கொல்லப்பட்ட குஞ்சுகள், இறந்த சினைக்குஞ்சுகள், இளம் கருக்கள் போன்றவற்றைச் சேகரித்து வேக வைத்து, அரைத்து கொழுப்பு நீக்கியோ அல்லது நீக்காமலோ கோழிகளுக்கு அளிக்கலாம். பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்து 25-34 சதவிகிதம் பண்படா புரதத்தைப் பெற்றிருக்கும்.
5.இறகுத் துகள்கள்
5.இறகுத் துகள்கள்
80-85 சதவிகிதம் புரதம் அடங்கியுள்ளதால் இதைத் தீவனத்தில் 5 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.
6.கோழிப்பண்ணைக் கழிவுகள்
6.கோழிப்பண்ணைக் கழிவுகள்
கோழி பதப்படுத்தும் தொழிற்சாலைக் கழிவுகளின் 15 சதவிகிதம சாம்பல் சத்து இருக்கும். இதில் புரதம் 55-60 சதமும் கொழுப்பு 12 சதமும் இருக்கும்.
7.இறைச்சி மற்றும் எலும்புத் துகள்
7.இறைச்சி மற்றும் எலும்புத் துகள்
இதில் அதிகப் புரதம் மட்டுமன்றி கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் அதிகம் அடங்கியுள்ளன. துகள்களில் அடங்கியுள்ள ஜெலாட்டின் அளவைப் பொறுத்து அதன் ஊட்டச்சத்துக் கலவை மாறுபடும். 5-10 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம்.
காய்கறிப் புரதங்கள்
1.கடுகுப் புண்ணாக்கு
இரு கடலைப் புண்ணாக்கைக் காட்டிலும் புரதம் மற்றும் லைசின் அளவு மிகுந்துள்ளது. எனினும் கிளைக்கோசைட்ஸ் மற்றும் காய்ட்டிரோஜன் உள்ளதால் இதைப் பதப்படுத்தினாலும் 5 சதவிகிதம் பயன்படுத்தக்கூடாது.
2.சோயாபீன் தூள்
சோயாபீனில் 35-40 சதவிகிதம் புரதமும், 18-21 சதவிகிதம் கொழுப்பும் உள்ளது. எண்ணெய் எடுக்க பல முறைகள் உள்ளன. சோயாபீன் எண்ணெய் பிழிந்து எடுக்கும் போது கிடைக்கும் தூளில் 42 சதவிகிதம் புரதமும் 5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. சரியான சூடுபடுத்தும் முறை மூலம் இதன் புரதத்தன்மையை உயர்த்தலாம். சோயாபீனானது உயர் இரக புரதத்தைக் கொண்டுள்ளது. இதிலிருந்து லைசின் அர்ஜினைன், கிளைசின், டிரைப்டோபன், சிஸ்டைன் போன்ற அமினோ அமிலங்களைப் பெறலாம்.
3.எள்துகள்
3.எள்துகள்
இதில் அர்ஜினைன், மெத்தியோனைன் மற்றும் டிரைப்டோபன் போன்ற அமினோ அமிலங்களும் புரதமும் அதிக அளவில் உள்ளது.
4.கொத்தவரை
4.கொத்தவரை
கொத்தவரையிலிருந்து தாவரக் கோந்து தயாரிக்கும் போது கிடைக்கும் உபபொருளில் புரோட்டீன் மிகுதியாக உள்ளது. இதில் டிரிப்சின் தடுப்பான் இருப்பதால் சிறிதளவே பயன்படுத்தவேண்டும்.
5.சூரியகாந்தி விதைத் தூள்
5.சூரியகாந்தி விதைத் தூள்
நிலக்கடரைத் தூளை விட இதில் ஊட்டச்த்துக்கள் அதிகம். எனினும் இதன் அதிக நார்ச்சத்தால் இது கோழித்தீவனத்தில் சேர்க்கப்படுவதில்லை. சோயாபீனை விட இதில் மெத்தியோனைன் மற்றும் அர்ஜினைன் அதிகமுள்ளது. லைசின் மிகக் குறைவு. மேலும் இது பாண்டதொனிக் அமிலம் மற்றும் நியாசினுக்குச் சிறந்த ஆதாரம்.
6.செந்தூரகத்தூள்
6.செந்தூரகத்தூள்
இதுவும் நிலக்கடலைத் தூளுக்குப் பதிலாக 25 சதவிகிதம் வரை பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகமாகப் பயன்படுத்தினால் லைசின் பற்றாக்குறை ஏற்படும்.
7.ராம்டில் புண்ணாக்கு
7.ராம்டில் புண்ணாக்கு
கோழிக்குஞ்சுகளுக்கும், முட்டைக் கோழிகளுக்கும் தீவனமாக 50-100 சதவிகிதம் வரை இவை பயன்படுத்தப்படுகின்றன.
8.பருத்திப் புண்ணாக்கு
8.பருத்திப் புண்ணாக்கு
புரதம் அதிக அளவில் இருந்தாலும் லைசின் அளவு குறைவாகவே இருக்கும். 15 சதவிகிதம் வரை இப்புண்ணாக்கைப் பயன்படுத்தலாம். அதிகம் பயன்படுத்தினால் முட்டையின் மஞ்சள் கருவில் சிறு கட்டி போன்று தோன்றும்.
9.சோளம் குளூட்டன் துகள்கள்
9.சோளம் குளூட்டன் துகள்கள்
சோள மாவுத் தொழிற்சாலையின் உபபொருளான இதில் புரோட்டீன், சாந்தோஃபில் நிறைந்துள்ளது.
10.பெனிசிலியம்-மைசிலியம் கழிவுகள்
10.பெனிசிலியம்-மைசிலியம் கழிவுகள்
இது பென்சிலின் தயாரிப்பில் வெளிவரும் கழிவு ஆகும். இதில் புரதம் மற்றும் எதிர்ப்பொருள்கள் நிறைந்துள்ளதால் 5 சதம் வரை கலப்புத் தீவனத்தில் பயன்படுத்தலாம்.
11.ஆளிவிதைத் துகள்கள்
11.ஆளிவிதைத் துகள்கள்
இதில் டிரைப்டோபன் நிறைந்துள்ளது எனினும் சையனோஜெனிக் கிளைக்கோஸைடு மற்றும் ஏன்டிபைரிடாக்ஸியல் காரணிகள் நிறைந்துள்ளதால் 5 சதவிகிதம் மேல் உபயோகிக்கக்கூடாது. இதை வேக வைத்துக் கொடுப்பதால் விஷத்தன்மை குறையும்.
0 comments:
Post a Comment